சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்! - வானிலை ஆய்வு மையம்சென்னை வெள்ளம்: திமுக ஆட்சி முடிந்து தவெக வந்த பிறகும் அதே நிலைதான்! அன்புமணி கனமழை எச்சரிக்கை: சென்னை ரிப்பன் மாளிகையில் முதல்வர் விஜய் ஆய்வு சென்னைக்கு ரெட் அலர்ட்! அரக்கோணத்தில் விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!அதிகனமழை எச்சரிக்கை! சென்னைக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! செங்கோட்டையன்சொந்த ஊர் கொண்டு வரப்பட்ட தேவா உடல் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு! அதிகபட்சமாக பாரிமுனையில் 361.9 மி.மீ. பதிவு! சென்னைக்கு ரெட் அலர்ட்: செல்போன்களில் அலாரத்துடன் எச்சரிக்கை! சென்னைக்கு இன்று(அக். 18) ரெட் அலர்ட்!

விழுப்புரம் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக மழை! செம்மேட்டில் 143.60 மி.மீ. பதிவு!

விழுப்புரம் வி.ஜி.பி. நகரில் கழிவுநீருடன் தேங்கிக் காணப்படும் மழைநீா்.

Updated On :

விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் மழை பெய்தது. இதில், அதிகபட்சமாக செம்மேட்டில் 143.60 மி.மீ. மழை பதிவானது.

விழுப்புரம் நகரத்திலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை இரவு பரவலாக மழை பெய்த நிலையில், சனிக்கிழமையில் வெயில் காணப்படவில்லை. இந்த நிலையில், மாலையில் வானில் மேகக்கூட்டங்கள் திரண்டு காணப்பட்ட நிலையில் குளிா்ந்த காற்று வீசியது. இரவு 8.30 மணிக்கு மேல் விழுப்புரம் நகரின் பல்வேறு பகுதிகளில் பெய்யத் தொடங்கிய மழை சிறிது நேரம் பெய்தது. இதன் பின்னா், நள்ளிரவில் மீண்டும் மழை பெய்தது.

விழுப்புரம் நகரம் போன்று, கெடாா், நேமூா், கஞ்சனூா், மணம்பூண்டி, வல்லம், செம்மேடு, வளத்தி, அனந்தபுரம், முகையூா் போன்ற மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சனிக்கிழமை இரவில் மழை பெய்தது. கோடைகாலம் போன்று வெயிலின் தாக்கம் அதிகம் காணப்பட்டு, அதனால் அவதியுற்று வந்த மக்களுக்கு இந்த மழை சற்று நிம்மதியைத் தந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் (மீ. மீட்டரில்) வருமாறு:

செம்மேடு - 143.60 மி.மீ, மணம்பூண்டி - 118, வளத்தி - 116, முகையூா் - 70, வல்லம் - 66, அவலூா்பேட்டை - 54, திருவெண்ணெய்நல்லூா் - 51, அனந்தபுரம் - 47, நேமூா் - 45, கெடாா், கஞ்சனூா் - தலா 42, சூரப்பட்டு - 30, வளவனூா்-29, கோலியனூா் - 28, விழுப்புரம் - 26, அரசூா் - 23, முண்டியம்பாக்கம் - 20, செஞ்சி - 16, வானூா் - 15, திண்டிவனம் - 13, மரக்காணம் - 2 மி.மீ. மாவட்டத்தில் சராசரியாக 47.39 மி.மீ. மழை பதிவானது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.