எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

யோகாதிபதியின் தசை

என் சகோதரர் மகன் இரண்டு முறை வீட்டை விட்டு காணாமல் போய் பின்னர் திரும்பி வந்தார். தற்சமயம் மறுபடியும் வீட்டை விட்டு சென்றுவிட்டார். அவர் எப்பொழுது திரும்பி வருவார்? 

News image
Updated On :28 ஆகஸ்ட் 2020, 12:30 am

DIN


என் சகோதரர் மகன் இரண்டு முறை வீட்டை விட்டு காணாமல் போய் பின்னர் திரும்பி வந்தார். தற்சமயம் மறுபடியும் வீட்டை விட்டு சென்றுவிட்டார். அவர் எப்பொழுது திரும்பி வருவார்? 

-வாசகர், சென்னை -12. 

உங்கள் சகோதரர் மகனுக்கு சிம்ம லக்னம், மேஷ ராசி, பரணி நட்சத்திரம். லக்னாதிபதி ஏழாம் வீட்டில் அமர்ந்து லக்னத்தைப் பார்வை செய்கிறார். ஐந்து, எட்டாம் வீட்டிற்கதிபதியான குரு பகவான் இரண்டாம் வீட்டில் அமர்ந்து ஐந்தாம் பார்வையாக ஆறாம் வீட்டில் அமர்ந்திருக்கும் சனி பகவானையும், ஏழாம் பார்வையாக எட்டாம் வீட்டில் அமர்ந்திருக்கும் புத, சுக்கிரபகவான்களையும், ஒன்பதாம் பார்வையாக பத்தாம் வீட்டில் அமர்ந்திருக்கும் கேது பகவானையும் பார்வை செய்கிறார். நான்கு, ஒன்பதாமதிபதி செவ்வாய் பகவான் பதினொன்றாம் வீட்டில் அமர்ந்து தற்சமயம் தசையை நடத்துகிறார். இது யோகாதிபதியின் தசையாக இருப்பதால் இந்த ஆண்டு இறுதிக்குள் அவர் வீடு திரும்பி வந்து, தகுதிக்குரிய வேலைக்குச் செல்வார். சனி பகவானும் சந்திர கேந்திரத்தில் ஆட்சி பெற்று சச மஹாயோகத்தைக் கொடுக்கிறார். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும், முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.