25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

புத ஆதித்ய யோகம் 

நான் பொறியியல் பட்டப்படிப்பு முடித்துள்ளேன். கடந்த மூன்று வருடங்களாக அரசு வேலைக்கு முயற்சி செய்து வருகிறேன். எனக்கு எப்பொழுது அரசு வேலை கிடைக்கும்? எதிர்காலம் எப்படி இருக்கும்? 

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:04 pm

DIN

நான் பொறியியல் பட்டப்படிப்பு முடித்துள்ளேன். கடந்த மூன்று வருடங்களாக அரசு வேலைக்கு முயற்சி செய்து வருகிறேன். எனக்கு எப்பொழுது அரசு வேலை கிடைக்கும்? எதிர்காலம் எப்படி இருக்கும்? 

வாசகர், அருப்புக்கோட்டை

உங்களுக்கு கடக லக்னம், கன்னி ராசி, அஸ்தம் நட்சத்திரம். லக்னாதிபதி தைரிய ஸ்தானத்தில் சுய சாரத்தில் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானாதிபதியான சூரிய பகவானுடனும், ஆட்சி உச்சம் மூலத் திரிகோணம் பெற்றிருக்கும் தைரிய ஸ்தானாதிபதியான புத பகவானுடனும், நீச்சபங்க ராஜயோகம் பெற்றிருக்கும் சுக்கிர பகவானுடனும் இணைந்திருக்கிறார். புத ஆதித்ய யோகமும் உண்டாகிறது. பூர்வ புண்ணிய, தொழில் ஸ்தானாதிபதியான செவ்வாய் பகவான் சுக ஸ்தானத்தில் ராகு பகவானுடன் இணைந்து அவர்களிருவரும் தொழில் ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார்கள். ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும், ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் ஐந்தாம் வீட்டில் அமர்ந்து ஒன்பது, பதினொன்று மற்றும் லக்னத்தைப் பார்வை செய்கிறார்.

இந்த ஆண்டு ஜூலை முதல் குரு பகவானின் தசை நடக்கத் தொடங்கி இருப்பதால் இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் அரசு அல்லது அரசு சார்ந்த துறைகளில் வேலை கிடைக்கும். அதுவரை தனியார் துறையில் வங்கி, காப்பீடு துறைகளில் வேலைக்குச் செல்வீர்கள். குரு மஹா தசையும், தொடரும் ஆட்சி பெற்றிருக்கும் சனிபகவானின் தசையும் யோக தசையாகச் செல்லும். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி வியாழக்கிழமைகளில் குரு பகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.