சென்னை: தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதை எதிர்த்து களத்தில் இறங்கி போராடுவேன் என திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
தமிழகம் முழுவதும் மே 16 ஆம் தேதி 232 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. அதிக அளவிலான பண விநியோகம் காரணமாக தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு மே 23 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதை எதிர்த்தும், தேர்தலை முழுமையாக ரத்து செய்துவிட்டு புதிய அறிவிக்கை வெளியிட்டு தேர்தலை நடத்த வேண்டும் என சிலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கு விசாரணையின் போது, தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளில் மூன்று வாரத்துக்கு தேர்தலை ஒத்திவைப்பதாக தேர்தல் ஆணையம் கூறியது. இதையடுத்து வழக்கு விசாரணையை ஜூன் 5 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்தார். தேர்தல் ஆணையம் அதிமுகவுக்கு சாதகமாக செயல்படுகிறது என குற்றம்சாட்டிய அவர், தேவைப்பட்டால் களத்தில் இறங்கி போராடுவேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.