
2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு
மிடுக்கான நடையும் நேர் கொண்ட பார்வையும் எடுத்த கொள்கையில் மாறாதவர்களுமான இரண்டாம் எண் அன்பர்களே இந்த மாதம் வீண் அலைச்சல் குறையும். சிக்கல்கள் தீரும். எண்ணிய காரியம் கைகூடும் குறிக்கோள் நிறைவேறும். சமூகத்தில் அந்தஸ்து உண்டாகும். தொழில் வியாபாரத்தில் மாற்றம் செய்ய எண்ணுவீர்கள். சிலர் புதிய தொழில் தொடங்க முற்படுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் உண்டாகும். குறிக்கோளை அடைவது லட்சியமாக கொண்டு செயல்படுவீர்கள். புதிய தொடர்புகள் மூலம் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே திடீர் வாக்குவாதங்கள் உண்டாகலாம். உஷ்ணம் சம்பந்தமான நோய் உண்டாகலாம். பெண்களுக்கு எண்ணிய காரியம் கை கூடும். கலைத்துறையினருக்கு வீண் அலைச்சல் குறையும். அரசியல்துறையினருக்கு சிக்கலான பிரச்சனைகளில் நல்ல முடிவு கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் மதிப்பெண் பெற எண்ணுங்கள்.
பரிகாரம்: தினமும் காகத்திற்கு சாதம் வைக்க பிரச்சனைகள் குறையும். தடைபட்ட காரியங்களில் தடை நீங்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.