எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

திருமணம் கைகூடும்

என் மகன் ஓசூரில் வேலை செய்து வருகிறார். 48 வயதாகிறது. இன்னும் திருமணம் ஆகவில்லை. அவருக்கு எப்பொழுது திருமணம் நடைபெறும்? 

News image
Updated On :25 செப்டம்பர் 2020, 11:32 am

தினமணி


என் மகன் ஓசூரில் வேலை செய்து வருகிறார். 48 வயதாகிறது. இன்னும் திருமணம் ஆகவில்லை. அவருக்கு எப்பொழுது திருமணம் நடைபெறும்? 

-வாசகி, கிருஷ்ணகிரி.

உங்கள் மகனுக்கு தனுசு லக்னம், விருச்சிக ராசி, கேட்டை நட்சத்திரம். லக்னத்தில் லக்னாதிபதி மூலத் திரிகோணம் பெற்று பஞ்சமஹா புருஷ யோகங்களில் ஒன்றான ஹம்ச யோகத்தைப் பெறுகிறார். குருபகவானின் ஐந்தாம் பார்வை புத்திர ஸ்தானத்தையும், ஏழாம் பார்வை களத்திர ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வை பாக்கிய ஸ்தானத்தையும் அங்கு ஆட்சி பெற்று அமர்ந்திருக்கும் பாக்கியாதிபதியான சூரிய பகவானையும் (சிவராஜ யோகம்), புத்திர ஸ்தானாதிபதியான செவ்வாய் பகவானையும் (குரு மங்கள யோகம்), களத்திர நட்பு ஸ்தானாதிபதி மற்றும் தொழில் ஸ்தானாதிபதியான புத பகவானையும் பார்வை செய்கிறார். பாக்கிய ஸ்தானத்தில் தர்மகர்மாதிபதி யோகம் உண்டாகியிருப்பதும் சிறப்பாகும். தற்சமயம் சந்திர மஹா தசையில் இறுதிப்பகுதி நடப்பதால் இந்த ஆண்டே தகுதியான பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி வியாழக்கிழமைகளில் குரு பகவானையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.