சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

இந்த நாள் எப்படி? நவம்பர் 10

பணம் மெதுவாகவும், சீராகவும் வந்துகொண்டிருக்கும். உங்களுக்குத் தேவையான பொருட்களை

News image
Updated On :29 ஜனவரி 2024, 6:05 pm

தினமணி

ஏரிஸ் (Aries)

பணம் மெதுவாகவும், சீராகவும் வந்துகொண்டிருக்கும். உங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் குவிக்க வேண்டிய நாள் இது. எனவே பணத்தை பதுக்கி வைக்காதீர்கள். தாராளமாகச் செலவு செய்து மகிழுங்கள்.

டாரஸ் (Taurus)

உங்கள் வேலை / தொழில் பற்றிய உங்கள் குறுகலான பார்வையை மாற்றிக் கொள்ளுங்கள். உங்கள் கனவுகள் கை கூடும், ஆனால் அது வரை பொறுமை அவசியம். திருமணமாகாதவராக இருந்தால் உங்களுக்கு நல்ல செய்தி வர வாய்ப்புகள் உருவாகும்.

Story image

ஜெமினி (Gemini)

உங்களுக்கு இன்று வெற்றிகரமான ஒரு நாள். நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும். உங்கள் மனம்-உடல்-ஆன்மா ஒருங்கிணைந்து இயங்கி, உங்கள் வேலைகளில் மகிழ்ச்சியாக செய்யத் தூண்டும் நாளிது. பரபரப்பாக இருப்பீர்கள், பயணங்கள் சிறக்கும். 

கேன்சர் (Cancer)

உங்களுடன் பழகுபவர்களிடம் சிறு மனக் கசப்பு ஏற்படலாம். வெளிப்படையாக பேசுவது நல்லது. இன்று உங்களிடம் பண உதவி கேட்டு உறவினர் அல்லது நண்பர் யாரேனும் வரக் கூடும்.

லியோ (Leo)

உங்களுக்கு திரும்பி வர வேண்டிய கடன் இன்று சிறிதளவு கிடைக்கும். மற்றவர்களைப் பற்றிய உங்கள் அவதானிப்பில் உங்கள் மனம் என்ன சொல்கிறதோ அதன் படி நடப்பதே சிறந்தது. அது பெரும்பாலும் சரியாகவே இருக்கும்.

விர்கோ (Virgo)

புதுச் சூழலில் பொருந்திப் போவது உங்களுக்கு முதலில் சங்கடமாக இருந்தாலும், போகப் போக சரியாகிவிடும். உங்கள் மனம் கவர்ந்தவருடன் திடீர் பயணம் அமைய அதிக வாய்ப்புக்கள் உள்ளது. சந்தோஷத்துக்கு குறைவிருக்காது.

Story image

லிப்ரா (Libra) 

இன்று வேலையில் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். அவற்றை இன்றே தீர்த்துக் கொள்வது நல்லது. திருமணம் ஆனவராக இருந்தால், மாமியார் மாமனாருடன் வாக்குவாதம் ஏற்படலாம். தவிர்ப்பது சாலச் சிறந்தது. நல்லதே நினையுங்கள் நல்லதே நடக்கும்.

ஸ்கார்பியோ (Scorpio)

கடந்த கால நினைவுகள் உங்கள் மனத்தை வாட்டி வதைக்கும். இன்றும் சில விஷயங்கள் உங்கள் நினைவுக்கு வரலாம். உதவி தேவைப்பட்டால் நண்பர் அல்லது மனத்துக்கு நெருக்கமானவர்களிடம் மனம் திறந்து பேசுங்கள். உங்கள் துணையுடன் நேரம் செலவழிப்பது மகிழ்ச்சிக்கு வழி வகுக்கும்.

சாஜிட்டாரியஸ் (Sagittarius)

பெற்றோர்களுடன் பிரச்னையில் இருப்பீர்கள். பிரச்னைகளை வளர்க்காமல் விரைவில் தீர்த்துக் கொள்ளுங்கள். அலுவலகத்தில் உடனடியாக செய்து முடிக்க வேண்டிய வேலைகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கூடுதல் பணம் தேவைப்படலாம்.. முழு ஈடுபாட்டுடன் முன்னேறிச் செல்லுங்கள்.

கேப்ரிகார்ன் (Capricorn) 

உடல் நலத்தில் முன்னேற்றம் இருக்கும். வயிற்று கோளாறுகளில் பாதிக்கப்பட்டவர்கள் எளிமையான டயட்டில் இருப்பது நல்லது. வேலை செய்யும் இடத்தில் நிம்மதியாக இருப்பீர்கள். உங்கள் மனத்தில் நினைப்பதை அப்படியே வெளிப்படுத்துவீர்கள். சந்தோஷமான தினம் இது.

Story image

அக்வாரியஸ் (Aquarius)

இன்று சில சவால்கள் தவிர்க்க முடியாதவை. உங்கள் வேலைகள் அனைத்தும் இன்று மெதுவாக ஆனால் சீராக நடக்கும். அந்நியர்களிடம் கவனம் தேவை, உங்கள் உள்ளுணர்வை பின் பற்றவும்.

பிஸ்சஸ் (Pisces)

தொழில் முறையில் உங்களுக்குத் தேவையான ஆலோசனைகளை அதிகாரிகளிடம் பெறத் தயங்க வேண்டாம். சில பயணங்கள் அமையும். மென் மனதுடையவரான உங்களுக்கு இந்த நேரத்தில் பணப் பிரச்னைகள் ஏற்படலாம். ஆனால் இது ஒரு தற்காலிக கட்டம்தான். எனவே, மனத்தை தளர விட வேண்டாம். விரைவில் எல்லா பிரச்னைகளும் நீங்கும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.