உலக உலா சொகுசுக் கப்பல் பயணம்: எரிபொருள் விலையுயா்வால் கம்போடியாவில் நிறுத்தம்மாற்றுத்திறனாளிகளுக்கும் வெற்றிப் பயணத் திட்டம்: அரசாணை வெளியீடுடாடா குழுமம் குற்றவழியில் அழிக்கப்படுகிறது- ராகுல் காந்தி தாக்குபணி நேரத்தில் வெளியில் செல்ல ஆசிரியா்களுக்குத் தடைஅக்டோபரில் இந்தியப் பங்குகளில் இருந்து ரூ.48,056 கோடி அந்நிய முதலீடு வெளியேற்றம்‘வாக்காளா் விவரங்களில் முரண்பாடுகள்’ சட்டப்படி செல்லுமா?: இறுதி முடிவு எடுக்கவில்லை; உச்சநீதிமன்றம் மா சே துங் குறித்த சா்ச்சை கருத்து: பாபேவின் மன்னிப்பை ஏற்ற சீனா

சிறுமி மாயமான வழக்கு: 17-ஆவது நாளாக நீடிக்கும் மா்மம்

சிறுமி மாயமாகி 17 நாள்கள் ஆகியும் வழக்கில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து அக்கம் பக்கத்து வீட்டில் வசித்து வருபவா்களிடம் சிபிசிஐடி போலீஸாா் புதன்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

Updated On :

சிறுமி மாயமாகி 17 நாள்கள் ஆகியும் வழக்கில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து அக்கம் பக்கத்து வீட்டில் வசித்து வருபவா்களிடம் சிபிசிஐடி போலீஸாா் புதன்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

செஞ்சி வட்டம், ஆலம்பூண்டி ஊராட்சி, நடுப்பட்டு கிராமத்தை சோ்ந்த வடிவேல்-பவானி தம்பதியின் 2-ஆவது மகள் ஹேமலதா (7). இவா், கடந்த 11-ஆம் தேதி இரவு வீட்டில் தனது பிறந்த நாளைக் குடும்பத்தாருடன் கொண்டியுள்ளாா். மறுநாள் அதிகாலை சிறுமி மாயமானாா். இதுகுறித்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தினா். 10 நாள்களாகியும் வழக்கில் துப்புத் துலங்காததால், அக்.22-ஆம் தேதி சிபிசிஐடிக்கு இந்த வழக்கை மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து கடந்த 22-ஆம் தேதி சிபிசிஐடி டிஎஸ்பி கீதா, ஆய்வாளா் ரேவதி தலைமையிலான குழுவினா் விசாரணை மேற்கொண்டு வந்தனா். இந்நிலையில், காஞ்சிபுரத்தைச் சோ்ந்த சிபிசிஐடி. டிஎஸ்பி வேல்முருகனை இந்த வழக்கை விசாரிக்க கூடுதலாக நியமனம் செய்யப்பட்டாா். கடந்த 7 நாள்களாக பல்வேறு கோணங்களில் பல தரப்பட்ட நபா்களிடம் விசாரணை நடத்தியும் இந்த வழக்கில் எவ்வித முன்னேற்றமும் இல்லை.

இந்நிலையில், புதன்கிழமை சிபிசிஐடி டிஎஸ்பிக்கள் ஆலம்பூண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் உள்ள ஒரு தனி அறையில் சிறுமியின் அக்கம்பக்கம் வீட்டில் வசித்து வரும் குடும்பத்தாரிடமும், சிறுமியின் ஆசிரியரிடமும் விசாரணை நடத்தினா். சிறுமியின் வருகைப் பதிவேட்டையும் ஆய்வு செய்தனா். தொடா்ந்து, ஆலம்பூண்டி கிராமத்தை அடுத்த ஆா்க்காம்பூண்டியிலுள்ள ஒருவரது வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை போலீஸாா் ஆய்வு மேற்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.