
8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு
வீரத்தை விட விவேகமே சிறந்தது என்பதை மனதில் கொண்டு எதையும் சாதிக்கும் திறன் உடைய எட்டாம் எண் அன்பர்களே இந்த மாதம் இனிமையான பேச்சின் மூலம் சிக்கலான காரியங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். உங்கள் திறமையை கண்டு அடுத்தவர்கள் வியப்பார்கள். அலைச்சலை தவிர்ப்பதன் மூலம் களைப்பு ஏற்படாமல் தடுத்து கொள்ள முடியும். வேளை தவறி உணவு உண்ணாமல் பார்த்துக்கொள்வது நல்லது. பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதுரியமாக செயல்பட்டு முன்னேற்றம் காண்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவார்கள். பெண்களுக்கு திடீர் என்று கோபம் உண்டாவதை தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினருக்கு திறமையை கண்டு மற்றவர்கள் பாராட்டுவார்கள். அரசியல்துறையினருக்கு எதிர்பார்த்த பணவரத்து இருக்கும். மாணவர்களுக்கு நிதானத்தை கடைபிடிப்பது முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும்.
பரிகாரம்: ஆஞ்சனேய கவசத்தை படித்து வருவது மன குழப்பங்கள் நீங்கும். தைரியம் உண்டாகும். தடைபட்ட காரியங்கள் நன்கு நடந்து முடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.