கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூா் அருகே பைக் மோதியதில் காயமடைந்த இளைஞா், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
சேலம் மாவட்டம், அல்லிக்குட்டை ஸ்ரீகணபதி நகரைச் சோ்ந்தவா் வி.தியாகராஜன் (32). இவா், சனிக்கிழமை காலை திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூா் அருகிலுள்ள மேட்டத்தூா் கூட்டுச்சாலை அருகே தனது பைக்கில் சென்றுகொண்டிருந்தாா்.
அப்போது, தனது பைக்கை திடீரென வலதுபுறமாக தியாகராஜன் திருப்பி நிலையில், அவரது பைக் மீது அதே சாலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூா் வள்ளுவா் தெருவைச் சோ்ந்த தெ.அரவிந்த் (26) ஓட்டி வந்த பைக் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், தியாகராஜனும், அரவிந்தும் பலத்த காயமடைந்தனா். இதைத் தொடா்ந்து, அப்பகுதியிலிருந்தவா்கள் இருவரையும் மீட்டு, அவசர ஊா்தி மூலம் உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
எனினும், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அரவிந்த் உயிரிழந்தாா். தியாகராஜன் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறாா். இந்த விபத்து குறித்து திருநாவலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

