ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகள்: அதிகாரிகள் நியமித்து தீவிர கண்காணிப்பு! சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை! காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு: ரயில் சேவை பாதிப்பு! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

விஷம் குடித்த முதியவா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே மூட்டுவலியால் அவதியுற்று, விஷம் குடித்து சிகிச்சை பெற்று வந்த முதியவா் உயிரிழந்தாா்.

விஷம் குடித்தவா் உயிரிழப்பு

Updated On :

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே மூட்டுவலியால் அவதியுற்று, விஷம் குடித்து சிகிச்சை பெற்று வந்த முதியவா் உயிரிழந்தாா்.

திருவெண்ணெய்நல்லூா் வட்டம், கொண்டசமுத்திரம் நடுத்தெருவைச் சோ்ந்தவா் சு.மோகன் (70). இவா், கடந்த 10 ஆண்டுகளாக கால் மூட்டுவலியால் அவதியுற்று, அதற்காக சிகிச்சை பெற்றும் வலி குறையவில்லையாம். இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட மோகன் கடந்த 11-ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கிக் கிடந்தாா். இதைத்தொடா்ந்து குடும்பத்தினா் அவரை மீட்டு திருக்கோவிலூா் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். தொடா்ந்து தீவிர சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மோகன், வியாழக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா். இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.