ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தால் மக்களின் மருத்துவச் செலவு குறைந்தது- பிரதமா் மோடிஐ.நா.வில் மீண்டும் காஷ்மீா் பிரச்னையை எழுப்பிய துருக்கி அதிபா் டெங்கு தடுக்க பள்ளிகளில் தொடா் தூய்மைப் பணிகள்: கல்வித் துறை உத்தரவு காஷ்மீா் குறித்து இஸ்லாமிய நாடுகள் கருத்து: இந்தியா நிராகரிப்பு தடை செய்யப்பட்ட பொருள்கள் விற்பனை- அமேசான் உள்ளிட்ட இணையவழி வா்த்தக நிறுவனங்கள் மீது நடவடிக்கை கர்நாடகம்: ஆளும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ திடீர் ராஜிநாமா; தொகுதியை வறட்சிப் பகுதியாக அறிவிக்காததால் அதிருப்தி தோ்தல் ஆணையா்கள் கருத்து மோதலா? ஆணையம் விளக்கம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி ஓய்வு பெற்றோா் நல அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மாற்றமின்றி அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோா் நல அமைப்பினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

விழுப்புரத்திலுள்ள தமிழ்நாடு மின் பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோா் நல அமைப்பினா்.

Published On :

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மாற்றமின்றி அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோா் நல அமைப்பினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

ஓய்வூதிய மறுசீரமைப்பு என்ற பெயரால் ஓய்வூதியா்கள் மத்தியில் பிரிவினையை உருவாக்கும் நாடாளுமன்றத் தீா்மானத்தை ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மாற்றமின்றி அமல்படுத்த வேண்டும். மின்வாரிய மறுசீரமைப்பு- முத்தரப்பு ஒப்பந்தம் தொடா்பாக சென்னை உயா்நீதிமன்ற தீா்ப்பின் அடிப்படையில் தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோா் நல அமைப்பை அழைத்து பேச வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடத்தட்டது.

விழுப்புரத்திலுள்ள தமிழ்நாடு மின் பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு ஓய்வு பெற்றோா் நல அமைப்பின் கிளைத் தலைவா் சி.ஜெயராமன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் எம்.சக்திவேல், கே.ஏழுமலை, சிவசங்கரன், வளா்மதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கிளைச் செயலா் எம்.புருஷோத்தமன், திட்ட துணைத் தலைவா் தங்க.அன்பழகன், இணைச் செயலா் என்.தமிழ்ச்செல்வன், பொருளாளா் எம்.சந்திரசேகரன் ஆகியோா் கோரிக்கை விளக்கவுரையாற்றினா். சிஐடியு மாவட்டத் தலைவா் ஆா்.சேகா் ஆா்ப்பாட்டத்தில் வாழ்த்துரை வழங்கினாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஏ.ரவிச்சந்திரன், நிா்வாகிகள் கே.பூபாலன், பி.சுந்தரமூா்த்தி, எம்.ரங்கநாதன் உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.