ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

என் தம்பி மகன் வெளிநாட்டில் வேலை செய்து திரும்பிவிட்டார். அவருக்கு உள்ளூரில் வேலை அமையுமா அல்லது மறுபடியும் வெளிநாட்டு வேலை கிடைக்குமா? திருமணம் எப்பொழுது நடக்கும்?

என் தம்பி மகன் வெளிநாட்டில் வேலை செய்து திரும்பிவிட்டார். அவருக்கு உள்ளூரில் வேலை அமையுமா அல்லது மறுபடியும் வெளிநாட்டு வேலை கிடைக்குமா? திருமணம் எப்பொழுது நடக்கும்?

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 6:30 pm

DIN

என் தம்பி மகன் வெளிநாட்டில் வேலை செய்து திரும்பிவிட்டார். அவருக்கு உள்ளூரில் வேலை அமையுமா அல்லது மறுபடியும் வெளிநாட்டு வேலை கிடைக்குமா? திருமணம் எப்பொழுது நடக்கும்?

-வாசகர், அந்தியூர். 

உங்கள் தம்பி மகனுக்கு விருச்சிக லக்னம், மகர ராசி, திருவோணம் நட்சத்திரம். லக்னாதிபதி, ஆறாமதிபதி செவ்வாய் பகவான் நீச்சம் அடைந்து உச்சம் பெற்ற குரு பகவானுடன் இணைந்து நீச்சபங்க ராஜயோகம் பெற்று, களத்திர நட்பு ஸ்தானாதிபதியுடன் இணைந்திருக்கிறார். 
தைரிய, சுகாதிபதியான சனி பகவான் தைரிய ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்று சந்திர பகவானுடன் இணைந்திருக்கிறார். குரு மங்கள யோகம், சந்திர மங்கள யோகம், கஜகேசரி யோகம் ஆகிய சிறப்பான யோகங்கள் உண்டாகின்றன. தொழில் ஸ்தானாதிபதி சூரிய பகவானும், லாபாதிபதி புத பகவானும் களத்திர நட்பு ஸ்தானத்தில் அமர்ந்திருப்பது சிறப்பு. 
புத்திர, தன காரகராகிய குரு பகவான் பாக்கிய ஸ்தானத்தில் ருணம், ரோகம், சத்ரு ஸ்தானாதிபதியான செவ்வாய் பகவானுடன் இணைந்திருப்பதால் எந்த வியாதியும் நிரந்தரமல்ல. தற்சமயம் ராகு பகவானின் தசையில் சந்திர பகவானின் புக்தி நடப்பதால், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் உள்ளூரிலேயே வேலைக்குச் செல்வார். 
2025 -ஆம் ஆண்டுக்குப் பிறகு மறுபடியும் வெளிநாடு சென்று பொருளீட்டும் யோகமும் உண்டாகும். 2023 -ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குப் பிறகு திருமணம் நடக்கும். 
பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.