சிறப்பான யோகங்கள்
என் மகனுக்கு அரசு வேலை எப்பொழுது கிடைக்கும்? திருமணம் எப்பொழுது செய்யலாம்? பரிகாரம் எதுவும் செய்ய வேண்டுமா?


என் மகனுக்கு அரசு வேலை எப்பொழுது கிடைக்கும்? திருமணம் எப்பொழுது செய்யலாம்? பரிகாரம் எதுவும் செய்ய வேண்டுமா?
-வாசகர், முடிச்சூர்.
உங்கள் மகனுக்கு மேஷ லக்னம், மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம். லக்னாதிபதி, எட்டாமதிபதியான செவ்வாய் பகவான் பன்னிரண்டாம் வீட்டில் நான்காமதிபதியுடனும், பத்து மற்றும் பதினொன்றாம் அதிபதியான சனிபகவானுடனும் இணைந்திருக்கிறார். இதனால் சந்திர மங்கள யோகம் உண்டாகிறது. பூர்வ புண்ணியாதிபதி சூரியபகவான், பாக்கியாதிபதி குருபகவான், ஆறாமதிபதியான புத பகவான், கேது பகவான்கள் ஆகியோர் பதினொன்றாம் வீடான லாப ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார்கள்.
சிவராஜயோகம், புத ஆதித்ய யோகம் ஆகிய சிறப்பான யோகங்கள் உண்டாகின்றன. அரசு கிரகங்களான சூரியன், குரு, செவ்வாய், சனி பகவான்கள் வலுத்திருப்பதால் இன்னும் இரண்டாண்டுக்குள் அரசு வேலை கிடைக்கும். அரசு வங்கி, காப்பீட்டு துறைகளிலும் முயற்சி செய்யலாம். அவரது 25-ஆம் வயதில் படித்த நல்ல வேலையிலுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி புதன்கிழமைகளில் பெருமாளை வழிபட்டு வரவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...