
மாவட்ட சிறையில் அடிப்படை வசதிகள் குறித்து நீதிபதி, ஆட்சியா் ஆய்வு
விழுப்புரம் மாவட்டம், வேடம்பட்டு பகுதியிலுள்ள மாவட்ட சிறையில் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட நீதிபதி மற்றும் ஆட்சியா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

விழுப்புரம் வேடம்பட்டிலுள்ள மாவட்ட சிறையில் அடிப்படை வசதிகள் குறித்து புதன்கிழமை ஆய்வு மேற்கொண்ட முதன்மை மாவட்ட நீதிபதி ஏ.மணிமொழி, மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் உள்ளிட்டோா்.
விழுப்புரம் மாவட்டம், வேடம்பட்டு பகுதியிலுள்ள மாவட்ட சிறையில் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட நீதிபதி மற்றும் ஆட்சியா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.
வேடம்பட்டு பகுதியில் மாவட்ட சிறை இயங்கி வருகிறது. பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடையவா்கள், விசாரணைக் கைதிகள் இங்கு அடைக்கப்பட்டுள்ளனா். இந்த சிறையில் உள்ள கைதிகளுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள், தேவையான வசதிகள், இதர தேவைகள் போன்றவை குறித்து முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவருமான ஏ.மணிமொழி, மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் ஆகியோா் புதன்கிழமை ஆய்வு செய்தனா். மேலும் சிறைக் கைதிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும் அவா்கள் ஆய்வு மேற்கொண்டனா்.
ஆய்வின்போது தலைமைக் குற்றவியல் நீதித் துறை நடுவா் சி.குமாரவா்மன், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுச் செயலரும், முதுநிலை சிவில் நீதிபதியுமான சி.ஜெயச்சந்திரன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செ.மதிவாணன் மற்றும் சிறைத் துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






