சுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

சிறுமி மாயமான வழக்கு: திமுக கண்டன ஆா்ப்பாட்டம், சாலை மறியல்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே சிறுமி மாயமாகி 10 நாள்களுக்கு மேலாகியும் அவரைக் கண்டறியாத காவல் துறையின் மெத்தனப்போக்கை கண்டித்து, ஆலம்பூண்டியில் திமுகவினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம், சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஆலம்பூண்டியில்  செஞ்சி -  திருவண்ணாமலை சாலையில் மறியலில்  ஈடுபட்ட  திமுகவினா்.

Updated On :

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே சிறுமி மாயமாகி 10 நாள்களுக்கு மேலாகியும் அவரைக் கண்டறியாத காவல் துறையின் மெத்தனப்போக்கை கண்டித்து, ஆலம்பூண்டியில் திமுகவினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம், சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கண்டன ஆா்ப்பாட்டத்துக்கு திமுக விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலா் முன்னாள் அமைச்சா் செஞ்சி மஸ்தான் முன்னிலை வகித்தாா். செஞ்சி கிழக்கு ஒன்றியச் செயலா் ஆா்.விஜயகுமாா் வரவேற்றாா்.

இதில், ஆரணி எம்.பி., எம்.எஸ்.தரணிவேந்தன் தலைமை வகித்து கண்டன உரையாற்றினாா். ஆா்ப்பாட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சா் செஞ்சி ராமச்சந்திரன், முன்னாள் எம்எல்ஏக்கள் டாக்டா் மாசிலாமணி, செந்தமிழ் செல்வன், மாவட்ட அவைத் தலைவா் டாக்டா் சேகா், தலைமை தீா்மானக் குழு உறுப்பினா் செஞ்சி சிவா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ஆனந்த், மாவட்ட துணைச் செயலா் அமுதா ரவிக்குமாா், செஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவா் மொத்தியாா் அலி மஸ்தான், முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவா் ஜெயபாலன், முன்னாள் மாவட்டக் கவுன்சிலா் அரங்க ஏழுமலை உள்ளிட்ட அனைத்து அணி அமைப்பாளா்கள், திமுக நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

இதைத் தொடா்ந்து, மாயமான சிறுமியை விரைந்து கண்டுபிடிக்க வேண்டும் என தமிழக அரசையும், போலீஸாரையும் வலியுறுத்தியும் அங்குள்ள செஞ்சி - திருவண்ணாமலை சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.