திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றும் வரை முருகன் கோயில்களில் வெள்ளிதோறும் விளக்கு ஏற்ற பாஜகவினருக்கு நயினார் நாகேந்திரன் கோரிக்கை!அமெரிக்காவின் முதல் முஸ்லீம் செனட்டர் அப்துலை சந்திக்கும் டிரம்ப்!திருப்பரங்குன்றம் தூண் தீப விவகாரத்தில் எந்தக் கருத்தும் கூறவில்லை - ஸ்தானீக பட்டர்கள்!காளையின் ஆதிக்கம் எதிரொலி: சென்செக்ஸ் 1,502 புள்ளிகள் உயர்வு! கணிசமான ஏற்றம் கண்ட நிஃப்டி!!8 மாத உச்சத்தில் இந்திய ரூபாய்!கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதாவாரா? வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்!தவெக அரசுக்கு கவுன்ட்டவுன்; விளைவுகளை விஜய் சந்தித்தே தீருவார்! நயினார் நாகேந்திரன்

நாளை மறுதினம் தொடங்குகிறது காசி தமிழ் சங்கமம்: மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி தகவல்

கலாசாரம் மற்றும் கல்விப் பரிமாற்றத் திட்டமான காசி தமிழ் சங்கமத்தின் ஐந்தாவது பதிப்பு (கேடிஎஸ் 5.0), "திருக்குறள் பயில்வோம்' என்ற கருப்பொருளில் நவ.28}ஆம் தேதி தொடங்கவுள்ளதாக மத்திய கல்வித் துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி புதன்கிழமை தெரிவித்தார்.

மத்திய அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷி - கோப்புப் படம்

Updated On :

நமது சிறப்பு நிருபர்

கலாசாரம் மற்றும் கல்விப் பரிமாற்றத் திட்டமான காசி தமிழ் சங்கமத்தின் ஐந்தாவது பதிப்பு (கேடிஎஸ் 5.0), "திருக்குறள் பயில்வோம்' என்ற கருப்பொருளில் நவ.28}ஆம் தேதி தொடங்கவுள்ளதாக மத்திய கல்வித் துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி புதன்கிழமை தெரிவித்தார்.

இது தொடர்பாக தில்லியில் தனது அமைச்சகத்தில் அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: பழங்காலம் முதல் இன்றுவரை இந்தியா எப்போதும் ஒன்றாகவே இருந்து வருகிறது. கலாசார ரீதியாக இந்தியா எப்போதும் ஒற்றுமையுடன் உள்ளது. தெற்கே தமிழ்நாட்டுக்கும் வடக்கே காசிக்கும் இடையிலான நெருக்கமான வரலாற்று தொடர்புகளைக் கருத்தில் கொண்டு, "ஒரே பாரதம் உன்னத பாரதம்' என்ற தாரக மந்திரத்தின் கீழ் பிரதமர் நரேந்திர மோடி 2022-ஆம் ஆண்டில் காசி தமிழ் சங்கமம் என்ற திட்டத்தை உருவாக்கினார்.

இந்த வரலாற்றுத் தொடர்புகளை இளைய தலைமுறையினருக்கு நினைவூட்டவும், இந்தியாவின் கலாசார ஒற்றுமையை மீண்டும் உறுதிப்படுத்தவும் இத்திட்டம் தொடங்கப்பட்டது. இதுவரை நான்கு பதிப்புகள் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளன. ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டது. ஐந்தாவது பதிப்பின் கருப்பொருள் "திருக்குறள் பயில்வோம்' என்பதாகும்.

திருவள்ளுவர் இயற்றிய ஈரடி குறட்பாக்கள் ஆழமான கருத்துகளைக் கொண்டவை. கேடிஎஸ் ஐந்தாவது பதிப்பு திருக்குறள் படிப்பதை வட மாநிலத்தவர்களிடையே ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தும்.

வரும் டிச.12-ஆம் தேதிவரை காசி தமிழ் சங்கமம் நிகழ்வு நடைபெறவுள்ளது.முன்னதாக, நடைபெற்ற நான்காவது பதிப்பு "தமிழ் கற்கலாம்' என்ற கருப்பொருளிலும், மூன்றாவது பதிப்பு அகத்திய முனிவரின் பங்களிப்பை மையப்படுத்தியும் நடைபெற்றன. இரண்டாவது பதிப்பில் நேரடி மொழிபெயர்ப்பு வசதியும், முதல் பதிப்பில் எட்டு நாள்கள் பாரம்பரிய இடங்களைப் பார்வையிடும் நிகழ்வும் இடம்பெற்றிருந்தன.

இந்த முறை, தமிழ்நாட்டிலிருந்து 1,400 பிரதிநிதிகள் தலா 200 பேர் கொண்ட ஏழு குழுக்களாக இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளனர்.

இதில் மாணவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், விவசாயிகள் மற்றும் அதனைச் சார்ந்த துறையினர், தொழில் வல்லுநர்கள், கலைஞர்கள், பெண்கள் மற்றும் ஆன்மிக அறிஞர்கள் என பல்வேறு தரப்பினரும் பங்கேற்கின்றனர் என்றார் பிரல்ஹாத் ஜோஷி.

சென்னை ஐஐடி, பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம் (பிஹெச்யு), சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (சிஐசிடி), உத்தர பிரதேச அரசு மற்றும் மத்திய கலாசாரம், ரயில்வே, பள்ளிக் கல்வி, சுற்றுலா, ஜவுளி, உணவு பதப்படுத்துதல், தகவல் மற்றும் ஒலிபரப்பு, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் ஆகிய அமைச்சகங்களுடன் இணைந்து இந்த நிகழ்வை மத்திய உயர்கல்வித் துறை அமைச்சகம் நடத்துகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.