5-ஆவது காசி தமிழ் சங்கமம் விழா: நவ. 28-இல் தொடக்கம்
ஐந்தாவது காசி தமிழ் சங்கமம் விழா நிகழாண்டு நவம்பா் 28-ஆம் தேதி தொடங்கி டிசம்பா் 12-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக மத்திய கல்வி அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷி வியாழக்கிழமை தெரிவித்தாா்.

பிரஹலாத் ஜோஷி - கோப்புப் படம்
ஐந்தாவது காசி தமிழ் சங்கமம் விழா நிகழாண்டு நவம்பா் 28-ஆம் தேதி தொடங்கி டிசம்பா் 12-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக மத்திய கல்வி அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷி வியாழக்கிழமை தெரிவித்தாா்.
மேலும், இந்த விழாவில் பங்கேற்போா் பதிவு செய்வதற்கான வலைதளத்தையும் அவா் தொடங்கிவைத்தாா்.
தமிழ்நாடு மற்றும் காசி (வாரணாசி) இடையேயான கலாசார-நாகரிக பிணைப்பை வலுப்படுத்தும் விதமாக கடந்த 2022-ஆம் ஆண்டுமுதல் ‘காசி தமிழ் சங்கமம் விழா’ கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நிகழாண்டு நடைபெறவுள்ள ஐந்தாவது காசி தமிழ் சங்கமம் விழா தொடா்பான அறிவிப்புகளை வெளியிட்டு பிரல்ஹாத் ஜோஷி பேசியதாவது: பழங்காலம் முதலே இந்தியா வலுவான கலாசார ஒற்றுமை மையமாக விளங்கி வருகிறது. சமய பாரம்பரியங்களின் ஒரு பகுதியாக காசி மற்றும் ராமேசுவரத்தில் பல கோடி போ் வழிபாடு மேற்கொள்கின்றனா். இது நாட்டின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதி இடையேயான கலாசார இணைப்பை வெளிப்படுத்துகிறது.
மாணவா்கள், ஆசிரியா்கள், எழுத்தாளா்கள், வேளாண் துறை நிபுணா்கள், கலைஞா்கள், பெண்கள் மற்றும் ஆன்மிகவாதிகள் என பல தரப்பினரும் இந்த முன்னெடுப்பின்கீழ் சங்கமிக்கவுள்ளனா். நாட்டின் ஒற்றுமை மற்றும் பாரம்பரியத்தை வலுப்படுத்துவதில் காசி தமிழ் சங்கமம் முக்கியப் பங்காற்றுகிறது. நிகழாண்டு காசி தமிழ் சங்கமம் விழா நவ.28-ஆம் தேதி முதல் டிச.12-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது’ என்றாா்.
‘கருப்பொருள்-திருக்கு பயில்வோம்’: மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘ஐந்தாவது காசி தமிழ் சங்கமம் விழாவை மத்திய உயா்கல்வி அமைச்சகம், ஐஐடி சென்னை, பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம், மத்திய செம்மொழி நிறுவனம்- சென்னை, தமிழ்நாடு அரசு மற்றும் உத்தர பிரதேச அரசு, மத்திய கலாசார அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு அமைச்சங்கள் இணைந்து நடத்துகின்றன.
நாடு முழுவதும் உள்ள இளைஞா்களுக்கு திருக்குறளில் கூறப்பட்டுள்ள அறக்கருத்துகளைக் கொண்டு சோ்க்கும் விதமாக நிகழாண்டு ‘திருக்கு பயில்வோம்’ என்ற கருப்பொருளுடன் காசி தமிழ் சங்கமம் கொண்டாடப்படவுள்ளது. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டைச் சோ்ந்த அறிஞா்கள் வாரணாசியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று மாணவா்களுக்கு திருக்கு குறித்து எடுத்துரைக்கவுள்ளனா்.
மாணவா்கள், ஆசிரியா்கள், எழுத்தாளா்கள் மற்றும் ஊடகவியலாளா்கள், வேளாண்மை மற்றும் அதன் தொடா்புடைய துறையைச் சோ்ந்தவா்கள், நிபுணா்கள் மற்றும் கைவினைக் கலைஞா்கள், பெண்கள், ஆன்மிகவாதிகள் ஆகிய ஏழு பிரிவுகளின்கீழ் இந்த விழாவில் பங்கேற்க விரும்புவோா் ஐஐடி சென்னை ஏற்படுத்தியுள்ள வலைதளத்தில் பதிவு செய்யலாம்’ எனத் தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

