சுக்கிர தசையில் திருமணம்
எனது தங்கை மகள் சென்னையில் ஐடி நிறுவனத்தில் நல்ல வேலையில் இருக்கிறார். கை நிறைய சம்பாதிக்கிறார்.


எனது தங்கை மகள் சென்னையில் ஐடி நிறுவனத்தில் நல்ல வேலையில் இருக்கிறார். கை நிறைய சம்பாதிக்கிறார். வயது 34 ஆகிறது. கடந்த ஏழு ஆண்டுகளாக வரன் பார்த்தும் அமையவில்லை. அவருக்கு எப்பொழுது திருமணம் நடைபெறும்?
வாசகர், தூத்துக்குடி.
உங்கள் தங்கை மகளுக்கு சிம்ம லக்னம், கடக ராசி, ஆயில்ய நட்சத்திரம். லக்னாதிபதி சூரிய பகவான் குரு பகவானுடனும் (சிவராஜயோகம்) புத பகவானுடனும் ஆறாம் வீட்டில் இணைந்திருக்கிறார். இவர்களை பன்னிரண்டாம் வீட்டில் ஆட்சி பெற்றுள்ள சந்திர பகவான் பார்வை செய்கிறார். இதனால் புத ஆதித்ய யோகம், பெüர்ணமி யோகம், கஜகேசரி யோகம் ஆகிய சிறப்பான யோகங்கள் உண்டாகின்றன. மூன்று மற்றும் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிர பகவான் எட்டாம் வீட்டில் உச்சம் பெற்று பாக்கியாதிபதியான செவ்வாய் பகவானுடன் (தர்மகர்மாதிபதி யோகம்) இணைந்து இருக்கிறார். ஆறாம் வீட்டிற்கும் களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் மூன்றாம் வீட்டில் உச்சம்பெற்று கேது பகவானுடன் இணைந்திருக்கிறார். தற்சமயம் நடக்கும் சுக்கிர பகவானின் தசை அடுத்த ஆண்டு இறுதி வரை நடக்கும். இந்த காலக் கட்டத்திற்குள் சம அந்தஸ்திலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். வெளிநாடு சென்று பொருளீட்டும் யோகமும் உண்டு. பிரதி தினமும் விநாயகப் பெருமானை வழிபட்டு வரவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...