தமிழக சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்களின் சுயவிவரம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் 227 தொகுதிகளில் அதிமுக போட்டியிட உள்ளது. அதிமுக தலைமையிலான ஆறு கூட்டணிக் கட்சிகளுக்கு மீதமுள்ள 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன
தமிழக சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்களின் சுயவிவரம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் 227 தொகுதிகளில் அதிமுக போட்டியிட உள்ளது. அதிமுக தலைமையிலான ஆறு கூட்டணிக் கட்சிகளுக்கு மீதமுள்ள 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
 தமிழக சட்டப் பேரவைக்கு வரும் மே மாதம் 16-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் 227 வேட்பாளர்களின் பட்டியலை முதல்வரும், கட்சியின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா திங்கள்கிழமை வெளியிட்டார்.

வேட்பாளர்களின் சுயவிவரங்கள் இதோ:-

திருச்சி (கிழக்கு)

பெயர்           : ஆர். மனோகரன்.
கல்வித்தகுதி    : பி.எஸ்சி., ஏசி மற்றும் பிரிட்ஜ் பட்டயப் பயிற்சி
பிறந்த தேதி     : 08.04.1956.
தொழில்         : தலைமை அரசு கொறடா.
பெற்றோர்       : தந்தை ரங்கசாமி நாயுடு
மனைவி பெயர் : சாந்தி
குழந்தைகள்     : மகள் கவிதா, மகன் விக்னேஷ்
கட்சி பதவி      : 1988ல் ஜெ., அணி வட்டச் செயலாளர்.
1992 முதல் 2001 வரை ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட ஜெ., பேரவைச் செயலாளர்.
2002 முதல் 2004 வரை திருச்சி மாநகர் மாவட்ட இணைச் செயலாளர்.
2006ல் திருச்சி மாநகர் மாவட்ட ஜெ., பேரவைச் செயலாளர்.
2009 முதல் திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர்.
பதவிகள்: 1986 முதல் 1991 வரை ஸ்ரீரங்கம் நகராட்சி உறுப்பினர்.
1996 முதல் 2001 வரை திருச்சி மாநகராட்சி 4வது வார்டு உறுப்பினர்.
2001 முதல் 2006 வரை ஸ்ரீரங்கம் மண்டலக்குழு உறுப்பினர்
2011 முதல் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.,
அரசு கொறடா
முகவரி         : திரு நகர் (பர்மா காலனி), திருவானைக்கா, திருச்சி.

திருக்கோவிலூர்:

திருக்கோவிலூர் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக சேவல் கோ.கோதண்டராமன்(66) அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், மூன்றாவது முறையாக தேர்தல் களம் காண்கிறார்.

 திருக்கோவிலூரை அடுத்த கொடுங்கால் கிராமத்தைச் சேர்ந்த இவர், 1980ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்து தற்போது வரை கட்சிப் பணியாற்றி வருகிறார். தற்போது முகையூர் ஒன்றியச் செயலராக உள்ளார்.

 1989ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி இழந்துள்ளார். 2001ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார். உள்ளாட்சித் தேர்தலில் ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு ஒருமுறை போட்டியிட்டு வெற்றி இழந்துள்ளார். தற்போது மூன்றாவது முறையாக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறார்.

பெயர்: கோ.கோதண்டராமன்
தந்தை: கோபால்
தாயார்: வள்ளியம்மை
மனைவி: சுசிலா
சொந்தஊர்: கொடுங்கால்
பிறந்ததேதி: 25.04.1949
கல்வித்தகுதி: பி.ஏ.,பி.எல்., 
தொழில்: வழக்குரைஞர்
மதம்: இந்து
சாதி: வன்னியர்
வகித்த கட்சிப் பதவி: ஒன்றிச் செயலர்

மயிலம் சட்ட மன்ற தொகுதி

பெயர்:கா.அண்ணாதுரை.
வயது: 49 (15-2-1967)
ஊர்: செஞ்சி வட்டம் வல்லம்.
தந்தை: காத்தவராயக்கவுண்டர்.
தாய்: ஆண்டாள் அம்மாள்.
மனைவி: ஆனந்தி.
மகள்: ஜெயதேவி
பதவி: தற்போது வல்லம் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர்.
2001-ல் இருந்து 2006 வரை மாவட்ட கவுன்சிலர், 2004-ல் இருந்து 2013-வரை 2 முறை வல்லம் ஒன்றிய அதிமுக செயலர்.
வகுப்பு: இந்து வன்னியர்.
தொழில்: விவசாயம்.
படிப்பு: மேல்நிலைக்கல்வி.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக அ.பிரபு அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் முதல் முறையாக தேர்தல் களம் காண்கிறார். இவர் தியாகதுருகம் வடதொரசலூர் மின்சார வாரியம் முன்பு வசித்து வருகிறார். இவர் விவசாயம், ஒப்பந்தக்கார், லாரி உரிமையாளர் ஆவார். கடந்த 1999ல் அதிமுக கட்சியில் இணைந்து தற்போது தியாகதுருகம் ஒன்றிய இளைஞர்(ம) இளம் பெண்கள் பாசறை செயலாளர், இயக்குநர் விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு அச்சகம், பெரியமாம்பட்டு கூட்டுறவு கடன் சங்க இயக்குநராக உள்ளார். ஏற்கனவே சட்டப் பேரவை தேர்தலுக்கு பணம் கட்டியவர் ஆவார். தற்போது முதல் முறையாக சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறார்.

பெயர்           அ.பிரபு
தந்தை           வெ.அய்யப்பா
தாயார்           அ.தைலம்மாள்
மனைவி         திருமணமாகவில்லை
சொந்தஊர்       தியாகதுருகம் அடுத்த கலையநல்லூர்
பிறந்ததேதி       10.10.84
கல்வித்தகுதி      பி.டெக்
தொழில்          விவசாயம், ஒப்பந்தக்காரர், லாரி உரிமையாளர்
மதம்             இந்து
சாதி              இந்து ஆதிதிராவிடர்
வகித்த கட்சிப் பதவிகள் கழக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை ஒன்றிய செயலாளர்

ஸ்ரீபெரும்புதூர்,

பெயர்: கே. பழனி.
பெற்றோர் பெயர்கள்: குமாரசாமி-தனம்மாள்.
பிறந்த தேதி-வயது: 1.1.1963, 55
ஜாதி: ஆதிதிராவிடர்.
கல்வித்தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி.
கட்சிபதவி: 8 வருடங்களாக குன்றத்தூர் ஒன்றிய செயலாளராக உள்ளார். தற்போது வகித்து வரும் பதவி: குன்றத்தூர் ஒன்றியகுழு தலைவர்.
விலாசம்: 8-23, பாராதியார நகர், கொல்லச்சேரி. குன்றத்தூர் சென்னை-69.
மனைவி பெயர் : விஜியா.
மகன் பெயர்:  கே.ப.லோகநாதன்.
மகள் பெயர்: கே.ப.திவ்யா.
தொழில்: ரியல் எஸ்டேட்.

காட்பாடி

பெயர்: எஸ்.ஆர்.கே.அப்பு
வயது:42
படிப்பு: பி.காம், (எம்.பி.ஏ)
ஜாதி: முதலியார்
குடும்பம்: மனைவி ரேகா, இரு பெண்கள் உள்ளனர்.கட்சியில் வகித்த பதவிகள்: முன்னாள் கிழக்கு மாவட்டச் செயலாளர் தற்போதைய பதவி: பிஎஸ்என்எல் ஆலோசனைக் குழு உறுப்பினர். தேர்தலில் போட்டி: கடந்த 2011 தேர்தலில் காட்பாடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர்.

திருப்போரூர்

தொகுதி          :திருப்போரூர்.
கட்சி               :அ.இ.அ.தி.மு.க  
வேட்பாளர் பெயர்   : எம்.கோதண்டபாணி
வயது              : 57
பொறுப்புகள்   :மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர், எம்.ஜி.ஆர் மன்ற மாவட்ட  துணை செயலாளர்    
 வேட்பாளர் மனைவி பெயர் : சுகந்தகுந்தலாம்பிகை
 சாதி               : வன்னியகுலசத்ரியர்
தொழில்           : விவசாயம்
கல்வி தகுதி      :    எம்ஏ ஆங்கில இலக்கிய பட்டம், (எல்எல்பி 2ம் ஆண்டுபடிக்கிறார்).
தெரிந்த மொழிகள்  :  தமிழ், ஆங்கிலம், இந்தி, பிரெஞ்சு மற்றும் ரஷ்ய மொழி கற்றிறிந்தவர் ஊர்                 : மாமல்லபுரம்

கதிர்காமம் தொகுதி:

எம்.ஆர். கோவிந்தன் (51),
கல்வித் தகுதி: 12-ம் வகுப்பு.
2000-ம் ஆண்டு முதல் தொகுதி அவைத்தலைவர்.
மனைவி: சரோஜினி, மகன்-ஹர்ஷவர்தன், மகள்-ஜான்சிராணி,.
ஏம்பலம் (தனி)
கோவிந்தராஜ் (49)
மனைவி: தேன்மொழி, மகன்-கோகுலராஜ், மகள்-இலக்கியா.
தொழில்-விவசாயம்.
சமூக சேவையில் ஈடுபாடு.

பாகூர்:

வேல்முருகன் (45).
கல்வித்தகுதி எம்.காம். எம்.எல்.
மனைவி: வி.சுகா, மகள்: வி.மகிழினி.
உருளையன்பேட்டை:
ஏ.ரவீந்திரன், 64,
கல்வித்தகுதிஃ10-ம் வகுப்பு.
மனைவி-சுசீலா, மகன்-சுரேஷ் ஆனந்த், மகள்-கெüசல்யா ஆனந்தி.
புதுச்சேரி நகர கழகச் செயலாளர்.

மணவெள்:

பி.புருஷோத்தமன் (67)
கல்வித் தகுதி:10-ம் வகுப்பு
தொழில்: விவசாயம்
மனைவி:ஜெயலட்சுமி, 5 மகள்கள், 1 மகன்
மாநில கழகச் செயலாளர்

நெல்லித்தோப்பு:

ஓம்சக்தி சேகர் (56)
கல்வித் தகுதி: எம்.ஏ
மனைவி-தமிழ்ச்செல்வி, மகள்-சிலம்பரசி, மகன்கள்-தமிழ்செங்கோலன், கவியரசன்,
முன்னாள் ராணுவவீரர்.
தொழில்-நில வணிகம்.
முன்னாள் ஜெ. பேரவை செயலாளர்.

முதலியார்பேட்டை:

ஆ.பாஸ்கர் (44)
கல்வித் தகுதி: 7-ம் வகுப்பு
மனைவி-கன்னியசெல்வி, மகள்-ஸ்ரீமதி, மகன்-லோகேஸ்வரன்.
தொழில்-நில வணிகம்.
மாநில எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர்.

உப்பளம்:

ஆ.அன்பழகன் (59)
கல்வித் தகுதி: 10-ம் வகுப்பு.
மனைவி: மகேஸ்வரி, மகள்-óஅஸ்வினி, மகன்-பிரபாகரன்
தொழில்: வியாபாரம்
கிளைச் செயலாளர் முதல் முன்னாள் மாநில செயலாளர்.

நெட்டப்பாக்கம் (தனி):

எல்.பெரியசாமி (60)
கல்வித் தகுதி: பி.எஸ்சி. பிஎல்.
மனைவி:மங்கையர்க்கரசி, மகள்-தனரேகா, தனியா, மகன்-தரண்குமார்
தொழில்: வியாபாரம்.
மாநில துணைச் செயலாளர்.

ராஜ்பவன்:

பி.கண்ணன் (66)
கல்வித் தகுதி: பி.ஏ.
மனைவி: சாந்தி, மகள்-பிரியதர்ஷினி, மகன்: விக்னேஷ்.
தொழில்: முழு நேர அரசியல்
மாநில தேர்தல் பிரிவு செயலாளர்.

அரியாங்குப்பம்:

டாக்டர் எம்ஏஎஸ்.சுப்பிரமணியன் (69)
கல்வித் தகுதி: எம்பிபிஎஸ்
மனைவி: சாந்தி, மகள்-சுகந்தி பிரபாகர், மகன்-சுந்தர்.
தொழில்: வியாபாரம்.
மூன்று மூன்று எம்.எல்.ஏ.

மண்ணாடிப்பட்டு:

எம். மகாதேவி ()
கல்வித் தகுதி:
முத்தியால்பேட்டை:
வையாபுரி மணிகண்டன் (34)
கல்வித்தகுதி: பிபிஏ பட்டப்படிப்பு
மனைவி: சித்ரா, 1 மகன்.
தொழில்: வியாபாரம்.
சமூக சேவையில் ஆர்வம்.

ஊசுடு (தனி)

செல்வராஜ் (60)
கல்வித்தகுதி: பிஏ.
மனைவி-காவேரி, மகன்-ஜெயப்பிரகாஷ், ஜெயகாந்தராஜ், மகள்-ஜெயசத்தியா,
ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர்.

காமராஜர் நகர்

ஆர்.கணேசன் (62)
கல்வித் தகுதி: 8-ம் வகுப்பு
மனைவி-நாகம்மாள், மகன்-பழநிராஜா, மகள்-பிரியா, சுகந்தி,
தொழில்-பில்டிங் புரோமோட்டர்.
மாநில துணைச் செயலாளர்.

மங்கலம்

க.நடராஜன் (55)
கல்வித் தகுதி: 10-ம் வகுப்பு
மனைவி: தனலட்சுமி, மகன்-சரவணன், முருகமணி, மகள்-உமா மகேஸ்வரி, கலைவாணி, ஜானகி.
தொழில்-விவசாயம்.
முன்னாள் எம்.எல்.ஏ. 2 முறை (முன்னாள் மாநில செயலாளர்).

இந்திரா நகர்.

டி.குணசேகரன் (53)
கல்வித் தகுதி: எம்.ஏ. பி.எல்.
மனைவி-ரங்கநாயகி, மகன்கள்-பாலகணபதி, ராமசந்திரன்.
தொழில்-வழக்குரைர்
மாநில வழக்குரைஞர் பிரிவு செயலாளர்.

லாஸ்பேட்டை:

ஜி.அன்பானந்தம் (55)
கல்வித் தகுதி:
மனைவி: மகாலட்சுமி, மகன்கள்-ராமச்சந்திரன், தமிழ்வாணன்,
தொழில்: வியாபாரம்
உழவர்கரை நகர கழகச் செயலர்.

மண்ணாடிப்பட்டு

எம். மகாதேவி (35)
கல்வித் தகுதி: பிஏ
கணவர்-முருகையன், மகள்கள்-ஐஸ்வர்யா, மதுமிதா
தொழில்-விவசாயம், வியாபாரம்.
மாநில கழக இணைச் செயலாளர்.

உழவர்கரை:

எம்.சிவசங்கர் (54)
கல்வித் தகுதிஃ எம்.காம். பி.எட்.
மனைவி-ஆனந்தி, மகள்கள்-அரிதா, மிருதி
தொழில்-வியாபாரம்.
சமூக சேவையில் ஈடுபாடு,
அண்ணாமலை பல்கலை மாணவர் பேரவை தலைவர், புதுச்சேரி வர்த்தக சபை,
புதுச்சேரி வணிகர் கூட்டமைப்பு தலைவர்.

தட்டாஞ்சாவடி:

எஸ்.காசிநாதன் (62)
கல்வித் தகுதி: 11-ம் வகுப்பு
மனைவி-சுலோச்சனா, மகன்கள்-வெங்கடேஷ், ராஜேஷ், விக்னேஷ்.
தொழில்-நிலவணிகம்.
மாநில கழக இணைச் செயலாளர்.

காலாப்படு:

வி. சி. ஏழுமலை என்ற காசிலிங்கம் (58)
கல்வித் தகுதி-8 வகுப்பு
மனைவி-இ.தமிழ்ச்செல்வி, மகன்-மேகநாதன், உமாசங்கர், மகள்-பூர்ணிமா.
தொழில்-போக்குவரத்து, பள்ளி நிர்வாகம்.

காட்டுமன்னார்கோயில் (தனி)

தொகுதி எண்: 159
பெயர்: எம்.கே.மணிகண்டன்
தந்தை பெயர்: குப்புசாமி
தாயார் பெயர்: ராஜகுமாரி
மனைவி பெயர்: அபிநயா
கட்சி: அதிமுக
வயது: 31
பிறந்ததேதி: 30-6-1985
கல்வி: பிஏ தமிழ்
ஊர்: முத்துகிருஷ்ணாபுரம், ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியம்
சாதி: ஆதிதிராவிடர்
தொழில்: விவசாயம்,
கட்சி பொறுப்பு: இளைஞர் பாசறை கிளை செயலாளர், முத்துகிருஷ்ணாபுரம், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஒன்றிய அவைத் தலைவர்

பெரம்பலூர் (தனி) தொகுதி

பெயர்                     : இரா. தமிழ்செல்வன்
வயது                     :  43
கல்வி                     :  எம்.ஏ. தமிழ்
சொந்த ஊர்                : எளம்பலுôர்
பெற்றோர்                  :  ராஜூ, பொட்டு
மனைவி                   :  தேவபிரியதர்ஷினி
குழந்தை                   : யாழினி
சாதி                        : இந்து, ஆதிதிராவிடர்
தொழில்                    :  விவசாயம்

அரசியல் அனுபவம்         : 1989 முதல் உறுப்பினர், ஒன்றிய ஜெயலலிதா பேரவை துணை செயலர், மாவட்ட பிரதிநிதி, 2000 முதல் மாணவரணி மாவட்ட செயலர், 2011 முதல் பெரம்பலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர்.

குன்னம் (பொது) அ.தி.மு.க வேட்பாளர்

பெயர்                      :  ஆர்.டி. ராமச்சந்திரன்,
வயது                      :  42
கல்வி                      : எஸ்.எஸ்.எல்.ஸி,
சொந்த ஊர்                 : அரணாரை,
பெற்றோர்                   : ராமலிங்கம், தனபாக்கியம்,
மனைவி                    :  சித்ரா,
குழந்தைகள்:                : கோகுல், அஸ்மிதா,
ஜாதி                        : இந்து, உடையார்,
தொழில்                     : ஒப்பந்ததாரர்,

அரசியல் அனுபவம்          : 2007 முதல் பெரம்பலுôர் நகர செயலராகவும், இரண்டு முறை பெரம்பலூர் நகராட்சியின் 1-வது வார்டு உறுப்பினராகவும், நகராட்சித் துணை தலைவராகவும், பெரம்பலுôர் அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவராகவும், 2015 ஆம் ஆண்டு முதல் பெரம்பலுôர் மாவட்ட செயலராகவும் பதவி வகித்து வருகிறார்.  

கடலூர் சட்டப்பேரவை தொகுதி

பெயர் : எம்.சி.சம்பத்
பிறந்த தேதி : 24-7-1958
படிப்பு : எம்.எஸ்.சி. (வேதியியல்), மாநிலக்கல்லூரி, சென்னை
சொந்த ஊர் : மேல்குமாரமங்கலம், பண்ருட்டி
பெற்றோர் பெயர் : சின்னசாமி கவுண்டர்- விசாலாட்சி
தொழில் : விவசாயம்.
மனைவி பெயர் : தமிழ்வாணி
மகன், மகள் : பிரவீன், திவ்யா
கட்சிப்பணி : 1998-ல் அண்ணாகிராமம் ஒன்றிய செயலர்.
2001-ம் ஆண்டு கடலூர் கிழக்கு மாவட்ட செயலர்,
2007-ம் ஆண்டு மாநில எம்ஜிஆர் இளைஞரணி செயலர்
2008-ம் ஆண்டு முதல் கிழக்கு மாவட்டச் செயலர்
தேர்தல் : 2001-ம் ஆண்டு நெல்லிக்குப்பம் தொகுதியில் வெற்றி, உள்ளாட்சி மற்றும் வீட்டுவசதித்துறை அமைச்சர்.
2006-ம் ஆண்டு தேர்தலில் போட்டியில்லை.
2009-ம் ஆண்டு கடலூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி.
2011-ம் ஆண்டு கடலூர் சட்டப்பேரவை தொகுதியில் வெற்றி. வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்.

குறிஞ்சிப்பாடி சட்டப்பேரவை தொகுதி

பெயர் : சொரத்தூர் இரா.ராஜேந்திரன்
பிறந்த தேதி : 09.03.1961
படிப்பு : பி.ஏ.
சொந்த ஊர் : சொரத்தூர், குறிஞ்சிப்பாடி.
பெற்றோர் பெயர் : ராஜாங்கம்-ரங்கநாயகி
தொழில் : விவசாயம், வியாபாரம்
மனைவி பெயர் : சாந்தி
மகன் : ராகுல்ராஜ், பி.இ
கட்சி பதவி : அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணை செயலர், கடலூர் கிழக்கு மாவட்ட முன்னால் செயலர்.அரசியல் பணி : 2011-ம் ஆண்டுத் தேர்தலில் குறிஞ்சிப்பாடி தொகுதியில் வெற்றி.

ராயபுரம்

டி.ஜெயக்குமார்
பிறந்த தேதி: 18.09.1960.
கல்வித் தகுதி: பி.எஸ்.சி., பி.எல்., (வழக்குரைஞர்)
அரசியல் பணிகள்: அதிமுகவில் ஆரம்ப காலந்தொட்டே உறுப்பினராக இருந்து வருகிறார். கடந்த 1991-1996 வரையிலும், 2001-06 வரையிலும், 2006-2016 ஆம் ஆண்டு வரையிலும் என நீண்ட நெடிய காலம் சட்டப் பேரவை உறுப்பினராக இருந்து அனுபவம் பெற்றவர். மீன்வளம், பால்வளம், வனம், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை என பல்வேறு பொறுப்புகளை கடந்த 1991-96 ஆம் ஆண்டு காலத்தில் வகித்தார். சென்னை பொறுப்புக் கழகத்தின் உறுப்பினராக இருந்தார். கடந்த 2011 ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் சட்டப் பேரவைத் தலைவராக பணியாற்றினார். அவருக்கு மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனர்.

செய்யாறு தொகுதி

செய்யாறு தொகுதி அதிமுக வேட்பாளராக தூசி கே.மோகன் அறிவிக்கப்பட்டு உள்ளார்.

அதிமுக பொது செயலாளரும்,தமிழக முதல் அமைச்சருமான ஜெயலலிதா,நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்  தேர்தலில் போட்டியிட 227 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்து இருந்தார்.அதன் படி செய்யாறு சட்டமன்ற தொகுதிக்கு அதிமுக வேட்பாளராக தூசி கே.மோகன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதிமுக வேட்பாளர் பெயர் தூசி கே.மோகன்,வயது(53),
பிறந்த தேதி 15.07.1958. படிப்பு:பி.பி.ஏ(டிஸ் கன்டினிவ்)
தந்தை பெயர் கிஷ்டப்ப நாயக்கர்,தாயார் பெயர் நீலாவதி,
இருபபிடம்:நெ.251,போலீஸ் லைன் தெரு, தூசி கிராமம், வெம்பாக்கம் தாலுக்கா. தொழில்: பட்டுசேலை உற்பத்தி, மினரல் வாட்டர் கம்பெனி மற்றும் விவசாயம், அவரது செல்போன் எண்.94431 04285 ஆகும்.  வேட்பாளரான தூசி கே.மோகன் அதிமுகவில் 1978 ல் சேர்ந்தார். கட்சியில் கிளை செயலாளர், இளைஞரணி துணை செயலாளர், பொதுக்குழு உறுப்பினர், ஒன்றிய கழக செயலாளர், தொகுதி கழக செயலாளர், மாவட்ட கழக செயலாளர், உள்ளாட்சியில் ஊராட்சி மன்ற தலைவராகவும் இருந்து தற்போது வெம்பாக்கம் ஒன்றியக்குழு துணைத் தலைவராகவும், அதிமுகவில் வெம்பாக்கம் ஒன்றிய கழக கழக செயலாளராக பணியாற்றி வருகிறார்.தமிழ், தெலுங்கு, உருது, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பேசக்கூடியவர். 

இவருக்கு பார்வதி என்கிற மனைவியும், லட்சுமி, இறையரசி, இந்துமதி, மினு என்ற 4 மகள்களும் உள்ளனர்.

ஆரணி

ஆரணி, ஏப்ரல் 4: ஆரணி அதிமுக வேட்பாளராக சேவூர் எஸ்.ராமச்சந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவரது விவரம் வருமாறு,

பெயர்         - சேவூர் எஸ்.இராமச்சந்திரன்
தந்தை பெயர் - பி.எம்.சோமசுந்தரமுதலியார்,
தாயார் பெயர்  - எஸ்.மரகதம்,
தொழில்       - அரசியல், விவசாயம்,
சாதி           - முதலியார் (செங்குந்தர்)
வயது         - 56
பிறந்த தேதி   - 23-2-1960
கல்வித்தகுதி   - 12ம் வகுப்பு தேர்ச்சி,
கட்சியில் வகித்த பதவிகள் - 1997-மாவட்டபிரதிநிதி(ஆரணி ஒன்றியம்), 1988- மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி   இணைசெயலாளர் ஆரணி சட்டமன்ற தொகுதி கழக செயலாளர். தற்போது வகிக்கும் பதவி -  2000ம் ஆண்டு முதல் ஜெ பேரவையின் தி.மலை வடக்கு  மாவட்ட செயலாளர்,

மனைவி பெயர் -    ஆர்.மணிமேகலை, முன்னாள் மாவட்ட பிரதிநிதி
மகன்கள்       -    ஆர்.சந்தோஷ்குமார் பி.டெக்(புனேயில் தனியார் பணி), 
ஆர்.விஜயகுமார் பி.டெக்( பெங்களூரில் பன்னாட்டு மென்பொருள்
நிறுவனத்தில் பணிபுரிகிறார்.

உள்ளாட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்ற விவரம்: 
                                1.1996-2001 வரை ஒன்றியக்குழு உறுப்பினர்,

                                2. 2000-2006 ஒன்றியக்குழு உறுப்பினர்,

                                3. 2006 முதல் 2011 வரை சேவூர் ஊராட்சி மன்ற  தலைவர்.

வில்லிவாக்கம்

பெயர்-எம்.ராஜூ என்ற தாடி ராஜூ

பிறந்த தேதி-30.11.1948

கல்வித் தகுதி: எம்.ஏ.(முதுகலைப்பட்டம்)

முகவரி: 91, முதல் தெரு, யுனைடெட் இந்தியா நகர், அயனாவரம்.

தொழில்: மாநகர போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனர், போக்குவரத்து ஆய்வாளராக

பணிபுரிந்து ஓய்வு

கட்சியில் சேர்ந்தது: 1972 முதல் தொடர்ந்து கழகப்பணி

தேர்தலில் போட்டி: சட்டப்பேரவை தேர்தலில் முதன் முதலாக போட்டி

கட்சியில் பதவி: அண்ணா தொழிற்சங்க துணைத்தலைவர், ஒருங்கிணைந்த மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர், அண்ணா தொழிற்சங்க பொதுச்செயலாளர், அண்ணா தொழிற்சங்க பேரவையின் மாநில துணைத் தலைவர், மாநில தலைவர், தலைமைக் கழக நிர்வாகி உள்ளிட்ட பதவிகள். 

தற்போதைய பதவி: 98-வது மாமன்ற உறுப்பினர்

குடும்ப விவரம்: மனைவி காஞ்சனா, 4 மகள்கள், 2 மகன்களும் உள்ளனர். 

========

வந்தவாசி (தனி) தொகுதி

பெயர் :       வி.மேகநாதன்

பிறந்த தேதி : 22-06-1961

வயது :       54

கல்வித்தகுதி: பி.ஏ., டி.கோ-ஆப்.

பணி :        கணக்காளர்-அன்னை சத்யா மகளிர் தையல் கூட்டுறவு சங்கம், வந்தவாசி.

மனைவி :    எம்.அம்பிகா(47)

மகள்கள் :    1. எம்.ஷக்தி(26), பி.டெக்., இவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.               

              இவரது கணவர் எஸ்.ஆன்டனி பிரிட்டோ அமெரிக்காவில் விப்ரோ  

              நிறுவனத்தில் பணிபுரிகிறார்.

              2. எம்.ஈஸ்வரி(25), எம்.ஈ.

பெற்றோர் :  எஸ்.வரதன்-கிருஷ்ணம்மாள் 

கட்சி பணி : கடந்த 21 ஆண்டுகளாக அம்மா பேரவை வந்தவாசி நகரச் செயலராக உள்ளார். 

             மேலும் கடந்த 25 ஆண்டுகளாக 18வது வார்டு வட்டச் செயலராக உள்ளார்.

முகவரி :   பெரிய காலனி, வந்தவாசி -604408, திருவண்ணாமலை மாவட்டம்.

======

உத்திரமேரூர்

பெயர்: வாலாஜாபாத் பா.கணேசன்

தந்தை பெயர்: பார்த்தசாரதி, தயார்-கிருஷ்ணவேணி

மனைவி : வனஜா

வாரிசு : மகன்-சரவணன், மகள்-நிம்மிஸ்ரீ

வயது: 54

சொந்த ஊர்: வாலாஜாபாத்

கல்வித் தகுதி: 8-ம் வகுப்பு

தொழில்: முழுநேர அரசியல்

வகித்த பதவி: 2001-ல் வாஜாலாபாத் ஒன்றியக் குழு துணைத் தலைவர், தற்போது சட்டமன்ற உறுப்பினர்.

கட்சிப் பதவி: எம்.ஜி.ஆர்.மன்றச் செயலர், பேரூராட்சி செயலர், வாலாஜாபாத் ஒன்றியச் செயலர், மாவட்ட கழக அவைத் தலைவர், தற்போது மாவட்ட செயலர்.

 கட்சி அனுபம்: 1972-ம் ஆண்டில் இருந்து அதிமுகவில் இருந்து வருகிறார். எம்.ஜி.ஆர் மன்றச் செயலர், பேரூராட்சி செயலர் என படிப்படியாக உயர்ந்த இவர் தொடர்ந்து 17 ஆண்டுகள் வாலாஜாபாத் ஒன்றிய செயலராக இருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது முறையாக மாவட்ட செயலராக உள்ளார்.

=====

கும்மிடிப்பூண்டி தொகுதி

கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ கே.எஸ்.விஜயகுமார் அ.தி.மு.க கட்சியால் அறிவிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் முதல் தொகுதியான கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கான அ.தி.மு.க வேட்பாளராக இரண்டு முறை எம்.எல்.ஏ ஆக தேர்வு செய்யப்பட்ட கே.எஸ்.விஜயகுமார் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இவரது பெற்றோர் கே.சுதர்சனம்-கே.எஸ்.ஜெயம்மாள். மனைவி கே.வி.அனிதா, மகள்கள்:- கே.வி.ஷம்யுக்தா, கே.வி.ஷஞ்சனா

பிறந்ததேதி:- 28-10-1970( வயது 46)

வசிப்பிடம்:- தானாகுளம், மஞ்சங்கரனை ஊராட்சி, எல்லாபுரம் ஒன்றியம், திருவள்ளூர் மாவட்டம்

கல்வி:- பி.காம், ஏ.எப்.டெக்

தொழில்:- விவசாயம்

கட்சி பதவி:- தானாகுளம் ஊராட்சி அ.தி.மு.க கிளை செயலாளர்

பிற பதவிகள்:- 2005 இடைத்தேர்தலில் வென்று எம்.எல்.ஏ, 2006 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ

இனம்:- கம்மா நாயுடு

அ.தி.மு.க-வின் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற வேட்பாளர் கே.எஸ்.விஜயகுமாரின் தந்தை கே.சுதர்சனம் 2001ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க சார்பில் கும்மிடிப்பூண்டி தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆகி பின்னர் தமிழக அமைச்சருமானார். இந்நிலையில் 2005ஆம் ஆண்டு இவர் இவரது வீட்டில் வடநாட்டு கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் பின்னர் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு நடைபெற்ற இடை தேர்தலில் கே.எஸ்.விஜயகுமார் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு 27,163 வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க வேட்பாளரை வென்றார்.

இதனை தொடர்ந்து நடைபெற்ற 2006ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கே.எஸ்.விஜயகுமார் 229 ஓட்டுகள் வித்தியாசத்தில் தி.மு.க கூட்டணியில் பா.ம.க வேட்பாளரை வென்று எம்.எல்.ஏ ஆனார்.

அண்ணாநகர்

கோகுல இந்திரா

பிறந்த இடம்: சென்னை

பிறந்த தேதி: 1.06.1966.

கல்வித் தகுதி: பி.எல்.,

அரசியல் பணிகள்: அதிமுகவில் பல ஆண்டுகளாக தீவிரமாக பணியாற்றி வருகிறார். சட்டப் படிப்பைக் கொண்டு இலவச சட்ட ஆலோசனைகளையும் அளித்து வந்தார். அதிமுக மகளிர் அணி மாவட்டச் செயலாளராகவும், 2001-07 ஆம் ஆண்டு வரையில் மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். கட்சியின் அமைப்புச் செயலாளராகவும், கடந்த 2011 ஆம் ஆண்டு அண்ணாநகர் தொகுதியில் வென்று அமைச்சராகவும் உள்ளார். இப்போது மீண்டும் அண்ணாநகர் தொகுதியில் போட்டியிட் வாய்ப்பு கிடைத்துள்ளது. கணவனும், இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

திண்டிவனம் (தனி) தொகுதி

ஒன்றிய செயலர் ராஜேந்திரன்

விழுப்புரம், பிப். 4: திண்டிவனம் (தனி) தொகுதி அதிமுக வேட்பாளராக ஒலக்கூர் ஒன்றிய செயலாளர் எஸ்.பி.ராஜேந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

வேட்பாளரின் சுய விவரம்:

பெயர்:எஸ்.பி.ராஜேந்திரன்

வயது:63

தந்தை:பழனிச்சாமி

கல்வி: எம்ஏ

மனைவி: தவச்செல்வி

பிள்ளைகள்: எழிலரசி(35), கௌதமி(32), காளிப்பிரகாஷ்(30), ஜெயப்பிரியா(27), ராதிகா(21).

ஊர்: திண்டிவனம் அருகே சாரம் கிராமம்.

தொழில்: விவசாயம்

கட்சிப் பதவி: கல்லூரி மாணவர் பருவத்திலிருந்து கட்சிப்பணி, மாவட்ட எம்ஜிஆர் விவசாய அணி செயலர், தற்போது ஒலக்கூர் கிழக்கு ஒன்றிய செயலாளர். 1991-96ல் ஒலக்கூர் ஒன்றியக்குழுத் தலைவர்.

இவர், கடந்த 1996-ல் வானூர் தனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியுற்றார்.

இதனையடுத்து, தற்போது திண்டிவனம் தனி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

========

செய்யூர் சட்டமன்றத் தொகுதி

பெயர்: முனுசாமி

தந்தை பெயர்: ஆறுமுகம், தயார்-முனியம்மாள்

மனைவி: ரேனுகா

வாரிசு: இரு பெண் குழந்தைகள்

சொந்த ஊர்: கழிப்பட்டூர் (திருப்போரூர் வட்டம்)

தொழில்: ரியல் எஸ்டேட்

வகித்த பதவி: முட்டுக்காடு ஊராட்சி மன்றத் தலைவர்

கட்சிப் பதவி: கிளை செயலர், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணைச் செயலர் பதவிகளை வகித்துள்ளார். தற்போது மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலராக உள்ளார்.

மயிலாப்பூர்

ஆர்.நடராஜ்

கல்வித் தகுதி: எம்.எஸ்.ஸி., எம்.ஏ., பி.எல்.,

அரசுப் பணிகள்: கடந்த 1975 ஆம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாகப் பணியில் சேர்ந்தார். காவல் துறை டி.ஜி.பி.,யாக பதவி உயர்வு பெற்றார். சென்னை மாநகர காவல் ஆணையாளராகவும் இருந்தார். பணியில் இருந்து ஓய்வு பெற்றதும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக 2011 இல் நியமிக்கப்பட்டார். அதன்பின், அந்தப் பொறுப்பில் இருந்தும் ஓய்வு பெற்றார். இதன்பின், கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதியன்று அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இப்போது மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வேலூர் சட்டப்பேரவைத் தொகுதி

பெயர்: ப.நீலகண்டன்

வயது: 64

படிப்பு: 9ஆம் வகுப்பு

தாய், தந்தை: பழனி, பேபி அம்மாள்

குடும்பம்: மனைவி சசிகலா, ரம்யா, நர்மதா, அபிராமி என மூன்று மகள்கள் உள்ளனர்.

ஜாதி: முதலியார்

கட்சியில் வகித்த பதவிகள்: 1990முதல் 2002 வரை நகரச் செயலாளர், 2002 முதல் 2006 வரை கிழக்கு மாவட்டச் செயலாளர்.

கட்சியில் தற்போதைய பதவி: மேற்கு மாவட்டப் பொருளாளர்.

முந்தைய பதவிகள்: கடந்த 2001 முதல் 2006வரை ஆற்காடு தொகுதி எம்எல்ஏ, கடந்த 1986ஆம் ஆண்டு வேலூர் நகராட்சி உறுப்பினர். 1989ஆம் ஆண்டு சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர். 2002முதல் 2004 மார்ச் வரை வேலூர், திருவண்ணாமலை ஆவின் தலைவர்.

 திருவள்ளூர் சட்டப்பேரவைத் தொகுதி

 வேட்பாளர் பெயர் : அ.பாஸ்கரன் (எ) கமாண்டோ அ.பாஸ்கரன்

 தந்தை பெயர் : அருணாச்சலம்.

 தாய் பெயர் : பேபியம்மாள்

 பிறந்த தேதி : 24.4.1968.                 

 சொந்த ஊர் : திருவள்ளூர்.

 அதிமுக கட்சி பதவி: திருவள்ளூர் தொகுதி இணைச் செயலாளர்

 மனைவி பெயர் : தீபா பாஸ்கரன்,

 மகள், மகன் : கீர்த்தனா, ஜவகர்.

 முகவரி: சத்தியமூர்த்தி தெரு, திருவள்ளூர்.

அரசியல் பதவி: முதல்வர் பாதுகாப்பு பிரிவில் கமாண்டோ வீரராக இருந்த இவர் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு 2001-ல் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் திருவள்ளூர் நகராட்சி 7-வது வார்டில் போட்டியிட்டு நகர் மன்ற உறுப்பினரானார்.

 இதை தொடர்ந்து 2006-2011-ல் 7-வது வார்டு பெண்கள் வார்டாக மாறியபோது அவரது மனைவி தீபா பாஸ்கரன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதை தொடர்ந்து 20011 தேர்தலில் அதே வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்று இன்று வரை திருவள்ளூர் நகர்மன்ற தலைவராக பதவி வகித்து வருகிறார்.

========

காஞ்சிபுரம் சட்டப்பேரவைத் தொகுதி

பெயர்: மைதிலி

கணவர் பெயர்: திருநாவுக்கரசு (முன்னாள் அமைச்சர்)

வயது: 50

சொந்த ஊர்: எழிச்சூர்

கல்வித் தகுதி: எஸ்.எஸ்.எல்.சி

தொழில்: முழுநேர அரசியல் பணி

வகித்த பதவி: சட்டமன்ற உறுப்பினர், தற்போது நகரமன்றத் தலைவர்.

கட்சிப் பதவி: 25-வது வட்ட செயலர், தற்போது மாவட்ட இணைச் செயலர்

கட்சி அனுபம்: கடந்த 1979-ம் ஆண்டில் இருந்து அதிமுகவில் இருந்து வருகிறார். கடந்த 2005-ம் ஆண்டில் அவரது கணவர் இறந்ததால் நடைபெற்ற இடைத் தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆனார். அதன்பின்னர் 2006-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.

செஞ்சி சட்டப்பேரவைத் தொகுதி

செஞ்சி,

செஞ்சி தொகுதி அதிமுக சட்ட மன்ற வேட்பாளராக செஞ்சி ஒன்றிய அதிமுக செயலர்  அ.கோவிந்தசாமி அக்கட்சியின் பொதுச்செயலருமான முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

பெயர்:அ.கோவிந்தசாமி

வயது: 60(6-3-1956)

தந்தை: அம்மையப்பன்.

தாய்: சின்னம்மாள்.

மனைவி: மைதிலி.

மகன்கள் ஜெயவேல்(30)ஆசிரியர். புகழ்வேல்(27)ஆசிரியர்.

மகள்கள்: ஜெயஸ்ரீ(26), ஆசிரியை,

சொந்த ஊர்: செஞ்சி வட்டம் தடாகம்.

பொறுப்பு: 1996-முதல் 2001-வரை ஊராட்சி மன்ற தலைவர், 2003-ல் இருந்து அதிமுக  செஞ்சி ஒன்றிய செயலராக பணியாற்றி வருகிறார்.

தொழில்: விவசாயம்.

வகுப்பு: இந்து வன்னியர்.   

ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி

பெயர்  : எஸ். வளர்மதி.

கணவர் பெயர் : சீத்தாராமன்.( (பெல் நிறுவன ஊழியர்)

பிறந்த தேதி : 25.6.1965.(51)

கல்வித் தகுதி: எம்.ஏ.பி.எல்.

தொழில் : வழக்குரைஞர்.

முகவரி : மின்னப்பன் தெரு, உறையூர், திருச்சி-3.

கட்சிப் பதவிகள் : 1983 முதல் அடிப்படை உறுப்பினர்,  தற்போதைய ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் மற்றும் மாநில அமைப்புச் செயலாளர்.

முன்னாள் மாவட்ட இணைச் செயலாளார் மற்றும் 58-வது வார்டு மாமன்ற உறுப்பினர்.

சீர்காழி சட்டப்பேரவைத் தொகுதி

சீர்காழி (தனி) சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக அக்கட்சியின் சீர்காழி தொகுதி செயலாளர் பி.வி. பாரதி அறிவிக்கப்பட்டுள்ளார். அவரது சுயவிவர குறிப்பு :

பெயர் : பி.வி. பாரதி

தந்தை பெயர் : பி. வேலாயுதம்

தாய் : குஞ்சிதம்மாள்

பிறந்த தேதி : 24.03.1959

மனைவி : மாலதி (45)

குழந்தைகள் : 2 மகள்கள், ஒரு மகன்

கல்வித் தகுதி : பி.காம்

பதவிகள் : 1957-ஆம் ஆண்டு முதல் அதிமுக உறுப்பினர். திருவெண்காடு ஊராட்சித் தலைவர், ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட அதிமுக துணைச் செயலாளர், எம்.ஜி.ஆர். இளைரணி  நாகை மாவட்டச் செயலாளர் ஆகிய பொறுப்புகளை ஏற்கெனவே வகித்துள்ளார்.  2006-11 வரை சீர்காழி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர், அதிமுக பேரவை மாவட்டச் செயலாளர். 2011-ஆம் ஆண்டு முதல் சீர்காழி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்.

தேர்தல் அனுபவம் : 1996-ஆம் ஆண்டில் சீர்காழி தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வி.

திருவெறும்பூர் சட்டப்பேரவைத் தொகுதி

பெயர் : கே.வி.டி. கலைச்செல்வன்.

கல்வித்தகுதி: பியூசி,ஐடிஐ (வரைகலை)

பிறந்த தேதி: 10.04.1958.

தொழில்: பெல் நிறுவன ஊழியர்

கட்சி பதவி: பெல் ஏ.டி.பி. தொழிற்சங்க பொதுச்செயலாளர்.

பெற்றோர் : தந்தை பெயர்:தண்டாயுதபானி, தாயார்: புஷ்பத்தம்மாள்

உடன் பிறந்தோர்: 1தம்பி, 1தங்கை.

திருமணம் : 1994-ல்

மனைவி பெயர் :மீனாம்பாள்.

இல்ல முகவரி: 14,தெற்குதெரு கூத்தைபார், துவாக்குடி, திருச்சி-13.

பிற தகுதிகள் : கபடி,கூடைப்பந்து வீரர், கூடைப்பந்தாட்ட அகிலஇந்திய பயிற்சியாளர்.

1989ல் ஜானகி மற்றும் ஜெயலலிதா அணி என இருவேறு அணிகள் பிரிக்கப்பட்டபோது ஜெ அணியில் தீவிரமாக செயல்பட்டவர். பெல் மனமகிழ் மன்றத்தில் 26 வருடம் துணைத்தலைவராக பதவி வகித்துவருகிறார்.
 

விழுப்புரம் சட்டப்பேரவைத் தொகுதி
 

விழுப்புரம் தொகுதி அதிமுக வேட்பாளராக மீண்டும் சி.வி.சண்முகம் அறிவிக்கப்பட்டுள்ளார்.

விழுப்புரம் தொகுதி அதிமுக வேட்பாளராக சி.வி.சண்முகம் எம்எல்ஏ மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். திண்டிவனத்தைச் சேர்ந்த முன்னாள் மாவட்டச் செயலரான வேணுகோபாலின் மகனான இவர், அவரது தந்தையைத் தொடர்ந்து, கட்சிப்பணியாற்றி வருகிறார்.

கடந்த 2001-ல் திண்டிவனம் தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏவாகவும், வணிகவரி மற்றும் கல்வி அமைச்சராக இருந்தார். தொடர்ந்து 2006-லும், வெற்றி பெற்று திண்டிவனம் தொகுதி எம்எல்ஏவாக இருந்தார்.

இதனையடுத்து, 2011-ல் விழுப்புரம் தொகுதியில், திமுகவைச் சேர்ந்த பொன்முடியை வீழ்த்தி வெற்றி பெற்று, எம்எல்ஏவாக தொடர்கிறார். மீண்டும், விழுப்புரம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

வேட்பாளரின் சுய விவரம்:

பெயர்: சி.வி.சண்முகம்

வயது: 50

பிறந்த தேதி: 1.5.1965

படிப்பு: பிஏபிஎல்

தொழில்: அரசியல்

தந்தை: வேணுகோபால் முன்னாள் எம்பி

தாய்: குமாரி

சகோதரர்கள்: ராதாகிருஷ்ணன், பாபு, ஜெயக்குமார், ராஜா

மனைவி: கௌரி

பிள்ளைகள்: ஜெயசிம்மன்(14), வள்ளி(12), சென்னையில் படிக்கின்றனர்.

ஊர்: திண்டிவனம் வட்டம், அவ்வையார்குப்பம்.

கட்சிப் பதவிகள்: மாவட்டப் பிரதிநிதி, இளைஞரணி துணை செயலர், 1999-ல் விழுப்புரம் மாவட்ட ஜெ.பேரவை செயலர், 2004 முதல் 2011 வரை விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலர்.

திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதி

பெயர்: பெருமாள் நகர் கே.ராஜன்

வயது: 54

சாதி: இந்து-அகமுடைய முதலியார்

கல்வித் தகுதி: பி.ஏ.,

மனைவி: ஆர்.விஜயலட்சுமி

மகள்கள்: ஆர்.கல்பனா, ஆர்.கலையரசி

மகன்: ஆர்.கார்த்தி

வகித்த பதவிகள்: 2000 முதல் 2008 வரை மாவட்ட மாணவரணிச் செயலாளர், 2009 முதல் 2012 வரை மாவட்ட எம்ஜிஆர் மன்றத் தலைவர், 2012 மே 23 முதல் அக்டோபர் 7-ம் தேதி வரை புரட்சித் தலைவி அம்மா பேரவைச் செயலாளர்.

இப்போதைய பதவி: 2015 அக்டோபர் 7 முதல் திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலாளர்.

தொழில்: கண்ணன் இன்ஜினியரிங் கார்ப்பரேசன், கண்ணன் பிவிசி பைப் கம்பெனி, கே.இ.சி. கல்வியியல் கல்லூரி, ஸ்ரீஅண்ணாமலையார் கல்வியியல் கல்லூரி, கே.இ.சி. ஆசிரியர் பயிற்சி நிறுவனம், ராஜ் ஏஜென்சி.

முகவரி: நெ.16, பெருமாள் நகர், திருவண்ணாமலை.

தொடர்பு எண்: 9443542899, 82207 67203, 94428 96272.

கே.வி. குப்பம் தொகுதி

கே.வி. குப்பம் (தனி) தொகுதி அதிமுக வேட்பாளராக ஜி. லோகநாதன்(54)  அறிவிக்கப்பட்டுள்ளார்.

கே.வி. குப்பம் ஒன்றியம் செஞ்சி கிராமத்தைச் சேர்ந்த இவர் ஓய்வுபெற்ற ராணுவ வீரராவார். கே.வி. குப்பம் ஒன்றியக் குழுத் தலைவர், கட்சியின் கே.வி. குப்பம் ஒன்றிய மாவட்ட பிரதிநிதி ஆகிய பதவிகளை வகித்து வருகிறார்.

பிளஸ் 2 வரை படித்த இவர் 2002 ஆம் ஆண்டு முதல் அதிமுக உறுப்பினராக உள்ளார். இவருக்கு லதா என்ற மனைவியும், 4 மகள்களும் உள்ளனர்.

சோளிங்கர் சட்டப்பேரவைத் தொகுதி

பெயர்:என்.ஜி.பார்த்தீபன்

வயது:41

ஜாதி: செங்குந்த முதலியார்

தந்தை: சி.கோபால். இவர் கடந்த 1980ஆம் ஆண்டு சோளிங்கர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராகவும், 1998ஆம் ஆண்டு அரக்கோணம் தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

குடும்பம்: மனைவி கல்பனா, இரு மகள்கள் உள்ளனர்.

தொழில்: வழக்கறிஞர்

கட்சியில் வகித்த பதவி: கிழக்கு மாவட்ட முன்னாள் செயலாளர்.

தற்போதைய பொறுப்பு: சோளிஙகர் நகர கூட்டுறவு வங்கித் தலைவர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநர். சட்டப்பேரவைக்கு முதல் முறையாக போட்டியிடுகிறார்.

தொகுதி - ஆம்பூர்

வேட்பாளர் பெயர் - ஆர். பாலசுப்பிரமணி

கட்சி - அதிமுக

வயது - 49

கல்வி - 10-ம் வகுப்பு

ஜாதி - நாயுடு

தொழில் - விவசாயம், ஷூ ஜாப் ஒர்க் யூனிட்

கட்சி பொறுப்பு : வேலூர் மேற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர்

குடும்ப பின்னணி :  மனைவி சங்கீதா ஆம்பூர் நகரமன்ற தலைவராக பதவி வகிக்கிறார். தந்தை ராதாகிருஷ்ணன், தாயார் பத்மாவதி, அக்கா உமா, அண்ணன் ரவிசங்கர், தங்கை இந்துமதி.  ஆம்பூர் புதுகோவிந்தாபுரம் பகுதியில் வசிக்கின்றனர்.

வாக்குறுதி : ஆம்பூரில் அரசு கலைக் கல்லூரி அல்லது பாலிடெக்னிக் கல்லூரி. மாதனூரில் புறக்காவல் நிலையம். நாயக்கனேரி மலை சுற்றுலா தலம். ஆனைமடுகு தடுப்பணை தூர்வாரி அகலப்படுத்தி, ஆழப்படுத்துதல்.  பெத்லகேம் மேம்பால பணிகள் துவக்க செய்தல்.  ஆம்பூர் ஏ-கஸ்பா அரசு உயர்நிலைப் பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துதல். அகரம்சேரி - மேல்ஆலத்தூர் ஆற்றுத் தரைப்பாலம். மின்னூர் - வடகரை ஆற்றுத் தரைப்பாலம். மின்னூர் தொழிற்பேட்டை அமைப்பதற்கான பணிகளை துவக்கச் செய்தல்.

புதுச்சேரி மாநில அதிமுக 30 தொகுதிகள் வேட்பாளர்கள்

புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெ.ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வேட்பாளர்கள் பெயர்பட்டியல்:

தொகுதிகள், வேட்பாளர் பெயர்:

மண்ணாடிப்பட்டு: எம்.மகாதேவி (மாநில இணைச் செயலாளர்).

திருபுவனை (தனி): ஜி.சபாபதி.

ஊடுசு (தனி): ஏ.கே.செல்வராசு.

மங்களம்: கே.நடராசன் (முன்னாள் எம்.எல்.ஏ.).

வில்லியனூர்: வி.ராஜாமணி என்ற சுப்பிரமணியன் (ஊசுடு தொகுதி கழகச் செயலாளர்).

உழவர்கரை: எம்.சிவசங்கர்.

கதிர்காமம்: எம்.ஆர்.கோவிந்தன்.

இந்திரா நகர்: டி.குணசேகரன் (மாநில வழக்குரைஞர் பிரிவுச் செயலாளர்).

தட்டாஞ்சாவடி: எஸ்.காசிநாதன் (மாநில இணைச் செயலாளர்).

காமராஜர் நகர்: பி.கணேசன் (மாநில துணைச் செயலாளர்).

லாஸ்பேட்டை: ஜி.அன்பானந்தம் (உழவர்கரை நகரச் செயலாளர்).

காலாப்பட்டு: காசிலிங்கம் என்ற ஏழுமலை.

முத்தியால்பேட்டை: வையாபுரி மணிகண்டன்.

ராஜ்பவன்: பி.கண்ணன் (மாநில தேர்தல் பிரிவுச் செயலாளர்).

உப்பளம்: ஏ.அன்பழகன் எம்.எல்.ஏ. (மாநில முன்னாள் செயலாளர்).

உருளையன்பேட்டை: ஏ.ரவீந்திரன் (புதுச்சேரி நகர செயலாளர்).

நெல்லித்தோப்பு: ஓம்சக்தி சேகர் எம்.எல்.ஏ. (ஜெ. பேரவை முன்னாள் செயலாளர்).

முதலியார்பேட்டை: ஏ.பாஸ்கர் எம்.எல்.ஏ. (மாநில எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர்).

அரியாங்குப்பம்: டாக்டர் எம்ஏஎஸ்.சுப்பிரமணியன் (முன்னாள் எம்.எல்.ஏ.).

மணவெளி: பி.புருஷோத்தமன் எம்.எல்.ஏ. (மாநில செயலாளர்).

ஏம்பலம் (தனி): கோ.கோவிந்தராசு.

நெட்டப்பாக்கம் (தனி): எல்.பெரியசாமி எம்.எல்.ஏ. (மாநில துணைச் செயலாளர்).

பாகூர்: பா.வேல்முருகன்.

நெடுங்காடு (தனி): க.பன்னீர்செல்வம்.

திருநள்ளார்: கேஏயு.அசனா (காரைக்கால் மாவட்ட துணைச் செயலர்).

காரைக்கால் (வடக்கு): எம்.வி.ஓமலிங்கம் (மாவட்ட கழகச் செயலாளர்).

காரைக்கால் (தெற்கு): வி.கே.கணபதி (முன்னாள் எம்.எல்.ஏ.).

நிரவி-திருப்பட்டினம்: விஎம்சி.சிவக்குமார் எம்.எல்.ஏ.

மாஹே: எஸ்.பாஸ்கர்.

ஏனாம்: மஞ்சல சத்திய சாய்குமார் (ஏனாம் தொகுதி செயலாளர்).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com