தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி: இதுவரை 3,413 மனுக்கள் சமா்ப்பிப்பு!தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புவானிலிருந்து வீசக்கூடிய 1,000 கிலோ வெடிகுண்டு தயாரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை நிலவை நெருங்கும் ‘ஆா்டெமிஸ்-2’ விண்கலம்!எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
/

குழந்தைகளை சாப்பிட வைக்க என்ன செய்ய வேண்டும்?

வீட்டில் சரியாக உணவு சாப்பிடாத குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும்போது என்ன வகையான உணவுகளை கொடுத்து அனுப்பலாம்

News image
Updated On :25 ஆகஸ்ட் 2016, 12:41 pm

வீட்டில் சரியாக உணவு சாப்பிடாத குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும்போது என்ன வகையான உணவுகளை கொடுத்து அனுப்பலாம் என்று உணவுச் சத்து நிபுணர் காந்திமதியிடன் கேட்டபோது அவர் கூறியது :

ஒரு குறிப்பிட்ட வயதிற்கு முன்னரே, குழந்தைகளுக்கு ஊட்டி விடும் பழக்கத்தை அம்மாக்கள் அல்லது குழந்தையை பராமரிப்பவர்கள் நிறுத்த வேண்டும். அப்போது தான் தனக்குத் தேவையான உணவின் அளவை குழந்தை உணர்ந்து சாப்பிட ஆரம்பிக்கும். தவிர அக்குழந்தையின் தன்னம்பிக்கையும் வளரும். குழந்தைகளின் தினசரி உணவில்  நார்சத்து அதிகமுள்ள காய்கறிகளை சமைத்துத் தர வேண்டும். உதாரணமாக அவரைக்காய் பொறியல், கொத்தவரங்காய் வதக்கல், வாழைத்தண்டு கூட்டு, வாழைக்காய் துவரன் போன்றவற்றினை  அடிக்கடி குழந்தைகளுக்கு பள்ளி செல்லும் போது கொடுத்தனுப்புவது நல்லது. முதலில் இந்த சுவை குழந்தைகளுக்குப் பிடிக்காமல் கூட இருக்கலாம். ஆனால் அவர்களுக்குப் பிடித்த மாதிரி சமைத்துக் கொடுப்பது தான் சவால். அதேபோல் குழந்தைகள் பீட்சா பர்கர் தான் அடிக்கடி வேண்டும் என அடம்பிடித்தால் உடனே வாங்கி தந்துவிட வேண்டாம். பெற்றோர் அல்லது பாட்டி தாத்தா கொடுக்கும் செல்லம் தான் குழந்தைகளின் அடம் பிடிக்கும் குணத்தை அதிகரிக்கச் செய்கிறது. கடையில் ஒரு பொருளை குழந்தைப் பார்த்துவிட்டு அதுதான் வேண்டும் என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்ய, அப்போதைய  சூழலைச் சமாளிக்க அதை வாங்கித் தருவது நல்லதல்ல. அது பிற்காலத்தில் அந்த குழந்தையை எதற்கும் அடம் பிடித்தால் உடனே கிடைத்துவிடும் என்ற மனப்பான்மையை அதிகரிக்கச் செய்துவிடும்.

உணவில் ஆரம்பித்து எல்லா விஷயங்களிலும் அதை செய்யும். இதை சாப்பிட மாட்டேன், இது பிடிக்காது என்று உணவு சாப்பிடுவதில் வித்யாசம் காட்ட ஆரம்பிக்கும். உணவை குழந்தைகள் சாப்பிடும் போது உங்களிடம் கேட்டு விட்டு தான் அது நல்லதா கேட்டதா என முடிவு செய்ய வேண்டும் .இந்த நிலையை அடைவதற்கு நீங்கள் ஆரம்பத்தில் இருந்தே குழந்தையை கட்டுபாட்டில் வைத்திருந்தால் மட்டுமே முடியும். இதற்கு நிச்சயம் நேரம் ஒதுக்க வேண்டும். பெற்றோர்கள் இதற்கான அடிப்படையை அமைத்துத் தர வேண்டும். பொறுமையாக நேரம் ஒதுக்கி தங்கள் குழந்தைக்கு உணவின் மகத்துவத்தைப் புரிய வைக்க வேண்டும். எனக்கு நேரம் இல்லை என்று சொல்லி அதன் பின் குழந்தைகள் சாப்பிடவில்லையே என்று பின்னர் வருந்தக் கூடாது. சொல்லும் விதத்தில் சொல்லி சாப்பிடும் வகையில் செய்தும் தந்தால் எந்தக் குழந்தையும் அடம் பிடிக்காமல் வீட்டிலும் சரி பள்ளியிலும் சரி சமர்த்தாக சாப்பிடுவார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.