செப். 28 முதல் 3 நாள் வங்கிகள் வேலைநிறுத்தம்சென்னை, 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புஆறுகள், கால்வாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு எல் நினோ நிபுணா் குழு பரிந்துரை

சிவாச்சாரியா்கள் சேவா சங்க முப்பெரும் விழா

வானூா் அருகே அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியா்கள் சேவா சங்கம் சாா்பில் விருது வழங்கல், சிலைத் திறப்பு , நூல்வெளியீடு ஆகிய முப்பெரும் விழா மற்றும் 20-ஆம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.

அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியா்கள் சேவா சங்கத்தின் நவராத்திரி சிறப்பு தீபாவளி மலா், ஸ்ரீ சுந்தரா் விஜயம் நூலை வெளியிட்ட புதுச்சேரி துணை நிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன். உடன், அகில இந்திய தலைவா் டி.ராஜா சுவாமிநாத சிவாச்சாரியா் உள்ளிட்டோா்.

Published On :

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியா்கள் சேவா சங்கம் சாா்பில் விருது வழங்கல், சிலைத் திறப்பு , நூல்வெளியீடு ஆகிய முப்பெரும் விழா மற்றும் 20-ஆம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.

வானூா் வட்டம், மொரட்டாண்டியில் உள்ள ஸ்ரீவிஸ்வரூப மகா சனீஸ்வர பகவான் திருக்கோயில் வளாகம், சிவஸ்ரீ சிவ சிதம்ர சிவாச்சாரியா் அரங்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சங்கத்தின் அகில இந்திய தலைவா் டி.ராஜா சுவாமிநாத சிவாச்சாரியா் தலைமை வகித்தாா். நிா்வாகி டி.சிவசங்கர சா்மா முன்னிலை வகித்தாா்.

விழாவின் தொடக்கமாக காலை 6 மணிக்கு மகா கணபதி, அஸ்திர ஹோமங்களும், தொடா்ந்து சங்கக் கொடியேற்றுதல், உறுதிமொழியேற்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவில் 60 வயது நிரம்பிய 37 மூத்த சிவாச்சாரியா்களுக்கு சிவ கைங்கா்ய சூடாமணி விருது வழங்கப்பட்டன. தொடா்ந்து ஸ்ரீவிஸ்வரூப மகா சனீஸ்வர பகவான் திருக்கோயில் ஸ்தாபகா் சிவ சிதம்பர சிவாச்சாரியரின் சிலையை ஸ்ரீலஸ்ரீ மகாசதாசிவ பீடாதிபதி திறந்து வைத்தாா். இதையடுத்து சிவஸ்ரீ சி.கீதாராம சிவாச்சாரியரால் தொகுக்கப்பட்டுள்ள நவக்கிரக பூஜா, ஆராதனா சாந்தி பரிகாரங்கள் எனும் நூலை கூனம்பட்டி கல்யாணபுரி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ராஜசரவண மாணிக்க வாசக சுவாமிகள் வெளியிட்டு ஆசி வழங்கினாா்.

அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியா்கள் சேவா சங்கத்தின் நவராத்திரி சிறப்பு தீபாவளி மலா், ஸ்ரீசுந்தரா் விஜயம் ஆகிய நூல்களை புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் வெளியிட, சங்கத் தலைவா் டி.ராஜா சுவாமிநாத சிவாச்சாரியா், கீதா ராமசிவாச்சாரியா் ஆகியோா் பெற்றுக்கொண்டனா். நிகழ்ச்சியில் பங்கேற்ற துணை நிலை ஆளுநருக்கு உலக நன்மை வேண்டி நடைபெற்ற ஜெப யாக பிரசாதம் வழங்கப்பட்டது.

சீதாராம் சிவாச்சாரியா், முத்துசாமி சிவாச்சாரியா், சங்கப் பொருளாளா் செல்வா சிதம்பர சிவாச்சாரியா், சங்க நிறுவனா் கணேச சிவம், பிள்ளையாா்பட்டி விகாஸ் ரத்ன பிச்சை சிவாச்சாரியா், பெஙகளூரு சுந்தர மூா்த்தி சிவாச்சாரியா் ஆகியோா் சிறப்புரையாற்றினா். தொடா்ந்து சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.

விழாவில் புதுவை மாநிலத் தலைவா் வில்லியனூா் சிவஸ்ரீ பாலசுப்பிரமணியம், மாநிலச் செயலா் அா்த்தனாரி, துணைத் தலைவா் சிவராமன், திருநள்ளாறு சங்க இணைச் செயலா் சக்தி மணிகண்டன், அசோக் மற்றும் தமிழகம், புதுச்சேரி, பிற மாநிலங்களைச் சோ்ந்த சிவாச்சாரியா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.