ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

எதிர்க்கட்சிகளே இல்லாத சட்டசபையை அதிமுக அமைக்கும்: இன்பத்தமிழன்

தமிழகத்தில் 234 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்று, எதிர் கட்சிகளே இல்லாத சட்டசபை அமையும் என முன்னாள் அமைச்சர் ரா.தா.இன்பத்தமிழன் கூறினார்.

News image
Updated On :12 மே 2016, 12:13 pm

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர்: தமிழகத்தில் 234 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்று, எதிர் கட்சிகளே இல்லாத சட்டசபை அமையும் என முன்னாள் அமைச்சர் ரா.தா.இன்பத்தமிழன் கூறினார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் மு.சந்திரபிரபாவை ஆதரித்து மம்சாபுரம் பேரூராட்சி பகுதியில் அவர் பேசியதாவது:

தமிழக முதல்வர் ஜெயலலிதா, 2011 தேர்தல் அறிக்கையில் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி கொடுப்பேன் என்றார். மாணவர்களுக்கு சைக்கிள், மடிக்கணினி, கல்வி உதவித் தொகை தருவேன் என்றார். அவை அனைத்தையும் நிறைவேற்றினார். இதே போன்று அப்போது தேர்தல் வாக்குறுதியாக அளித்த அனைத்தையும் நிறைவேற்றிக் கொடுத்துள்ளார். தமிழக ஏழை மக்களுக்காகவே சிந்தித்துத் திட்டங்களை செயல்படுத்தும் முதல்வர், தேர்தல் அறிக்கையில் சொல்லாத அம்மா உணவகம் உள்ளிட்ட பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்.

சென்னையில் சுமார் ரூ.10 ஆயிரம் ஊதியத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலை பார்க்கிறார்கள். மேலும் பல தேர்வுகளுக்கு தயார் செய்ய சென்னை வந்து தங்கி படிக்கும் இளைஞர்கள் உண்டு. இந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மனம் மகிழந்து அம்மா உணவகங்களில் வந்து மிகக் குறைந்த விலையில் சாப்பிட்டுச் செல்கிறார்கள்.

கருணாநிதியைப் பொறுத்தவைரயில் நாட்டு மக்களைச் சென்றடையும் எந்த நல்ல திட்டங்களை யார் சொன்னாலும் அது முடியாது என்று மறுத்துப் பேசக் கூடியவர்.

தற்போது முதல்வர் ஜெயலலிதா, விலையில்லா செல்போன், மானிய விலையில் மகளிருக்கு இரு சக்ககர வாகனம், 100 யூனிட் வரை இலவச மின்சாரம், விவசாயக் கடன் தள்ளுபடி, முதியோர் ஓய்வூதியம் ரூ.1500 ஆக உயர்வு, தாலிக்கு ஒரு பவுன் தங்கம் என ஏராளமான திட்டங்களை அறிவித்துள்ளார். இவை அனைத்தையும், சொல்லாதா நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத மேலும் ஏராளமான நலத்திட்டங்களும் உங்கள் வீடுகளை வந்தடையும் வகையில் அடுத்த 5 ஆண்டுகள் ஆட்சியை நடத்துவார்.

நமது ஊருக்குச் சொந்தக்காரரான அதிமுக வேட்பாளர் சந்திரபிரபாவிற்கு அனைவரும் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.