எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

வளமான எதிர்காலம்

என் மகன் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். அவருக்கு வேலையில் மாற்றம் ஏற்படுமா? திருமணம் எப்பொழுது நடைபெறும்? 

News image
Updated On :21 ஆகஸ்ட் 2020, 12:30 am

DIN


என் மகன் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். அவருக்கு வேலையில் மாற்றம் ஏற்படுமா? திருமணம் எப்பொழுது நடைபெறும்? 

வாசகர், சூளைமேடு.

உங்கள் மகனுக்கு மகர லக்னம், கன்னி ராசி, உத்திரம் நட்சத்திரம். லக்னம், குடும்பாதிபதியான சனிபகவான் லக்னத்தில் ஆட்சி பெற்று பஞ்ச மஹா புருஷ யோகங்களில் ஒன்றான சசமஹா யோகத்தைப் பெறுகிறார். பூர்வபுண்ணிய, தொழில் ஸ்தானாதிபதியான சுக்கிர பகவானும், ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும், பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான புத பகவானும் அஷ்டம ஸ்தானாதிபதியான உச்சம் பெற்றிருக்கும் சூரிய பகவானுடனும் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் அமர்ந்து இவர்கள் மூவரின் பார்வையும் பத்தாம் வீட்டின் மீது படிகிறது. மூன்றாம் வீட்டிற்கும், பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் எட்டாம் வீட்டிலமர்ந்து ஐந்தாம் பார்வையாக ராகு பகவானையும், ஏழாம் பார்வையாக குடும்ப ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக சுக ஸ்தானத்தையும் அங்கமர்ந்திருக்கும் சூரிய பகவானையும் (சிவராஜ யோகம்) தர்மகர்மாதிபதிகளான புத, சுக்கிர பகவான்களையும் பார்வை செய்கிறார். தற்சமயம் ராகு பகவானின் தசையில் கேது பகவானின் புக்தி நடப்பதால் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் படித்த பெண் அமைந்து திருமணம் கைகூடும். இன்னும் இரண்டாண்டுகளுக்குள் சிறப்பான வேலைக்குச் செல்வார். குடும்ப வாழ்க்கை, எதிர்காலம் வளமாக அமையும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.