செந்தில் பாலாஜி, எஸ். பி. வேலுமணி வேட்புமனுக்கள் ஏற்பு!வட கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஏர் இந்தியா டிக்கெட் விலை ரூ.25 ஆயிரம் வரை உயரும் வாய்ப்பு!ஏப். 9ல் புதுவை ஜிப்மர் மருத்துவமனை இயங்காது என அறிவிப்பு!2021 தேர்தல் வாக்குறுதிகளில் 97% நிறைவேற்றம்: பினராயி விஜயன்கோபி தொகுதியில் செங்கோட்டையனின் வேட்புமனு நிறுத்திவைப்பு!திருச்சி கிழக்கிலும் விஜய் வேட்புமனு ஏற்பு! முதல்வர் வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுவும் ஏற்பு!
/

எப்பொழுது மறுமணம் ஆகும்... பரிகாரம் என்ன செய்யலாம்... நட்சத்திரம் சதயமா...

என் மகன் எம்எஸ்சி., எம்.டெக். படித்து பெரிய வேலையில் உள்ளார். அவருக்கு உடல், மனம் முதிர்ச்சி பெறாத பெண்ணை திருமணம் செய்து கொடுத்து பின் ஒதுங்கி விட்டனர். பல லட்சம் செலவு செய்து வைத்தியம் பார்த்தோம்.

Updated On :4 ஜூன் 2021, 2:11 pm

என் மகன் எம்எஸ்சி., எம்.டெக். படித்து பெரிய வேலையில் உள்ளார். அவருக்கு உடல், மனம் முதிர்ச்சி பெறாத பெண்ணை திருமணம் செய்து கொடுத்து பின் ஒதுங்கி விட்டனர். பல லட்சம் செலவு செய்து வைத்தியம் பார்த்தோம். ஒரு மாற்றமும் இல்லை. பின்பு உண்மை நிலை டாக்டர் மூலம் தெரிந்தது. அதனடிப்படையில் சட்டப்படி விவாகரத்து பெற்றோம். எப்பொழுது மறுமணம் ஆகும்... பரிகாரம் என்ன செய்யலாம்... நட்சத்திரம் சதயமா... பூரட்டாதியா... விளக்கவும். மகன் வாழ்வு மலர வழி காட்டுங்கள்... 

வாசகர், திருவள்ளூர்.

உங்கள் மகனுக்கு மிதுன லக்னம், கும்ப ராசி, பூரட்டாதி நட்சத்திரம் ஒன்றாம் பாதம் என்று வருகிறது. சதய நட்சத்திரம் முடிந்து பூரட்டாதி நட்சத்திரம் தொடங்கும் காலத்தில் பிறந்திருப்பதால் சில பஞ்சாங்கங்களின் கணக்குகளில் வித்தியாசம் உள்ளதால் முன் நட்சத்திரமா அல்லது பின் நட்சத்திரமா என்ற குழப்பம் உண்டாகிறது. 
இந்த வித்தியாசத்தை ஜோதிடர்கள் அறிவார்கள். பலன்களைக் கூறும் நேரத்தில் இரண்டு நட்சத்திரங்களையும் கருத்தில் கொண்டு பலன் 
கூறுவார்கள். 
லக்னம், நான்காம் வீட்டிற்கும் அதிபதியான புத பகவான் பன்னிரண்டாம் வீட்டில் மறைவு பெற்று கேந்திராதிபத்ய தோஷம் நீங்கப் பெறுகிறார். -மறைந்த புதன், நிறைந்த மதி, நிறைந்த நிதி- என்கிற ஜோதிட விதிமுழுமையாக வேலை செய்யும் என்று கூற வேண்டும். 
பன்னிரண்டாம் வீட்டில் தைரிய ஸ்தானாதிபதி சூரிய பகவான் சுய சாரத்தில் (கிருத்திகை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மீன ராசியை அடைகிறார். புத பகவானும் சூரிய பகவானின் சாரத்தில் அமர்ந்து, நவாம்சத்தில் கும்ப ராசியை அடைகிறார். சூரிய, புத பகவான்கள் மிக அருகில் (3 பாகை வித்தியாசம்) சேர்ந்திருப்பது புத ஆதித்ய யோகம், நிபுணத்துவ யோகத்தைக் கொடுக்கிறது. 
இந்த யோகத்தால் ஒருவர், தான் சார்ந்திருக்கும் துறையில் உள்ள நுணுக்கங்களை சிறிய முயற்சியிலேயே முழுமையாகப் புரிந்துகொண்டு விடும் ஆற்றல் உண்டாகும்.
பன்னிரண்டாம் வீட்டில் ஆட்சி பெற்ற சுக்கிர பகவானும், சூரிய பகவானின் சாரத்தில் அமர்ந்து நவாம்சத்தில் மகர ராசியை அடைகிறார். ருணம் ரோகம் சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும், லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் பகவான் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் நீச்சபங்க ராஜயோகம் பெற்று நவாம்சத்தில் கன்னி ராசியை அடைகிறார். 
அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும், பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான சனி பகவான் செவ்வாய் பகவானுடன் சுய சாரத்தில் (பூசம் நட்சத்திரம்) இணைந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார். களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும், தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் சுக்கிர பகவானின் சாரத்தில் (பரணி நட்சத்திரம்) கேது பகவானுடன் பரணி நட்சத்திரத்தில் ஒரே பாகையில் இணைந்து அவர்கள் இருவரும் கன்னி ராசியை அடைகிறார்கள். 
ராகு பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுய சாரத்தில் அமர்ந்து நவாம்சத்தில் மீன ராசியை அடைகிறார். குரு பகவானின் ஐந்தாம் பார்வை தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டின் மீதும், ஏழாம் பார்வை பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டின் மீதும் அங்கமர்ந்திருக்கும் ராகு பகவானின் மீதும் படிகிறது. 
இதனால் புத்திர ஸ்தானத்திற்கு ராகு பகவானால் ஏற்பட்டுள்ள சிறு குறையும் நீங்கிவிடுகிறது. 
குருபகவானின் ஒன்பதாம் பார்வை களத்திர நட்பு ஸ்தானம் மற்றும் தன் மூலத்திரிகோண வீடான தனுசு ராசியின் மீது படிகிறது. குரு பகவான் களத்திர நட்பு ஸ்தானத்திற்கு ஐந்தாம் வீட்டிலும், கர்ம ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கு இரண்டாம் வீட்டிலும் அமர்ந்திருப்பது பாவாத் பாவ அடிப்படையில் உயர்வானது. 
குருபகவான் தன காரகர். பரந்த உலக ஞானத்திற்கும் காரகர். குடும்பத்தில் மக்களை பிரதிபலிப்பவர். அரசாங்கத்தில் உயர் பதவி யோகம், ஏன்... ராஜ முத்திராதிகாரி போன்ற சிறப்புகளையும் உடையவர். 
"ஏகாதச பிரகஸ்பதி' என்று பதினொன்றாம் வீட்டு குரு பகவானை ஜோதிடம் சிலாகித்து கூறுகிறது. 
தற்சமயம் புத பகவானின் தசையில் குரு பகவானின் புக்தி நடக்கத் தொடங்கியுள்ளது. இந்த காலகட்டத்தில் படித்த நல்ல வேலையிலுள்ள பெண் அமைந்து மறுமணம் நடக்கும். 
குடும்ப ஸ்தானத்திற்கு ஏற்ற சமதோஷம் பார்த்து சேர்த்தால் போதுமானது. பிரதி வியாழக்கிழமைகளில் குரு பகவானையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.