சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

என் 34 வயது வரை வேலையில் இருந்தேன். அதற்குப் பிறகு சுக்கிர தசையில் தொழில் தொடங்கினேன். சிறப்பாக நடந்தது. நான்கு வீடுகள் வாங்கினேன். நடுவில் நீரிழிவு நோய் வந்து மூன்று வருடங்கள் கஷ்டப்பட்டேன்.

என் 34 வயது வரை வேலையில் இருந்தேன். அதற்குப் பிறகு சுக்கிர தசையில் தொழில் தொடங்கினேன். சிறப்பாக நடந்தது. நான்கு வீடுகள் வாங்கினேன். நடுவில் நீரிழிவு நோய் வந்து மூன்று வருடங்கள் கஷ்டப்பட்டேன்.

Updated On :29 அக்டோபர் 2021, 1:28 pm

என் 34 வயது வரை வேலையில் இருந்தேன். அதற்குப் பிறகு சுக்கிர தசையில் தொழில் தொடங்கினேன். சிறப்பாக நடந்தது. நான்கு வீடுகள் வாங்கினேன். நடுவில் நீரிழிவு நோய் வந்து மூன்று வருடங்கள் கஷ்டப்பட்டேன். வேறு தொழிலும் சேர்த்துச் செய்தேன். 2014-ஆம் ஆண்டில் இருந்து தொழிலில் நஷ்டம் உண்டாகத் தொடங்கி, நான்கு வீடுகளையும் விற்ற பிறகும் கடன் உள்ளது. மிகவும் மன உளைச்சலில் உள்ளேன். குடும்பத்திலும் அமைதி இல்லை. என் நிலைமை எப்பொழுது சரியாகும்? மறுபடியும் தொழில் எப்பொழுது தொடங்கலாம்? சரியான வழி காட்டவும்... 

-வாசகர், சென்னை.

உங்களுக்கு கும்ப லக்னம் மீன ராசி உத்திரட்டாதி நட்சத்திரம். லக்னாதிபதி, அயன ஸ்தானாதிபதியான சனி பகவான் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் குரு பகவானின் சாரத்தில் (பூரட்டாதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கடக ராசியை அடைகிறார். பொதுவாக கும்ப லக்னத்திற்கு சனி பகவான் விரயாதிபதியாவதால் வாழ்வின் பிற்பகுதியில் நல்ல செல்வமும், செல்வாக்கும் தேடிவரும். தெய்வ பலமும் தெய்வீக நம்பிக்கையும், தர்ம குணமும் இயல்பிலேயே அமைவதால் முதலில் ஏமாற்றப்பட்டாலும் பிற்காலத்தில் சுகபோகத்துடன் வாழும் நிலை உறுதியாக ஏற்படும்.
சனி பகவான் உழைப்புக்கு காரகம் பெறுவதால் தளராத உழைப்பினால் செய்தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானத்தில் செவ்வாய் பகவானின் சாரத்தில் (மிருகசீரிஷ நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் விருச்சிக ராசியை அடைகிறார்.
குரு பகவானின் ஐந்தாம் பார்வை பாக்கியஸ்தானமான ஒன்பதாம் வீட்டின் மீதும், ஏழாம் பார்வை லாப ஸ்தானமான தன் மூலத்திரிகோண வீடான தனுசு ராசியின் மீதும்,  ஒன்பதாம் பார்வை லக்னத்தின் மீதும், அங்கமர்ந்திருக்கும் சுக்கிர பகவானின் மீதும் படிகிறது.
தன காரகர் மூன்றாவது தன ஸ்தானமான பதினொன்றாம் வீட்டை (தனது வீடும் ஆகிறது) பார்வை செய்வது சிறப்பாகும். 
பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும், அஷ்டம, ஆயுள், புதையல் ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான புத பகவான், தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டில் சனி பகவானின் சாரத்தில் (உத்திரட்டாதி நட்சத்திரம்) நீச்சம் பெற்று நவாம்சத்தில் தன் ஆட்சி, உச்ச, மூலத்திரிகோண வீடான கன்னி ராசியை அடைகிறார்.
அதோடு புத பகவான் தன ஸ்தானத்திலிருந்து கன்னி ராசியைப் பார்ப்பது சிறப்பு. சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும், பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்குமதிபதியான சுக்கிர பகவான் லக்னத்தில் ராகு பகவானின் சாரத்தில் (சதய நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மீன ராசியில் உச்சமடைகிறார்.
பூர்வ புண்ணியாதிபதி, பாக்கியாதிபதி ஆகிய இரண்டு திரிகோணாதிபதிகள் நவாம்சத்தில் உச்சம் பெற்றிருப்பது மேன்மையாகும். தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும், தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்குமதிபதியான செவ்வாய் பகவான், மூன்றாம் வீட்டில் கேது பகவானின் சாரத்தில் (அசுவினி நட்சத்திரம்) மூலத் திரிகோணம் பெற்றமர்ந்து நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார். 
தொழில் ஸ்தானாதிபதி பலம் பெற்றிருப்பது உன்னதம். ருணம் (கடன்), ரோகம் (வியாதி), சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கதிபதியான சந்திர பகவான், இரண்டாம் வீட்டில் சனி பகவானின் சாரத்தில் (உத்திரட்டாதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் துலாம் ராசியை அடைகிறார்.
களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கதிபதியான சூரிய பகவான், மூன்றாம் வீட்டில் கேது பகவானின் சாரத்தில் (அசுவினி நட்சத்திரம்) உச்சம் பெற்று நவாம்சத்தில் ரிஷப ராசியை அடைகிறார். ஏழு, பத்து ஆகிய இரண்டு கேந்திர வீடுகளுக்கு அதிபதிகளான சூரிய, செவ்வாய் பகவான்கள், உச்சம், ஆட்சி பெற்று இருப்பது சிறப்பாகும். அசுப கிரகங்கள் கேந்திர வீடுகளுக்கு அதிபதிகளாக வருவதும் மேன்மை.
ராகு பகவான் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் சூரிய பகவானின் சாரத்தில் (கிருத்திகை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மகர ராசியை அடைகிறார்.
கேது பகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் குரு பகவானின் சாரத்தில் (விசாகம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கடக ராசியை அடைகிறார்.
பொதுவாக சனி, சுக்கிரன், ராகு, கேது பகவான்கள் தங்களின் பிற்கூறிலேயே சுப பலன்களைத் தருவார்கள் என்பது அனுபவ உண்மை.
உங்களுக்கு முதல் பத்து வருடங்கள் சிறப்பாக செயல்பட்டதைக் காண்கிறோம். தொழில் ஸ்தானாதிபதி ஆட்சி பெற்று, உச்சம் பெற்ற சூரிய பகவானுடன் இணைந்திருக்கிறார். அதோடு "பத்தில் ஒரு பாபி' என்கிற ஜோதிட வழக்கிற்கேற்ப தொழில் ஸ்தானத்தில் கேது பகவான் அமர்ந்திருப்பது சிறப்பு.
இந்த ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து சந்திர மஹா தசை நடக்கத் தொடங்கியுள்ளது. இதில் சுய புக்தி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரையில் நடக்கும்.
அதற்கு பிறகு மறுபடியும் தொழில் தொடங்கலாம். வெற்றி பெறுவீர்கள். பிரதி திங்கள்கிழமைகளில் அம்மனை வழிபட்டு வரவும். எதிர்காலம் ஏற்றமாகவே அமையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.