இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் இப்படித்தான் இருப்பார்களாம்! உங்கள் நட்சத்திரம் என்ன?

அழகானவர்கள், அன்பானவர்கள், ஈகை குணம் கொண்டவர்கள், காதல் உணர்வு அதிகமானவர்கள், பக்திமான்கள்
இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் இப்படித்தான் இருப்பார்களாம்! உங்கள் நட்சத்திரம் என்ன?

அசுவினி – அழகானவர்கள், அன்பானவர்கள், ஈகை குணம் கொண்டவர்கள், காதல் உணர்வு அதிகமானவர்கள், பக்திமான்கள்.

பரணி – நகை, பணம் மற்றும் பொருள்ரீதியான போகம் விரும்புவார்கள், பெரியவர்களை மதிப்பார்கள், தந்தை மீது மிகுந்த பாசம் உடையவர்கள்.

கிருத்திகை – அதிகப் பற்று இல்லாதவர்கள், மூத்தோர் சொல் கேட்பவர்கள், அன்புக்கு கட்டுப்படுபவர்கள், அதீத காதல் உணர்வு
கொண்டவர்கள்.

ரோகிணி – நேர்மையானவர்கள், உழைப்பாளிகள், பாசம் உடையவர்கள், பணம் படைத்தவர்கள், தான தர்மங்களில் ஈடுபாடு
கொண்டவர்கள்.

மிருகசீரிசம் – ஆடை அணிகலன்களில் விருப்பம் உடையவர்கள், சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வுடையவர்கள், சுவையான உணவு விரும்புவர்கள், பணம் படைத்தவர்கள்.

திருவாதிரை – முன் கோபம் கொண்டவர்கள், பழிக்கு பழி வாங்கும் எண்ணம் அதிகம் உள்ளவர்கள்

புனர்பூசம் – மென்மையான குணம்முடையவர்கள், செல்வாக்கு உடையவர்கள், அன்பானவர்கள், எளிமையைக் கடைப்பிடிப்பவர்கள். 

பூசம் – சுகவாசிகள். உணவில் அதிக நாட்டமுடையவர்கள். ஆடை அணிகலன்களில் விருப்பம் உடையவர்கள். புகழ் விரும்பிகள். பணம் சொத்து படைத்தவர்கள்

ஆயில்யம் – அலுப்பும் சலிப்பும் உள்ளவர்கள், கோப ஆவேத்தில் தகாத வார்த்தைகளை பிரயோகிப்பவர்கள், எதற்கும் துணிந்தவர்கள்.

மகம் – யோகக் காரர்கள், தம்மை விட உயர்ந்தவர்களிடம் பணிவுடன் நடப்பார்கள்

பூரம் – தூய்மையான எண்ணம் கொண்டவர்கள், குழந்தைகளை விரும்புபவர்கள், நட்புக்கு இலக்கணம் வகுப்பவர்கள்.

உத்திரம் – மக்கள் பேறு, செல்வம், செல்வாக்கும் போன்றவற்றுக்கு குறைவில்லாதவர்கள். காதல் உணர்வு மிக்கவர்கள், குடும்பத்தை பாதுகாப்பவர்கள்

அஸ்தம் – அழகானவர்கள், அழகுணர்வு மிக்கவர்கள், கலைஞர்களாக இருப்பார்கள், சுக போகம் வேண்டுவோர்கள்.

சித்திரை – வசீகரமாக இருப்பார்கள். அழகியல் உணர்வு அதிகம் இருக்கும். ஆடை அணிகலன்களில் நாட்டமுடையவர்கள்.

சுவாதி – எதிர்ப்புணர்வு மிக்கவர்கள், நட்பு பலம் உள்ளவர்கள். மக்கள் செல்வம், ஆள் பலம் உள்ளவர்கள்.

விசாகம் – நீதி நெறி தவறாதவர்கள், புத்தி கூர்மை மிக்கவர்கள், பக்திமான்கள், பேச்சுத் திறமை உள்ளவர்கள்

அனுஷம் – தியாக உணர்வு மிக்கவர்கள், கணவர் மீது அதிக அன்புடையவர்கள், அழகும், மற்றவர்கள் உணர்வை மதித்து நடப்பவர்கள்.

கேட்டை – வாக்குத் தவறாதவர்கள், சகல யோகமும் உள்ளவர்கள், அனைவரிடமும் அன்பாகப்  பழகும் இயல்புடையவர்கள்

மூலம் – சுடு சொற்கள் பேசுபவர்கள், கோபம், வெறுப்பு மிக்கவர்கள், பகையை எளிதில் உருவாக்குபவர்கள். 

பூராடம் – அழகு நிறைந்தவர்கள், பண்பானவர்கள், மற்றவர்களுக்கு நல்லது செய்பவர்கள், இன்ப துன்பங்களை சமமாக பாவிப்பார்கள்

உத்திராடம் – பெரு வாழ்வு வாழ்பவர்கள், புகழ் விரும்பிகள், அன்பானவர்கள், கருணை, கணவரை மதித்து நடப்பவர்கள், தாம்பத்ய உறவு விரும்புவர்கள்

திருவோணம் – நீதி நேர்மைக்கு மதிப்பு தருபவர்கள், தயாள சிந்தனை உடையவர்கள், பொதுவுடமைக் கருத்துக்களில் ஆர்வம் உடையவர்கள்

அவிட்டம் – செல்வம் உடையவர்கள், பெருந்தன்மையானவர்கள். ஆடை அணிகலன்களில் பெரிதும் நாட்டமுடையவர்கள்

சதயம் – நியாய தர்மத்துக்குக் கட்டுப்பட்டவர்கள், பாசமானவர்கள், பெரியோர்களை மதித்து நடப்பவர்கள்

பூரட்டாதி – புத்திசாலிகள், அனைவரையும் மதித்து நடப்பார்கள், அடக்கம் மிக்கவர்கள், தயாள குணம் கொண்டவர்கள், ஆன்மிக நாட்டம் அதிகம் உடையவர்கள்

உத்திரட்டாதி –  குல விளக்காக திகழ்பவர்கள், கணவர் மீதும் குடும்பம் மீதும் அதிக பாசம் வைத்திருப்பவர்கள், நல்ல எண்ணங்கள் உடையவர்கள்.

ரேவதி – சம்பிராதயங்களை போற்றி மதிப்பவர், லட்சிய நோக்கு உடையவர்கள், அழகானவர்கள். எதிரிகளை எளிதில் வீழ்த்தும் வல்லமை படைத்தவர்கள். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com