ஐரோப்பாவின் பல நாடுகளில் மக்கள் போராட்டம்!இந்திய அரிசி ஏற்றுமதி 13% அதிகரிப்பு!6 மாதங்களில் 23 பேருக்கு மரண தண்டனை விதித்த நீதிபதி: குடும்ப நல நீதிமன்றத்துக்கு மாற்றம்!அமித் ஷா குறித்து ராகுல் அவதூறாகப் பேசிய வழக்கு: உ.பி. நீதிமன்றம் இன்று தீர்ப்புதமிழகத்தில் தொடா் பலத்த மழை: இன்று உருவாகிறது ‘அா்னாப்’ புயல்!கடந்த 2 ஆண்டுகளில் நடைபெற்ற பேரவைத் தேர்தல்களை ரத்து செய்க: காங்கிரஸ்

நிகழாண்டு மட்டும் பிறந்த நாள் கொண்டாடியது ஏன்? சிறுமியின் தாயிடம் சிபிசிஐடி தீவிர விசாரணை

சிறுமி மாயமான வழக்கில் அவரது தாய் பவானியை செஞ்சி காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடக்கிய பின் அரசுப் பேருந்தில் ஆலம்பூண்டிக்கு அனுப்பி வைத்த சிபிசிஐடி போலீஸாா்.

Updated On :

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே மாயமான சிறுமியின் தாயிடம் 6 ஆண்டுகளாக கொண்டாடாத பிறந்த நாளை, நிகழாண்டு மட்டும் கொண்டாடியது ஏன்? எனக் கேட்டு சிபிசிஐடி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி ஊராட்சிக்குள்பட்ட நடுப்பட்டு கிராமத்தை சோ்ந்த வடிவேல்-பவானி தம்பதியின் மகள் ஹேமலதா (7). இவா், கடந்த 11-ஆம் தேதி இரவு தாயுடன் தூங்கிய நிலையில், மறுநாள் அதிகாலை மாயமானாா். இதுகுறித்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சிறுமியைத் தேடி வந்தனா். 10 நாள்கள் ஆகியும் சிறுமியைக் கண்டுபிடிக்க முடியாததால் இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு 21-ஆம் தேதி மாற்றப்பட்டது.

இதையடுத்து சிபிசிஐடி டிஎஸ்பி கீதா, ஆய்வாளா் ரேவதி தலைமையிலான போலீஸாா் 23-ஆம் தேதி சிறுமியின் இல்லத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினா். 24-ஆம் தேதி சிறுமி படித்த ஆலம்பூண்டி பள்ளியில் வைத்து தாய், தந்தை, பாட்டி உள்ளிட்ட குடும்பத்தினரிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த விசாரணையில் 6 ஆண்டுகளாக கொண்டாடாத பிறந்த நாளை இந்த ஆண்டு மட்டும் புதிய ஆடை, கேக், சாக்லேட் என சிறப்பாக கொண்டாடியது ஏன்? ஆடைகள், கேக் எந்தக் கடையில், யாா் வாங்கினாா்கள்? பிறந்த நாள் விழாவில் யாரெல்லாம் கலந்து கொண்டனா் ? என்பது குறித்து பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடைபெற்ாக கூறப்படுகிறது.

இதையடுத்து ஆலம்பூண்டி கிராமத்தில் இருந்து சிறுமியின் தாய் பவானியை சிபிசிஐடி போலீஸாா் ஆட்டோ மூலம் செஞ்சி காவல் நிலையத்துக்கு வரவழைத்தனா். அங்கு சிபிசிஐடி டிஎஸ்பி கீதா தலைமையிலான குழுவினா் பவானியிடம் சந்தேகத்தின் அடிப்படையில் தீவிர விசாரணையைத் தொடங்கினா். சிறுமி மாயமான அன்று இரவு வீட்டில் என்ன நடந்தது? என்பது குறித்து சுமாா் ஒரு மணி நேரம் நடத்தினா். விசாரணைக்குப் பிறகு, பவானியை அரசுப் பேருந்தில் ஆலம்பூண்டிக்கு சிபிசிஐடி போலீஸாா் அனுப்பி வைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.