48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை! சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு ஏப். 7 விசாரணை இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

எங்களது பூர்வீக வீட்டை இடித்து விட்டு, புதிதாகக் கட்டினால் என் மகனுக்கு திருமணம் ஆகும் என்றார்கள். இடித்து புது வீட்டைக் கட்டியும் திருமணம் ஆகாததால் அதை விற்றுவிடும்படி கூறுகிறார்கள். இது சரியா? அவருக்கு எப்பொழுது திருமணம் நடக்கும்? எதிர்காலம் எவ்வாறு அமையும்? 

எங்களது பூர்வீக வீட்டை இடித்து விட்டு, புதிதாகக் கட்டினால் என் மகனுக்கு திருமணம் ஆகும் என்றார்கள். இடித்து புது வீட்டைக் கட்டியும் திருமணம் ஆகாததால் அதை விற்றுவிடும்படி கூறுகிறார்கள். இது சரியா? அவருக

Updated On :8 அக்டோபர் 2021, 1:25 pm

எங்களது பூர்வீக வீட்டை இடித்து விட்டு, புதிதாகக் கட்டினால் என் மகனுக்கு திருமணம் ஆகும் என்றார்கள். இடித்து புது வீட்டைக் கட்டியும் திருமணம் ஆகாததால் அதை விற்றுவிடும்படி கூறுகிறார்கள். இது சரியா? அவருக்கு எப்பொழுது திருமணம் நடக்கும்? எதிர்காலம் எவ்வாறு அமையும்? 

-லட்சுமி, மதுரை.

உங்கள் மகனுக்கு கன்னி லக்னம், மகர ராசி உத்திராடம் நட்சத்திரம். லக்னாதிபதி, தொழில் ஸ்தானாதிபதி புத பகவான் பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டில் செவ்வாய் பகவானின் சாரத்தில் (அவிட்டம் நட்சத்திரம்) அமர்ந்து, நவாம்சத்தில் தன் ஆட்சி, உச்சம், மூலத்திரிகோண வீடான கன்னி ராசியை அடைகிறார். 
புத பகவான் சுப கிரகமாகி கேந்திராதிபத்ய தோஷம் நீங்கப் பெற்று ராசியிலும், நவாம்சத்திலும் சிறப்பான சுப பலம் பெற்றிருக்கிறார். புத பகவான் வியாபார காரகருமாவார். இதனால் எல்லா வித வியாபாரமும் லாபம் தரும். புத்திசாலித்தனமும் கூடும். உற்றார்  உறவினர்களின் ஆதரவும் குறிப்பாக மாமன் (புத பகவானை மாதுல காரகர் என்றழைப்பார்கள்) வழி உறவுகளாலும் நன்மை உண்டாகும். 
பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும், ருணம் (கடன்), ரோகம் (வியாதி), சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும் அதிபதியான சனி பகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் ராகு பகவானின் சாரத்தில் (திருவாதிரை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மீன ராசியை அடைகிறார். 
"பத்தில் ஒரு பாபி' என்பது ஜோதிட விதி. இதனால் செய்தொழிலில் படிப்படியான வளர்ச்சி உண்டாகும். சனி பகவான் நன்றாக உழைக்க வைத்து அதற்குரிய வருமானத்தையும் சரியாக ஈட்டித் தருவார். 
தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும், பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிர பகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் புத பகவானின் சாரத்தில் (ரேவதி நட்சத்திரம்) உச்சம் பெற்று, நவாம்சத்தில் மகர ராசியை அடைகிறார். 
இரண்டு தன ஸ்தானங்களுக்கு அதிபதி ஏழாம் வீட்டில் உச்சம் பெறுவது சிறப்பு. அதோடு சுக்கிர பகவானின் காரகத்துவங்களான பயிர்த்தொழில், பால், அரிசி, பட்டு, சர்க்கரை ஆலை, கலைத்துறை, வண்டி, கால்நடைகளால் வருமானம் போன்றவைகளாலும் நன்மை உண்டாகும். 
தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும், அஷ்டம, ஆயுள் ஸ்தானமுமான எட்டாம் வீட்டிற்குமதிபதியான செவ்வாய் பகவான் பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானத்தில் சந்திர பகவானின் சாரத்தில் (திருவோணம் நட்சத்திரம்) உச்சம் பெற்றமர்ந்து, நவாம்சத்தில் தன் மூலத்திரிகோண வீடான மேஷ ராசியை அடைகிறார். 
சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும், களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்குமதிபதியான குரு பகவான் களத்திர நட்பு ஸ்தானத்திலேயே சனி பகவானின் சாரத்தில் (உத்திரட்டாதி நட்சத்திரம்) ஆட்சி பெற்றமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார். 
குரு பகவான் ஐந்தாம் பார்வையாக லாப ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக லக்னத்தையும், ஒன்பதாம் பார்வையாக தைரிய ஸ்தானத்தையும் அங்கமர்ந்திருக்கும் ராகு பகவானையும் பார்வை செய்கிறார். 
லாபாதிபதியான சந்திர பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரிய பகவானின் சாரத்தில் (உத்திராடம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கும்ப ராசியை அடைகிறார். 
லாபாதிபதி லாப ஸ்தானத்தைப் பார்வை செய்வதும் தன யோகமாகும். அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கதிபதியான சூரிய பகவான் ஆறாம் வீட்டில் குரு பகவானின் சாரத்தில் (பூரட்டாதி நட்சத்திரம்) விபரீத ராஜயோகம் (பன்னிரண்டாமதிபதி ஆறாம் வீட்டில் அமர்ந்திருப்பது) பெற்றமர்ந்திருக்கிறார். 
மூன்றாம் வீட்டில் ராகு பகவான் அமர்ந்து நவாம்சத்தில் துலாம் ராசியிலும், ஒன்பதாம் வீட்டில் கேது பகவான் அமர்ந்து நவாம்சத்தில் மேஷ ராசியிலும் இணைந்திருக்கிறார்கள். 
திருமணத்திற்கும், பூர்வீக வீட்டிற்கும் சம்பந்தப்படுத்துவது தவறு. பூர்வீகச் சொத்து நிலைக்க ஒன்பதாம் வீடும், ஒன்பதாமதிபதியும், சூரிய பகவானும் காரணமாகிறார்கள். 
அதோடு குரு பகவானுக்கும் சுபத்துவம் ஏற்பட்டால் பூர்வீக வீட்டில் பரம்பரை பரம்பரையாக வாழலாம். சூரிய பகவான் குரு பகவானின் சாரத்தில் அமர்ந்திருப்பதும், சுக்கிர பகவான் உச்சம் பெற்று குரு பகவானுடன் இணைந்திருப்பதும், ஒன்பதாம் வீட்டில் கேது பகவான் லாபாதிபதியான சந்திர பகவானின் சாரத்தில் இருப்பதும் சிறப்பு. 
இதனால் உங்கள் மகன் பூர்வீக நிலத்தில் நீங்கள் கட்டியுள்ள வீட்டில் சீரும் சிறப்புமாக வாழ்வார். அதை விற்கவும் வேண்டாம். அவருக்கு களத்திர நட்பு ஸ்தானத்தில் ஒரு ஆட்சி கிரகம், ஒரு உச்ச கிரகம் (ஹம்ச யோகம், மாளவிகா யோகம்) அமர்ந்திருப்பதால் அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் (குரு மஹா தசையில் சுக்கிர பகவானின் புக்தி முடிவதற்குள்), அந்நியத்தில் வடகிழக்கு திசையிலிருந்து பெண் அமைந்து திருமணம் கைகூடும். எதிர்காலம் வளமாக அமையும். பிரதி வெள்ளிக்கிழமைகளில் மஹாலட்சுமியை வழிபட்டு வரவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.