எங்கள் கட்சிக்கு இது முதல் பிரசவம்; தாயும்-சேயும் பிழைக்க வேண்டும்: தி.வேல்முருகன்
முதல் முறையாக சட்டப் பேரவைத் தேர்தலில் களம் கானும் தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு இது முதல் பிரசவம். இதில் தாயும்-சேயும் பிழைக்க வேண்டும்.


நெய்வேலி: முதல் முறையாக சட்டப் பேரவைத் தேர்தலில் களம் கானும் தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு இது முதல் பிரசவம். இதில் தாயும்-சேயும் பிழைக்க வேண்டும். இத்தொகுதி மக்கள் மற்றும் தொழிலாளர்கள் பிரச்னைகள் குறித்து பேச வேல்முருகன் சட்டப் பேரவைக்கு செல்ல வேண்டும் என அக்கட்சியின் நிறுவனத் தலைவர் தி.வேல்முருகன் பேசினார்.
நெய்வேலி, காமராஜர் திடலில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தேர்தல் பிரசாரக் கூட்டம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் நிறுவனத் தலைவரும், நெய்வேலி தொகுதி வேட்பாளருமான தி.வேல்முருகன் கலந்து கொண்டு பேசியதாவது.
பண்ருட்டி தொகுதியில் 10 ஆண்டுகள் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த போது அரசு பொறியியல் கல்லூரி பெற்று வந்தேன். அரசு விதிகளை தளர்த்தி பள்ளிகளை தரம் உயர்த்தியுள்ளேன். கிராம பகுதியில் சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளேன்.
என்.எல்.சி நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களின் ஊதிய உயர்வு குறித்த கடந்த கால போராட்டங்களில் பங்கேற்று அவர்களின் நியாயமான கோரிக்கைகளை போராடி பெற்று தந்துள்ளேன்.
என்.எல்.சி நிறுவனத்திற்கு வீடு, நிலம் மற்றும் மனை வழங்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு நான் போராடி கூடுதல் இழப்பீட்டுத் தொகை பெற்று தந்துள்ளேன். அப்போது நான் சட்டப் பேரவை உறுப்பினராக இருந்ததால் மேற்கண்ட பிரச்சனைகளில் தலையிட்டு தொழிலாளர்களுக்கு நியாயமும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடும் பெற்றுத்தர முடிந்தது.
2017-ல் வரும் புதிய ஊதிய மாற்று ஒப்பந்தத்தில் தொழிலாளர்களுக்கான சலுகைகள், நிலம், வீடு வழங்கியவர்களுக்கு வேலை வாய்ப்பு, 17 ஆயிரம் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தாருங்கள் என நிர்வாகத்திடம் போராடி பெற்றுத்தருவேன். அதிமுக, திமுக சட்ட மன்ற உறுப்பினர்களால் இதை கேட்டு பெற்றுத்தர முடியாது. எனவே எனக்கு கேமரா சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
என் மக்களுக்கான உரிமை போராட்டத்தில் நான் பங்கேற்பது மத்திய நிலக்கரி துறைக்கு எதிரானது. இங்குள்ள என்.எல்.சி தலைவருக்கோ, அதிகாரிகளுக்கோ எதிரானதல்ல.
பண்ருட்டியில் 10 ஆண்டுகள் சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த போது யாரிடமும் ஒரு பைசா கூட வாங்கியதில்லை. வாங்கியதாக நிரூபித்தால் என் அரசியல் வாழ்வில் இருந்து விலகிவிடுகிறேன்.
வேல்முருகன் மீது பொய்யான தகவல்களை பரப்பிவிடுகின்றனர். மக்களுக்கான உரிமை போராட்டத்தில் ஈடுபட்டால் வேல்முருகன் கெட்டவனா.
பொதுமக்கள், தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகள் மூலம் நெய்வேலி தொகுதியில் மெளன புரட்சி நடக்கப் போகிறது. 2021-ல் அரசியல் வரலாற்றில் தலைசிறந்த மாற்று சக்தியாக உருவாகும்.
2016 சட்டப் பேரவைத் தேர்தல் தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு முதல் பிரசவம். தாயும்-சேயும் பிழைக்க வேண்டும். இப்பகுதி மக்கள் மற்றும் தொழிலாளர்களின் பிரச்சனைகளை பேச நான் சட்டப்பேரவைக்கு செல்ல வேண்டும். எனவே எனக்கு ஒதுக்கப்பட்டுள்ள கேமரா சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என அவர் பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...