மமதா, ஸ்டாலினின் தோல்விக்கு எஸ்ஐஆர் பணிகளே காரணம்! ஆந்திர முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு!பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை: நீதிமன்றம்பவர்பிளேவில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி!உச்சநீதிமன்ற நீதிபதியாக 5 பேர் பரிந்துரை! தமிழகத்தைச் சேர்ந்த மோகனா!நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்! விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது!பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!பினராயி வீட்டில் சோதனை! அமலாக்கத்துறை வாகனம் மீது தாக்குதல்!
/

தீர்க்காயுள் உண்டு!

எனக்கு மூன்று மகன்கள். இருவருக்கு குழந்தை இல்லை, மூன்றாவது மகனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. என் மனைவியும் 20 ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோயால் இறந்து விட்டார்.

Updated On :4 டிசம்பர் 2020, 12:00 am IST


எனக்கு மூன்று மகன்கள். இருவருக்கு குழந்தை இல்லை, மூன்றாவது மகனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. என் மனைவியும் 20 ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோயால் இறந்து விட்டார். எனக்கு பேரன் பேத்திகளைப் பார்த்துவிட்டு இறக்கும் யோகம் உண்டா? ராகு மஹா தசை எவ்வாறு செல்லும்? ஆயுள் பற்றியும் கூறவும்! 

வாசகர், பானு நகர்.

உங்களுக்கு மீன லக்னம், விருச்சிக ராசி, கேட்டை நட்சத்திரம். லக்னம், பத்தாம் வீட்டுக்கதிபதியான குரு பகவான் பத்தாம் வீட்டில் மூலத் திரிகோணம் பெற்று ஐந்தாம் பார்வையாக இரண்டாம் வீட்டையும், ஏழாம் பார்வையாக நான்காம் வீட்டையும், ஒன்பதாம் பார்வையாக ஆறாம் வீட்டையும் அங்கமர்ந்திருக்கும் சூரிய பகவானையும் (சிவராஜயோகம்) ஆயுள் காரகரான சனி பகவானையும் பார்வை செய்கிறார். 

பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானாதிபதி சந்திர பகவான் பாக்கிய ஸ்தானத்தில் நீச்சம் பெற்றும், தன பாக்கியாதிபதி செவ்வாய் பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் நீச்சம் பெற்றிருப்பதும், இருவரும் நீச்ச பரிவர்த்தனை பெற்றிருப்பதாலும் இருவருக்கும் நீச்ச பங்க ராஜயோகம் உண்டாகிறது. 

ஆறாமதிபதி ஆறாம் வீட்டில் ஆட்சி, பன்னிரண்டாமதிபதி ஆறாம் வீட்டில் அமர்ந்திருப்பது இரண்டும் விபரீத ராஜயோகத்தைக் கொடுக்கிறது. ஆறாம் வீடு வலுத்திருந்தால் பல நற்பணிகளைச் செய்யும் வாய்ப்பு உண்டாகும். 

சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். அதிர்ஷ்ட வாய்ப்புகளுக்கும் இடமுண்டு. உற்றார் உறவினர்கள் நண்பர்களால் பலன் உண்டாகும். 

நான்காம் வீட்டிற்கும், பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான புத பகவான், பத்தாம் வீட்டில் ஆட்சி, உச்சம், மூலத் திரிகோணம் பெற்று நீச்சபங்க ராஜயோகம் பெற்றுள்ள சுக்கிர பகவானுடனும், கேது பகவானுடனும் இணைந்திருக்கிறார். 

உங்களுக்கு தற்சமயம் குரு பகவானின் வீட்டில் (லக்ன கேந்திரம்) அமர்ந்திருக்கும் ராகு பகவானின் தசையில் சூரிய பகவானின் புக்தி அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வரை நடக்கும். அதற்குப் பிறகு உங்களின் இரண்டு மகன்களுக்கும் புத்திரபாக்கியம் உண்டாகும். மூன்றாம் மகனுக்கும் திருமணம் கைகூடும். நீங்கள் பேரன் பேத்திகளோடு வாழ்ந்து, இறுதிக் காலம் அமைதியாகக் கழியும். தீர்க்காயுள் உண்டு. பிரதி தினமும் "நமசிவாய' என்று முடிந்தவரை ஜபித்து வரவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.