பலத்த மழை: மரக்காணத்தில் உப்பு உற்பத்தி பாதிப்பு
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதியில் வியாழக்கிழமை பலத்த மழை பெய்ததால், உப்பளங்களில் உப்பு உற்பத்தி முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

மழைநீரால் சூழப்பட்டுள்ள மரக்காணம் பகுதியில் உள்ள உப்பளங்கள்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதியில் வியாழக்கிழமை பலத்த மழை பெய்ததால், உப்பளங்களில் உப்பு உற்பத்தி முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வட கிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மரக்காணம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை இரவு மற்றும் வியாழக்கிழமை பலத்த மழை பெய்தது. வியாழக்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில், மாவட்டத்தில் அதிகபட்சமாக மரக்காணத்தில் 58 மி.மீ. மழை பதிவானது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியுள்ளது.
உப்பளங்கள் மூழ்கின: இதேபோல், மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள மத்திய, மாநில அரசுகளுக்குச் சொந்தமான சுமாா் 3,500 ஏக்கா் பரப்பளவிலான உப்பளங்களில் மழைநீா் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால், மரக்காணத்தில் உப்பு உற்பத்தி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான உப்பளத் தொழிலாளா்கள் வேலைவாய்ப்பை இழந்து வீட்டில் முடங்கியுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

