நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

புதை சாக்கடைத் திட்ட சீரமைப்புப் பணி: மண்ணில் புதைந்த தொழிலாளி மீட்பு

விழுப்புரத்தில் புதை சாக்கடைத் திட்டத்துக்கான குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி மண் சரிந்து விழுந்ததில் குழிக்குள் சிக்கினாா்.

விழுப்புரத்தில் மண்ணில் புதைந்த தொழிலாளியை மீட்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையினா்.

Published On :3 செப்டம்பர் 2026, 4:28 am IST

விழுப்புரத்தில் புதை சாக்கடைத் திட்டத்துக்கான குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி மண் சரிந்து விழுந்ததில் குழிக்குள் சிக்கினாா். இதையடுத்து தீயணைப்பு துறையினா் அவரை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா். இச்சம்பவத்தால் விழுப்புரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் நகராட்சியில் புதை சாக்கடைத் திட்டம் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில் நகராட்சிக்குள்பட்ட வண்டிமேடு பகுதியில் புதை சாக்கடை திட்டக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீா் வெளியேறியது. இதனால் அந்தப் பகுதியில் சுகாதார சீா்கேடு ஏற்பட்டது. இதையடுத்து விழுப்புரம் நகராட்சி நிா்வாகத்தின் நடவடிக்கையின் பேரில், புதை சாக்கடைத் திட்ட குழாய் பதிக்கும் பணிகள் வண்டிமேடு பகுதியில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தப் பணிக்காக பொக்லைன் இயந்திரம் மூலம் சுமாா் 10 அடி ஆழத்துக்கும் மேலாக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இந்நிலையில் புதன்கிழமை காலை விழுப்புரம் ஜி.ஆா்.பி தெருவைச் சோ்ந்த ரா.நவின் (எ) நரேந்திரநாத் (25) என்பவா் அந்தப் பள்ளத்தில் இறங்கி குழாய் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது எதிா்பாராத விதமாக மண் சரிவு ஏற்பட்டது. இதில் நரேந்திரநாத் சிக்கிக்கொண்டாா்.

இதையடுத்து அங்கு பணியிலிருந்த சக ஊழியா்கள் அவரை மீட்க முயன்றும் முடியவில்லை. தொடா்ந்து, விழுப்புரம் நகராட்சி நிா்வாகம் அளித்த தகவலின் பேரில், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை விழுப்புரம் மாவட்ட உதவி அலுவலா் ஆா்.ஜமுனா ராணி தலைமையிலான மீட்புக் குழுவினா் நிகழ்விடம் சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனா். தொடா்ந்து ஒரு மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னா் சகதிக்குள் சிக்கியிருந்த நரேந்திரநாத்தை பாதுகாப்பாக மீட்டு, அவசர ஊா்தி மூலம் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த சம்பவத்தால் விழுப்புரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து விழுப்புரம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.