FOLLOW US

ON GOOGLE DISCOVER

ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

இன்றைய ராசி பலன்கள் (16.7.2026) 12 ராசிகளுக்கும்! குழப்பம் நீங்கும் இவர்களுக்கு!

இன்றைய நாள் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் எனத் தெரிந்துகொள்வோம்.

News image

astro - file photo

Updated On :16 ஜூலை 2026, 6:50 am IST

12 ராசிக்கான ராசிப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.

ஜூலை 16 2026 (வியாழக்கிழமை) 

மேஷம்:

இன்று சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளிடம் இருந்து வந்த மனக்கசப்பு மாறும். குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும். உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த மனகிலேசங்கள் மறைந்து ஒற்றுமை ஓங்கும். பிள்ளைகளிடம் பாசம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், கரும்பச்சை

அதிர்ஷ்ட எண்: 5, 9

ரிஷபம்:

இன்று பெற்றோகள் - உறவினர்களின் அரவணைப்பு அதிகமாகும். பயணங்களில் எதிர்பாராத தடங்கல் உண்டாகலாம். யோசித்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன்தரும். புதிய ஆர்டர் விஷயமாக வெளியூர் செல்ல நேரிடும். பழைய பாக்கிகள் வசூலிப்பதில் வேகம் காண்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 1, 5

மிதுனம்:

இன்று புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட நினைப்பவர்கள் அதற்கான ஆலோசனைகளில் ஈடுபடுவது நல்லது. வேலையாக முக்கிய நபர்களை சந்திக்க வேண்டி இருக்கும். கொடுத்த கடனை திருப்பி வாங்க முயல்வீர்கள். வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனமாக பேசுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 1, 3

கடகம்:

இன்று நண்பர்களிடம் முக்கிய விஷயங்களை ஆலோசனை செய்வதையும், அடுத்தவர் பற்றி பேசுவதையும் தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைப்பதில் தடை ஏற்படலாம். கவனமாக படிப்பது நல்லது. மனகஷ்டம் நீங்கும். எல்லா நன்மைகளும் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 1, 3, 9

சிம்மம்:

இன்று எதிலும் முன்னேற்றம் காணப்படும். விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்வீர். முக்கிய நபரின் அறிமுகமும், உதவியும் கிடைக்கும். நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும். மரியாதை கூடும். திட்டமிட்ட காரியங்கள் நன்றாக நடந்து முடியும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்தபடி சிறப்பாக நடக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 2, 6

கன்னி:

இன்று பணவரத்தும் அதிகரிக்கும். பழைய கடன்களை திருப்பி செலுத்தக் கூடிய நிலை உருவாகும். நீண்ட நாட்களாக இருந்து வந்த ராஜாங்க ரீதியிலான சிரமங்களிலிருந்து விடுபடுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் நிலை மேம்படும். அரசாங்க அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 3, 5

துலாம்:

இன்று வேடிக்கை வினோத நிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் சென்று கலந்து கொள்ள நேரிடும். சிலருக்கு திருமணம் கைகூடும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் ஏற்படும். பிள்ளைகளால் நன்மை கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருளை வாங்கி மகிழ்வீர்கள். வாகனத்தை ஓட்டும் போது கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 2, 9

விருச்சிகம்:

இன்று எதிர்பார்த்த தகவல்கள் தாமதமாக வரும். கூட இருப்பவர்களிடம் எந்த விஷயத்தையும் சொல்லும் போது கவனம் தேவை. பொருளாதாரம் உயரும். எதிர்ப்புகள் விலகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் தீரும். பல வகையான யோகங்கள் ஏற்படும். மன குழப்பம் நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 1, 3

தனுசு:

இன்று பிறருடன் பழகும் போது நிதானம் தேவை. தொழிலில் முன்னேற்றம் காணப்படும். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலிப்பது வேகம் பிடிக்கும். மாணவர்கள் கல்வியில் வெற்றிபெற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, நீலம்

அதிர்ஷ்ட எண்: 5, 7

மகரம்:

இன்று எல்லா நலனும் உண்டாகும். எதிர்ப்புகள் நீங்கும். நீங்கள் மற்றவர் மத்தியில் உயர்ந்து நிற்பீர்கள். அனுகூலமான பலன்களை எதிர்பார்க்கலாம். தைரியம் அதிகரிக்கும். சகோதரர்கள் வகையில் மிக நல்ல பலனை எதிர்பார்க்கலாம். நினைத்த வசதிகள் கிடைக்கும். எதிலும் லாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, வெளிர் மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 7, 9

கும்பம்:

இன்று மனதெம்பு உண்டாகும். வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் கை கூடும். வாக்கு வன்மையால் காரியம் கைகூடும். ஆன்மிக எண்ணம் உண்டாகும். தொழில் வியாபாரம் நல்லநிலைக்கு உயரும். போட்டிகள் நீங்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தேவையான நிதியுதவி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பிரவுண்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

மீனம்:

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். நிலுவையில் உள்ள பணம் வந்து சேரும். நிர்வாக திறமை வெளிப்படும். மேலிடத்தில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

Summary

Today Rasi Palan in Tamil - 16 July 2026 | இன்றைய ராசிபலன் ஜூலை 16 2026 | Today Horoscope in Tamil

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.