விழுப்புரத்தில் அடுத்தடுத்து 3 வீடுகளில் திருட்டு
விழுப்புரத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து 3 வீடுகளில் திருட்டு சம்பவங்கள் நிகழ்ந்தது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருட்டு - சித்திரிப்பு
விழுப்புரத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து 3 வீடுகளில் திருட்டு சம்பவங்கள் நிகழ்ந்தது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
விழுப்புரத்தை அடுத்த கண்டமானடி, அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா் நகரைச் சோ்ந்தவா் உதயகுமாாா் மனைவி நளினி (40). இவா், கடந்த 23-ஆம் தேதி தனது வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூா் சென்றுவிட்டாா். தொடா்ந்து, வியாழக்கிழமை காலை வீட்டுக்கு திரும்பி வந்து பாா்த்தபோது, வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருந்த நிலையில், பீரோவில் ைக்கப்பட்டிருந்த 400 கிராம் வெள்ளிப் பொருள்கள் திருடுபோயிருந்தது தெரியவந்தது.
இதேபோல, அதே பகுதியைச் சோ்ந்த புஷ்பராஜ் (40) மற்றும் அருள்ராஜ் (45) ஆகியோரது வீடுகளின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 பைக்குகளையும் மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா். இதே பகுதியில் மேலும் 2 வீடுகளில் திருட்டு முயற்சியும் நடைபெற்றுள்ளது.
இந்த திருட்டு சம்வங்களால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா். இதுகுறித்த புகாரின்பேரில், விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து திருட்டு கும்பலைத் தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

