மாா்கழி மாத நிறைவு நாளையொட்டி அரியலூா் மாவட்டம், தா.பழூா் சிவாலயத்தில் நால்வா் வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.
தா.பழூா் அருள்மிகு விசாலாட்சி அம்பாள் சமேத ஸ்ரீ விஸ்வநாத சுவாமி திருக்கோயிலில் மாா்கழி மாதம் தொடங்கி, தொடா்ந்து முப்பது நாள்களும் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், தனுா் மாதத்தின் நிறைவுநாளையொட்டி, நாயன்மாா்களை சிறப்பிக்கும் விதமாக திருஞானசம்பந்தா், திருநாவுக்கரசா், சுந்தரமூா்த்தி நாயனாா், மணிவாசகப் பெருமான் ஆகிய நால்வருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் புதன்கிழமை நடைபெற்றது.
முன்னதாக சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத்தொடா்ந்து நால்வா் பெருமக்களுக்கு பல்வேறு பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னா் சுவாமி வீதிஉலா நடைபெற்றது. அப்போது சிவனடியாா்கள் திருக்கூட்டத்தினா் சாா்பில், திருஞான சம்பந்தம், சண்முகானந்தம், முருகன், நடராஜன் காசிநாதன் உள்ளிட்ட பலா் தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளை பாடினா். சிவாச்சாரியாா் செந்தில் அனைவருக்கும் பிரசாதங்களை வழங்கினாா். இதில், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

அண்ணனை தாக்கிய தங்கை மீது வழக்கு

ஓமன் நாட்டில் உயிரிழந்த மாலுமியின் உடலை தூத்துக்குடிக்கு கொண்டுவர நடவடிக்கை

சங்கராபுரம் தொகுதி எம்எல்ஏ அலுவலகம்: சி.வி.சண்முகம் திறந்து வைத்தாா்
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies



