மேகமலை வழக்கு! ஓய்வுபெற்ற நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையில் குழு!அன்பில் மகேஸின் நீதிமன்றக் காவல் நவ. 18 வரை நீட்டிப்பு!பெரியார் அறிவுலகத்துக்கு புத்தகங்கள் வாங்கியதில் ஊழல்! விசாரணை தொடக்கம்!மாமல்லபுரம் அருகே அரசுப் பேருந்து மீது வேன் மோதல்! இருவர் பலி, 8 பேர் கவலைக்கிடம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,960 குறைந்தது! வெள்ளி விலையும் சரிவு! (நவ. 6)

பணவரவு யாருக்கு? வார ராசி பலன்கள் (நவ. 6 - 12)

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்.. வார ராசி பலன்கள்

weekly predictions

வார பலன்கள்

Updated On :

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார பலன்களை (நவ. 6 - 12) துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.

1மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

கடினமாக உழைத்து முன்னேறுவீர்கள். சூழ்நிலைக்கேற்ப முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தில் சுப காரியச் செலவுகள் உண்டாகும்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் எண்ணங்களைப் புரிந்து கொண்டு பணியாற்றுவீர்கள். வியாபாரிககுக்கு எதிர்பார்த்த பணவரவு வந்து சேரும். விவசாயிகள் அமோக மகசூலைக் காண்பீர்கள்.

அரசியல்வாதிகள் கட்சியில் புதிய மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களை நாடிப் பெறுவீர்கள். பெண்கள் புதிய ஆடை அணிகலன்களை வாங்குவீர்கள். மாணவர்கள் கல்வியில் சிறப்பான வளர்ச்சிப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - நவம்பர் 10, 11, 12.

2ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

செயல்களில் இருந்து வந்த தடைகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். பயணங்களால் நன்மை உண்டாகும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பயணங்களில் லாபமடைவீர்கள். வியாபாரிகள் கொடுக்கல், வாங்கலில் வருமானத்தைக் காண்பீர்கள். விவசாயிகள் நிலங்கள் வாங்க முன் பணம் கொடுப்பீர்கள்.

அரசியல்வாதிகள் எடுக்கும் முடிவுகள் சரியாக இருக்கும். கலைத்துறையினருக்கு துறையில் இருந்த போட்டி, பொறாமைகள் குறையும். பெண்கள் குழந்தைகளை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள். மாணவர்கள் ஆசிரியர்களின் அன்பைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

3மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் அமைதி நிறையும். வயிறு சம்பந்தமான உபாதைகள் நீங்கும். சிக்கனமாக இருந்து சேமிப்பைக் கூட்டிக் கொள்வீர்கள்.

உத்தியோகஸ்தர்களின் நிர்வாகத் திறமை பளிச்சிடும். வியாபாரிகளுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். விவசாயிகளுக்கு புழு, பூச்சிகளால் தொல்லை இராது.

அரசியல்வாதிகள் தொண்டர்களின் கோரிக்கைகளை பூர்த்தி செய்வீர்கள், கலைத்துறையினரின் எண்ணங்கள் நிறைவேறும். பெண்களின் நிதானப் பேச்சுகள் நன்மதிப்பை உருவாக்கும். மாணவர்கள் விளையாட்டுகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

4கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

பணப்புழக்கம் அதிகரிக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். உடல் ஆரோக்கியம் சீர்படும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வீர்கள். வியாபாரிகள் புதிய வண்டி, வாகனங்களை வாங்குவீர்கள். விவசாயிகள்

விவசாய உபகரணங்களை வாங்குவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு அரசு அதிகாரிகள் உதவிகரமாக இருப்பார்கள். கலைத்துறையினர் கடினமான விஷயங்களில் கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வீர்கள். பெண்கள் பெற்றோரிடம் இணக்கமாகப்

பழகுவீர்கள். மாணவர்கள் படிப்பில் சாதனை செய்வீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

5சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

சுபச் செலவுகளை செய்து மகிழ்வீர்கள். வசதி வாய்ப்புகள் பெருகும். வழக்கு விஷயங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கும். வியாபாரிகள் செலவு செய்து கடையை அலங்கரிப்பீர்கள். விவசாயிகள் கையிருப்புப் பொருள்கள் மீது கவனம் செலுத்துவீர்கள்.

அரசியல்வாதிகள் உட்கட்சிப் பூசல்களில் கருத்தைத் தெரிவிக்க மாட்டீர்கள். கலைத்துறையினர் கலைஞர்களை அனுசரித்து நடந்துகொள்வீர்கள். பெண்கள் யோகா, தியானம் போன்றவற்றைக் கற்றுக் கொள்வீர்கள். மாணவர்கள் வெளி விளையாட்டுகளில் பங்கு கொள்வீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

6கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களைப் புரிந்துகொள்வீர்கள். இழுபறியான பணிகளைச் செய்து முடிப்பீர்கள். பயணங்களால் ஆதாயம் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வைப் பெறுவீர்கள். வியாபாரிகள் கூட்டாளிகளுக்குத் தேவையான ஒத்துழைப்பை நல்குவார்கள். விவசாயிகள் பழைய குத்தகைப் பாக்கிகளை வசூலிப்பீர்கள்.

அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்திடம் கவனமாக இருப்பீர்கள். கலைத்துறையினர் துறையில் உயர்ந்தவர்களின் பாராட்டைப் பெறுவீர்கள்.

பெண்கள் கணவரிடம் அன்பு, பாசத்துடன் பழகுவீர்கள். மாணவர்கள் பெற்றோரின் உதவிகளைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

7துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்

தொழிலில் வீண் அலைச்சல்கள் ஏற்படாது. நண்பர்கள் நேசக்கரம் நீட்டுவார்கள். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களின் வேலைகளைப் பகிர்ந்துகொள்வீர்கள். வியாபாரிகளின் கடையை நோக்கி புதிய வாடிக்கையாளர்கள் வருவார்கள். விவசாயிகள் கால்நடைகளால் லாபம் காண்பீர்கள்.

அரசியல்வாதிகளை கட்சியில் எதிர்த்தவர்கள் அடங்கிவிடுவார்கள். கலைத்துறையினர் கையில் இருக்கும் ஒப்பந்தங்களை நல்லபடியாக முடித்துக் கொடுப்பீர்கள்.

பெண்கள் குழந்தைகளால் பெருமை அடைவீர்கள். மாணவர்கள் விடியற்காலை எழுந்து படித்து அதிக மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

8விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

விரும்பிய பணிகளைச் செய்வீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிறையும். மற்றவர்களிடம் பேசும் பொழுது கவனமாக இருப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் கடன் கிடைக்கும். வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சாதகமாக முடிவடையும். விவசாயிகள் சக விவசாயிகளிடம் எதிர்பார்த்த ஒத்துழைப்பைப் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகள் கட்சியில் புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள். கலைத்துறையினரின் முயற்சிகளை அனைவரும் பாராட்டுவார்கள். பெண்களுக்கு கணவனால் அன்பு, பாசம் அதிகரிக்கும். மாணவர்கள் தேவையான உடற்பயிற்சிகளைச் செய்வீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

9தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். இல்லத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடந்தேறும்.

உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வைப் பெறுவீர்கள். வியாபாரிகள் கூடுதல் வருமானத்தைக் காண்பீர்கள். விவசாயிகள் நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்திக் கொள்வீர்கள்.

அரசியல்வாதிகள் மேலிடத்துக்குத் தேவையான தகவல்களை தக்க நேரத்தில் அனுப்புவீர்கள். கலைத்துறையினர் துறையில் உயர்ந்தவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். பெண்கள் உற்றார் உறவினரிடம் அன்பாகப் பழகுவீர்கள். மாணவர்கள் ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

10மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

மனதில் சிறு குழப்பங்கள் தோன்றி மறையும். மற்றபடி மன அமைதியை இழக்க மாட்டீர்கள். தொழிலை திறம்பட நடத்துவீர்கள். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரியிடம் இருந்து ஒதுங்கி இருப்பீர்கள். வியாபாரிகள் புதிய திட்டங்களைத்

தீட்டுவீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் நல்லபடியாக அமையும்.

அரசியல்வாதிகள் மேலிடத்தின் அதிருப்தியில் இருந்து விடுபடுவீர்கள். கலைத்துறையினர் சிறு போட்டிகளை எதிர்கொள்ள நேரிடும். பெண்கள் பெற்றோரின் ஆதரவைப் பெறுவீர்கள். மாணவர்கள் உள்ளரங்கு விளையாட்டுகளில் ஈடுபடுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை

11கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

வருமானம் சீராக இருக்கும். அதிக முயற்சி செய்து குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் குறையத் தொடங்கும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்துவீர்கள். வியாபாரிகளுக்கு கூட்டாளிகள் உதவிகரமாக இருப்பார்கள். விவசாயிகள் சிறிய முதலீட்டில் நிலம் வாங்குவீர்கள்.

அரசியல்வாதிகள் கடுமையாக உழைத்து கட்சியில் நற்பெயர் எடுப்பீர்கள். கலைத்துறையினரைத் தேடி புதிய வாய்ப்புகள் வரும். பெண்களை கணவர் மதித்து நடப்பார். மாணவர்கள் முயற்சிக்குத் தகுந்த மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - நவம்பர் 6, 7.

12மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய கடன்களைத் திருப்பிச் செலுத்துவீர்கள். பிரிந்திருந்த உறவினர்கள் உங்கள் இல்லம் தேடி வருவார்கள்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் மனம் கோணாமல் நடந்துகொள்வீர்கள். வியாபாரிகள் புதிய சந்தைகளை நாடுவீர்கள். விவசாயிகள் பால் வியாபாரத்தில் கூடுதல் லாபம் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகள் தொண்டர்களை ஊக்கப்படுத்துவீர்கள். கலைத்துறையினர் துறை ரீதியான பயணங்களைச் செய்வீர்கள். பெண்கள் ஆன்மிகத்திலும் தர்ம காரியங்களிலும் ஈடுபடுவீர்கள். மாணவர்கள் பெற்றோரை அனுசரித்துச் செல்வீர்கள்.

சந்திராஷ்டமம் - நவம்பர் 8, 9.

Summary

Dinamani Astrologer K.C.S. Iyer has accurately predicted the results for this week (November 06 - 12). Read and benefit.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER