
கேந்திர திருஷ்டி யோகம் என்பது கேந்திர வீடுகள் அதிர்ஷ்டத்தையும், செல்வத்தையும் அதிகரிக்கும் அவைகளுக்குள் 90 பாகையில் இணைந்தால் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் நிறைவையும் உருவாக்கும்.
முதல் வீடு (லக்கினம்) சுய ஆளுமை மற்றும் மன உறுதியின் வீடு, 4வது வீடு மகிழ்ச்சி மற்றும் திருப்தியின் வீடு, 7வது வீடு வாழ்க்கைத் துணை மற்றும் உறவுகளைக் குறிக்கிறது, 10வது வீடு உங்கள் தொழில்முறை அம்சத்தைக் காட்டுகிறது. 1,4,7,10 எனும் இந்த கேந்திர வீடுகள் அதிர்ஷ்டத்தையும் செல்வத்தையும் அதிகரிக்கும் அவைகளுக்குள் 90 பாகையில் இணைந்தால், வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் நிறைவையும் உருவாக்கும்.
அக்டோபர் 2025 இல், சூரியனும் குருவும் தமக்குள் 90 பாகையில் கேந்திர திருஷ்டி யோகத்தை உருவாக்கி ஒரு சக்தி வாய்ந்த நிகழ்வை உருவாக்குகிறார்கள். இத்தகைய நிகழ்வு த்ரிக் பஞ்சாங்கத்தின்படி 17.10.2025 அன்று காலை 11.10 மணிக்கு நிகழ உள்ளது. குரு 29.5 பாகையில் மிதுனத்தில் இருக்கும்போது, சூரியன் 29.5 பாகையில் கன்னியில் உள்ளபோது இந்த நிகழ்வு ஏற்படுகிறது. இந்த அறிய யோகமானது மூன்று ராசிக்காரர்களுக்குச் செல்வம், அதிர்ஷ்டம் மற்றும் வெற்றியை அதிகரிக்கும். அவர்களின் வங்கி இருப்பை இரட்டிப்பாகி செழிப்பைக் கொண்டுவரும்.
மரியாதை மற்றும் தலைமைத்துவத்தைக் குறிக்கும் சூரியனும், ஞானத்தையும் செல்வத்தையும் குறிக்கும் குருவும் ஒருவருக்கொருவர் 90 பாகையில் இருக்கும்போது இந்த சக்திவாய்ந்த சீரமைப்பு உருவாகிறது.
இந்த யோகத்தால் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்?
ரிஷப ராசிக்கு சிறப்பாக இருக்கும். வீட்டு பிரச்னைகள் சரியாகும், வேலை செய்பவர்களுக்குச் செல்வாக்கு மிக்க ஒருவரால் ஊக்கம் கிடைக்கும். வணிக உரிமையாளர்களுக்குத் தக்க பணம் கிடைக்கும்.
சிம்ம ராசிக்காரர்களுக்குத் திருமண வாழ்க்கை மேம்படும். கடந்த கால முதலீடுகள் பலனளிக்கும். நிதி மேம்படும். சட்டச் சிக்கல்கள் இருப்பின் அது தீர்க்கப்படும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமண திட்டங்கள் வரக்கூடும்.
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் நன்மை பயக்கும். திருமணம் ஆனவர்கள் தங்கள் துணையுடன் அதிக பொறுப்புணர்வுடன் இருப்பார்கள். இளைஞர்களுக்கான தொழில் பிரச்னைகள் மறையும். கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கும்.
தீபாவளிக்கு முன்னால் நடக்க இருக்கும் இந்த ஒரு நாள் நிகழ்வானது மேற்படி மூன்று ராசிக்காரர்களுக்கு அவர்தம் வாழ்வில், வாழ்நாள் முழுவதும் ஏற்படப்போகும் உன்னத மாற்றத்திற்கு அடிகோலுவதாக இருக்கும். மேற்படி யோக பலன்கள் அவரவர் தனிப்பட்ட ஜாதகம்படி மாறுதலுக்கு உட்படும். மேலும் ஜோதிடக் கணிப்புகள் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, அவற்றைத் தொழில் முறை ஆலோசனையாகக் கருதக்கூடாது.
கேந்திர திருஷ்டி யோகத்தைப் பெருக்க அல்லது அதனை முழுமையாக அனுபவிக்க நாம் என்ன செய்ய வேண்டும் ?
நல்ல செயல்களைச் செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்.
மற்றவர்களை காயப்படுத்தாமால் இருக்க வேண்டும்.
வதந்திகள் அல்லது புறம்பேசுவதை நிறுத்த வேண்டும்.
நமது உணர்வுக்கு நேர்மையாக இருக்க வேண்டும்.
தியானத்தின் மூலம் நமது விழிப்புணர்வை மேம்படுத்த வேண்டும்.
தானம் செய்து நமது செயல்களை மேம்படுத்த வேண்டும்.
பெருமையால் அல்லாமல் மனித நேயத்துடன் மற்றவர்களுக்கு உதவ வேண்டும்.
மேற்கூறிய அனைத்தும் எப்போதும் கடைப்பிடித்தால் நமது வாழ்நாள் முழுவதும் நம் அனைவருக்கும் யோகமே.
"ஜோதிடம் ஒரு முன் எச்சரிக்கையே தவிர , முடிவு அல்ல என்பதனை உணரவும்... அதே போல் ஜோதிடர் வழிகாட்டியே தவிர, கடவுள் அல்ல... பரிகாரம், என்பது ஜாதகர் மனமாற்றமும், கடவுளிடம் முழு சரணாகதியுமே ஆகும்..."
தொடர்புக்கு: 98407 17857 & 91502 75369
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.