அதிமுகவுக்கு 116, திமுகவுக்கு 101 இடங்கள்: இந்தியா டி.வி. கருத்துக் கணிப்பு

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு 116 தொகுதிகளிலும், திமுகவுக்கு 101 தொகுதிகளிலும் வெற்றி கிடைக்கும் என்று இந்தியா டி.வி.க்காக
அதிமுகவுக்கு 116, திமுகவுக்கு 101 இடங்கள்: இந்தியா டி.வி. கருத்துக் கணிப்பு
Published on
Updated on
1 min read

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு 116 தொகுதிகளிலும், திமுகவுக்கு 101 தொகுதிகளிலும் வெற்றி கிடைக்கும் என்று இந்தியா டி.வி.க்காக சி-ஓட்டர்ஸ் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் மாநில சட்டப் பேரவைத் தேர்தல் குறித்து நடத்தப்பட்ட அந்தக் கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
 தமிழகத்தில் திமுகவைவிட அதிமுக அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் எனினும் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை கிடைக்காது. தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் அதிமுக 116 தொகுதிகளிலும், திமுக 101 தொகுதிகளிலும் வெற்றி பெறும். பிற கட்சிகளுக்கு 18 தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போதைய பேரவையில் அதிமுகவுக்கு 203 எம்எல்ஏக்களும், திமுகவுக்கு 31 எம்எல்ஏக்களும் உள்ளனர்.
 கேரளத்தில் ஆட்சி மாற்றம்: கேரளத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சியை இழக்கும். அங்கு இடது ஜனநாயக முன்னணி வெற்றி பெறும்.
 கேரளத்தில் மொத்தமுள்ள 140 தொகுதிகளில் இடது ஜனநாயக முன்னணிக்கு 89 இடங்களும், ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு 49 இடங்களும் கிடைக்கும்.
 பாஜக தலைமையிலான கூட்டணி ஓரிடத்தில் மட்டுமே வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
 மம்தாவுக்கு மீண்டும் வெற்றி: மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும். 294 தொகுதிகளைக் கொண்டுள்ள அந்த மாநிலத்தில் இப்போது திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு 184 எம்எல்ஏக்கள் உள்ளனர். தேர்தலில் இது 156 ஆக குறையும்.
 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி முன்னணிக்கு இப்போது 60 எம்எல்ஏக்கள் உள்ளனர். வரும் தேர்தலில் அவர்களுக்கு 114 தொகுதிகளில் வெற்றி கிடைக்கும்.
 பாஜகவுக்கு வாய்ப்பு? அஸ்ஸாமில் பாஜக தலைமையிலான கூட்டணி முதலிடம் பிடிக்கும். எனினும் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை கிடைக்காது. காங்கிரஸுக்கு பின்னடைவு ஏற்படும் என்று கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 எனினும், அஸ்ஸாமில் பாஜக-அஸ்ஸாம் கண பரிஷத் கூட்டணி ஏற்படுவதற்கு முன்பு நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு இது என்பதால் அங்கு பாஜக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாகத் கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com