சிதம்பரம்: சிதம்பரத்தில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் 36 பேர் வேட்பாளர்கள் அடங்கிய தமிழ்நாடு சமாஜ்வாதி கட்சி முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சி மாநிலத் தலைவர் என்.இளங்கோயாதவ் சனிக்கிழமை வெளியிட்டார்.
சிதம்பரத்தில் உள்ள கட்சி தலைமையகத்தில் 36 வேட்பாளர்கள் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட தமிழ்நாடு சமாஜ்வாதி கட்சி மாநிலத் தலைவர் என்.இளங்கோயாதவ் பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் 50 தொகுதிகளில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகிறோம். முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளோம். வருகிற ஏப்.26-ம் தேதி 14 பேர் கொண்ட 2வது வேட்பாளர் பட்டியலை வெளியிடவுள்ளோம். மே.8-ம் தேதி திருவண்ணாமலையில் வேட்பாளர்கள் அறிமுகக்கூட்டம் நடைபெறுகிறது.
கூட்டத்தில் தேசிய துணைத் தலைவர் கிரன்மெய்நந்தா எம்பி, தேசிய செயலாளர்கள் ஜோ.ஆண்டனி, ராஜேஷ் தீட்சித் ஆகியோர் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசுகின்றனர். மே.11.12 தேதிகளில் மதுரை மற்றும் திருவண்ணாமலையில் நடைபெறும் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் அகில இந்திய தலைவர் முலாயம்சிங் யாதவ், உபி முதல்வர் அகிலேஷ்யாதவ் ஆகியோர் பங்கேற்று பேசுகின்றனர் என இளங்கோயாதவ் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமைச்சா் காந்தி முன்னிலையில் திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பெண் மாயம்
அரசு விநியோக மருந்துகள் சட்டவிரோத விற்பனை: 5 போ் கைது

எடப்பாடி பழனிசாமி முதல்வரான பின் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்படும்! - உடுமலை கே.ராதாகிருஷ்ணன்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


