எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

வெளிநாடு செல்லும் யோகமுண்டு!

என் மகனின் ஜாதகத்தில் என்ன யோகம் உள்ளது? வக்கீலுக்கு படித்து வருகிறார். இந்தத் துறையில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படுமா? 

News image
Updated On :25 செப்டம்பர் 2020, 11:36 am

DIN


என் மகனின் ஜாதகத்தில் என்ன யோகம் உள்ளது? வக்கீலுக்கு படித்து வருகிறார். இந்தத் துறையில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படுமா? 

-வாசகர், தூத்துக்குடி.

உங்கள் மகனுக்கு விருச்சிக லக்னம், கும்ப ராசி, பூரட்டாதி நட்சத்திரம். லக்னாதிபதி லக்னத்தில் ஆட்சி பெற்று பஞ்ச மஹா புருஷ யோகங்களிலொன்றான ருசக யோகத்தைக் கொடுக்கிறார். அவருடன் தொழில் ஸ்தானாதிபதியான சூரிய பகவானும் இணைந்திருக்கிறார். தனம், பூர்வ புண்ணியாதிபதியான குரு பகவான் பன்னிரண்டாம் வீட்டில் அமர்ந்து ஐந்தாம் பார்வையாக சுக ஸ்தானத்தையும் (கல்வி ஸ்தானம்) அங்கமர்ந்திருக்கும் சுகாதிபதி சனிபகவான் (சச மஹா யோகம்) பாக்கியாதிபதி சந்திர பகவான் (குருச் சந்திர யோகம்) ஆகியோரையும், ஆறாம் வீட்டையும், எட்டாம் வீட்டையும் பார்வை செய்கிறார். குரு பகவான் நவாம்சத்தில் தன் மூலத் திரிகோண வீடான தனுசு ராசியை அடைகிறார். குரு பகவானுடன் விபரீத ராஜயோகம் பெற்ற புத, சுக்கிர பகவான்களும் இணைந்திருக்கிறார்கள். சூரிய, செவ்வாய், குரு பகவான்கள் அரசு கிரகங்களாவார்கள். இதனால் சட்டத் துறையில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். வெளிநாடு சென்று வரும் யோகமும் உண்டு. எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி புதன்கிழமைகளில் பெருமாளையும், தாயாரையும் வழிபட்டு வரவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.