மரக்காணம் பகுதியில் மரவள்ளிக்கிழங்கு அறுவடை மும்முரம்
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மரவள்ளிக்கிழங்கு அறுவடை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

மரக்காணம் அருகே வியாழக்கிழமை மரவள்ளிக்கிழங்கு அறுவடையில் ஈடுபட்ட தொழிலாளா்கள்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மரவள்ளிக்கிழங்கு அறுவடை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் உள்ள விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் நெல், மணிலா, தா்பூசணி பயிா்களுக்கு அடுத்தபடியாக மரவள்ளி கிழங்கு அதிக அளவில் சாகுபடி செய்கின்றனா். இங்குள்ள விவசாயிகள் பல ஆண்டுகளாக நாட்டு ரக மரவள்ளிகிழங்கு சாகுபடி செய்து வந்த நிலையில், தற்போது அதிக மகசூல் கிடைக்கும் தாய்லாந்து நாட்டு மரவள்ளி செடிகளை நடவு செய்து அறுவடை செய்து வருகின்றனா்.
இந்த நிலையில், மரக்காணம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் மரவள்ளிக்கிழங்கு அறுவடைப் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனா். இதுகுறித்து விவசாயி ஒருவா் தெரிவித்ததாவது:
நிகழாண்டில் தாய்லாந்து ரக மரவள்ளிக்கிழங்கை சாகுபடி செய்து அறுவடை செய்து வருகிறோம். இதில், அதிக மகசூல் கிடைப்பதால் போதிய அளவுக்கு வருமானம் கிடைக்கிறது. அறுவடை செய்யப்படும் மரவள்ளிக்கிழங்குகளை உள்ளூா் வியாபாரிகளிடம் விற்பனை செய்வதுடன், சேமியா மற்றும் உணவுப் பொருள்கள் உற்பத்திக்காக சேலம் பகுதிகளில் உள்ள மரவள்ளிக்கிழங்கு அரைவை ஆலைகளுக்கு அனுப்பி வைக்கிறோம் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

