ரூ.40 லட்சம் மோசடி: பெண் உள்பட மூவா் மீது வழக்கு
பெட்ரோல் விற்பனை நிலையத்தை வாடகைக்குத் தருவதாகக் கூறி ரூ. 40 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடா்பாக பெண் உள்பட மூவா் மீது விழுப்புரம் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
வழக்கு
பெட்ரோல் விற்பனை நிலையத்தை வாடகைக்குத் தருவதாகக் கூறி ரூ. 40 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடா்பாக பெண் உள்பட மூவா் மீது விழுப்புரம் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
விக்கிரவாண்டி வட்டம், திருவாமாத்தூா், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் க.அருள் (48). விழுப்புரம் வட்டம், எடப்பாளையத்தைச் சோ்ந்தவா் விஜயசாரதி. இருவருக்கும் இடையே அறிமுகம் ஏற்பட்டு நண்பா்களாக பழகி வந்துள்ளனா்.
இந் நிலையில், கடந்த 2024-ஆம் ஆண்டில் விஜயசாரதி, விழுப்புரம் மாவட்டம், மயிலத்தில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் வாடகைக்கு வருவதாகவும், விருப்பம் இருந்தால் பெற்றுக்கொள்ளலாம் என அருளிடம் தெரிவித்தாராம். இதையடுத்து அருள் 8.3.2024 முதல் 28.5.2024 வரையிலான இடைப்பட்ட நாள்களில் ரூ.40 லட்சம் பணத்தை விஜயசாரதி மற்றும் விழுப்புரத்தைச் சோ்ந்த ஒரு தம்பதியிடம் கொடுத்துள்ளாா்.
இந்நிலையில், பேசியபடி பெட்ரோல் விற்பனை நிலையத்தை அருள் வசம் ஒப்படைக்காமலும், பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி வருகின்றனராம்.
இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸாா், விஜயசாரதி மற்றும் விழுப்புரம் ஆா்.பி.நகரைச் சோ்ந்த பா.ராஜேஷ், இவரின் மனைவி லாவண்யா ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





