அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

திருமணம் கைகூடும்

எனது தம்பிக்கு வயது 41 ஆகிறது. பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த பல வருடங்களாக அவருக்கு பெண் பார்த்து வருகிறோம். ஆனால் இதுவரை பொருத்தமான பெண் அமையவில்லை.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:01 pm

தினமணி


எனது தம்பிக்கு வயது 41 ஆகிறது. பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த பல வருடங்களாக அவருக்கு பெண் பார்த்து வருகிறோம். ஆனால் இதுவரை பொருத்தமான பெண் அமையவில்லை. எனது தம்பிக்கு திருமணம் எப்பொழுது நடைபெறும்? பரிகாரம் ஏதும் செய்ய வேண்டுமா? 

வாசகி, கோவில்பட்டி. 

உங்கள் சகோதரருக்கு மிதுன லக்னம், கடக ராசி, பூசம் நட்சத்திரம். லக்னாதிபதி மற்றும் சுக ஸ்தானாதிபதியான புத பகவான் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சூரிய, குரு, சந்திர பகவான்களுடன் இணைந்திருக்கிறார். இதனால் அமாவாசை யோகம், புத ஆதித்ய யோகம், சிவராஜயோகம், சந்திர பகவான் இரண்டாம் வீட்டில் ஆட்சி பெற்றிருப்பதால் தேனு யோகம் ஆகிய சிறப்பான யோகங்கள் உண்டாகின்றன. பூர்வ புண்ணியாதிபதி, அயன ஸ்தானாதிபதியான சுக்கிர பகவான் லக்னத்தில் அமர்ந்திருப்பதும் சிறப்பு. அஷ்டம பாக்கியாதிபதியான சனி பகவான் தைரிய ஸ்தானத்தில் ராகு பகவானுடன் இணைந்து அவர்கள் இருவரின் பார்வை பாக்கிய ஸ்தானத்தின் மீது படிகிறது. சுக்கிர பகவான் நேர் பார்வையாக களத்திர ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். தற்சமயம் சுக்கிர பகவானின் தசையில் சூரிய புக்தி நடக்கிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் திருமணம் கைகூடும். பிரதி வியாழக்கிழமைகளில் குரு பகவானையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும். முடிந்தால் ஒருமுறை ஆலங்குடி சென்று வழிபட்டு வரவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.