ராமபிரானை வழிபடவும்
என் மகள் பொறியியல் (சிவில்) படிப்பு முடித்து, மத்திய அரசு வேலைக்கு முயற்சித்து வருகிறார். எப்பொழுது அரசு வேலை கிடைக்கும்?


என் மகள் பொறியியல் (சிவில்) படிப்பு முடித்து, மத்திய அரசு வேலைக்கு முயற்சித்து வருகிறார். எப்பொழுது அரசு வேலை கிடைக்கும்?
-வாசகர், வடலூர்.
உங்கள் மகளுக்கு துலாம் லக்னம், மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம். லக்னாதிபதி நீச்சம் பெற்றிருந்தாலும், சந்திர பகவான் குரு பகவானின் கேந்திரத்தில் இருப்பதாலும் (நீச்சன் எங்கு உச்சமடைவாரோ அந்த வீட்டுக்குரிய கிரகமான சனி பகவான் சந்திர கேந்திரத்தில் இருப்பதாலும்) செவ்வாய் பகவானுக்கு நீச்ச பங்க ராஜயோகமுண்டாகிறது. அவருடன் களத்திர நட்பு ஸ்தானாதிபதியான சுக்கிர பகவானும் இணைந்திருக்கிறார். சனி பகவான் ஆறாம் வீட்டில் சந்திர, கேது பகவான்களுடன் இணைந்திருக்கிறார். லாபாதிபதியான சூரிய பகவான் பன்னிரண்டாம் வீட்டில் ராகு பகவானுடன் இணைந்திருக்கிறார். குரு பகவான் மூன்றாம் வீட்டில் மூலத் திரிகோணம் பெற்றமர்ந்து ஐந்தாம் பார்வையாக களத்திர நட்பு ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக பாக்கிய ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக லாப ஸ்தானத்தையும் அங்கமர்ந்திருக்கும் புத பகவானையும் பார்வை செய்கிறார். தற்சமயம் புத பகவானின் தசையில் சனி பகவானின் புக்தி இன்னும் ஒன்றரை ஆண்டு நடக்கும். இந்த காலகட்டத்திற்குள் அரசு அல்லது அரசு சம்பந்தப்பட்ட வேலை கிடைக்கும். பிரதி புதன்கிழமைகளில் ராமபிரானை வழிபட்டு வரவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...