மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2026 - கடகம்

கடக ராசிக்கு இந்த தமிழ்ப் புத்தாண்டு எப்படி இருக்கும்?

News image

கடக ராசி

Updated On :10 ஏப்ரல் 2026, 6:49 am

கிரகநிலை

 தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில் கேது - அஷ்டம  ஸ்தானத்தில் சந்திரன், ராகு பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், புதன், சனி -  தொழில்  ஸ்தானத்தில் சூர்யன், சுக்கிரன் - அயன சயன போக  ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் வலம் வருகிறார்கள்.

கிரகமாற்றங்கள்

27-06-2026 அன்று குரு பகவான் அயன சயன போக  ஸ்தானத்தில்  இருந்து ராசிக்கு மாறுகிறார்.

20-10-2026 அன்று குரு பகவான் ராசியில்  இருந்து தன வாக்கு குடும்ப  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

13-02-2027 அன்று குரு பகவான் வக்ரம் அடைந்து ராசியில்  இருந்து அயன சயன போக  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

13-11-2026 அன்று ராகு பகவான் அஷ்டம  ஸ்தானத்தில்  இருந்து களத்திர  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

13-11-2026 அன்று கேது பகவான் தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில்  இருந்து ராசிக்கு மாறுகிறார்.

பலன்

எதிலும் பொறுமையுடனும் தைரியத்துடனும் ஈடுபடும் கடக ராசி வாசகர்களே, நீங்கள் மனசாட்சிக்கி விரோதமான காரியத்தை செய்யமாட்டீர்கள்

நீங்கள் எதிலும் ஈடுபடுவதற்குமுன் யோசிப்பீர்கள். தெய்வ சிந்தனை உடையவர்கள், பெற்றோர்களை மதித்து நடப்பீர்கள்.

வருமானம் படிப்படியாக உயரும். குடும்பத்தில் நிம்மதி நிலவும். வெற்றிகள் குவியும். தோல்வியடையும் என்று நினைத்திருந்த காரியங்கள் வெற்றி பெறும். உற்றார் உறவினர்கள், மற்றும் நண்பர்களின் நட்பும் ஆதரவும் கிடைக்கும். உடல் ஆரோக்யம் பலப்படும். புதிய மாற்றம் ஏற்படும். சமுதாயத்தில் உயர்ந்தவர்களின் உதவிகளைப் பெற்று உங்கள் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். நிதி நிலைமையில் குறிப்பிட்ட இலக்கை அடைவீர்கள். சுறுசுறுப்பாக உழைப்பீர்கள். இழந்த சுக சௌகர்யங்களை திரும்பப் பெறுவீர்கள்.

மற்றபடி முக்கியமானவர்களிடம் கவனமாகப் பேசவும். தீயோரிடமிருந்து விலகி இருக்கவும். “கூடா நட்பு போராய் முடியும்’ என்கிற பழமொழிக்கு ஏற்ப உங்களுக்கு சில வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக் கொடுக்கும்.

அறிவிலும், ஆற்றலிலும் சிறப்படையச் செய்யும். இல்லத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். அசையும், அசையாச் சொத்துக்களின் சேர்க்கை உண்டாகும். புதிய உறவுகள் கிடைக்கும். நல்ல செய்திகள் வந்தடைந்து உங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும். உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும்.

அதிகாரம் செய்யும் பதவிகளில் அமர்வீர்கள். பிள்ளைகளை வெளியூர் அல்லது வெளிநாட்டிற்கு அனுப்பிப் படிக்க வைப்பீர்கள். குல தெய்வ வழிபாட்டினை மேற்கொள்வீர்கள். உங்களுக்கு எதிராகப் போடப்பட்டிருந்த வழக்குகளிலிருந்து விடுபடுவீர்கள். ஆன்மிகத்தில் உயர்ந்தோரை சந்தித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். உங்களின் ஆன்மிக பலம் அதிகரிக்க புராண, இதிகாசங்களை நுணுக்கமாகக் கற்பீர்கள். உங்களின் பேச்சில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்களின் திறமைகளை வெளிப்படுத்த சரியான தருணங்கள் அமையும்.

உத்யோகஸ்தர்கள்

பதவி உயர்வு கிடைக்கும். வருமானம் நன்றாக இருக்கும். சக ஊழியர்களுடன் சுமுக நிலை தொடர்வதால் உங்களின் வேலைகள் குறித்த காலத்திற்குள் முடியும். மற்றபடி பிறரிடம் நன்கு யோசித்துப் பேசவும்.

வியாபாரிகள்

போட்டிகளையும், பொறாமைகளையும் சந்தித்தாலும் பொறுமையுடன் அவற்றை சமாளிப்பீர்கள். உங்களின் சமயோஜித புத்தியால் தேவையில்லாத பிரச்னைகளில் சிக்கிக்கொள்ளாமல் தப்பித்துக்கொள்வீர்கள். புதிய வாடிக்கையாளர்களையும், புதிய சந்தைகளையும் நாடிச் செல்வீர்கள். கொடுக்கல், வாங்கல் சாதகமாக இருக்கும்.

விவசாயிகள் நீர்வரத்து அதிகமாக இருப்பதால் தகுந்த நேரத்தில் விதைத்து வளம் பெறவும். விற்பனை நன்றாக இருக்கும். கால்நடைகளால் விரும்பிய பலனைப் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகள்

தாங்கள் சார்ந்துள்ள கட்சியின் தொண்டர்களுக்கும், நெருங்கியவர்களுக்கும் உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். உங்களின் கௌரவம் உயரும். சமுதாயத்தில் அந்தஸ்தான பதவிகளைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள். வருமானம் நன்றாக இருப்பதால் ரசிகர் மன்றங்களுக்கு செலவு செய்து மகிழ்வீர்கள். உங்களின் சிந்தனை தெளிவாக இருப்பதால் வெளிப்படையாக செயல்படுவீர்கள். சக கலைஞர்கள் உங்களுக்கு உதவிகளைச் செய்வார்கள்.

பெண்மணிகள்

குடும்பத்தில் அமைதி நிலவும். வெளியூர் அல்லது வெளிநாட்டிலிருந்து மகிழ்ச்சிகரமான செய்திகள் வந்து சேரும். கணவரை அனுசரித்து நடந்துகொள்வீர்கள். வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

மாணவமணிகள்

படிப்பில் வெற்றி வாகை சூடுவீர்கள். உங்களின் ஞாபக சக்தியும் அறிவாற்றலும் அதிகரிக்கும். பெற்றோரால் உங்களின் கோரிக்கைகள் நிறைவேறும்.

புனர்பூசம் - 4

நல்ல அறிமுகம் கிடைக்கப் பெற்று முன்னேற்றம் உண்டு. மாணவர்களுக்கு கேளிக்கையில் நாட்டம் அதிகரிக்கும். பெற்றோர்கள் பிள்ளைகளின் மீது தனிக்கவனம் செலுத்துவது நல்லது.

பூசம்

வெற்றிகளைக் குவித்து வாழ்வில் வசந்தம் வீசம். குடும்பத்தை சாராத ஒருவரால் தொழிலில் சிரமம் ஏற்பட்டு பின் மறையும். பதற்றத்தை தவிர்த்து நிதானத்தை கடைபிடியுங்கள்.

ஆயில்யம்

சிற்சில விரையங்கள் ஏற்பட்டாலும் அவை யாவுமே சுபச்செலவுகள் தான் என்பதை உணருங்கள். எனினும் பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்கள் தன்னம்பிக்கை, திறமை திறன் அதிகரிக்கும்.

பரிகாரம்

முடிந்தால் திருவண்ணாமலை அல்லது  பர்வதமலையை பௌர்ணமியன்று வலம் வரவும்.

சொல்ல வேண்டிய மந்திரம்

தினசரி லலிதா திரிசதி பாராயணம் செய்யவும்

மலர் பரிகாரம்

“அல்லி மலரை”  அம்பாளுக்கு திங்கள் தோறும் சாத்திவர குழப்பங்கள் அகலும். மனம் தெளிவடையும்

அதிர்ஷ்ட கிழமைகள்

வள்ர்பிறை: ஞாயிறு, திங்கள், வியாழன்

தேய்பிறை: ஞாயிறு, திங்கள், வெள்ளி