“ரீல்ஸ் பார்த்தால் மக்களின் வயிறு நிறையுமா?” - முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கேள்வி!இந்திய விமானி ஸ்மித் மச்சாருடன் பேசிய பிரதமர் மோடி! மதுராந்தகம், தாராபுரத்தில் அக். 5, 6 பள்ளிகளுக்கு விடுமுறை!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 760 உயர்வு!டீலக்ஸ், புறநகர் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம்: பெண்களுக்கு டிக்கெட் கொடுத்து தொடக்கி வைத்த முதல்வர்!ஆசிய விளையாட்டு! இந்திய வில்வித்தை அணிக்கு தங்கம்!ஆசிய விளையாட்டு: குத்துச்சண்டையில் தங்கம் வென்றார் லவ்லினா!காந்தியடிகளின் வாழ்வைப் படிப்போம்! மதநல்லிணக்க இந்தியாவைக் காப்போம்! மு.க. ஸ்டாலின்

வெற்றி மேல் வெற்றி யாருக்கு? இந்த வார ராசி பலன்கள் (அக். 2 - 8)

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்.. வார ராசி பலன்கள்

ஜோதிடம்

astro - file photo

Published On :

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார பலன்களை (அக். 2 - 8) துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.

1மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

வருமானம் படிப்படியாக உயரும். சிலருக்கு வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு பெறுவதற்கான வாய்ப்புகள் தென்படும். வியாபாரிகள் வாடிக்கையாளரின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். விவசாயிகள் சக விவசாயிகள் மத்தியில் புகழ் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகள் கட்சிப் பிரசாரங்களில் கண்ணும் கருத்துமாகச் செயல்படுவீர்கள். கலைத்துறையினர் சக கலைஞருடன் இருந்த விரோத மனப்பான்மையை விட்டொழிப்பீர்கள்.

பெண்கள் குடும்பப் பொறுப்புகளைச் சரியாக ஏற்று நடத்துவீர்கள். மாணவர்கள் விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

2ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

நேர்முக, மறைமுகப் போட்டிகளை சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். பெரியோர்களைச் சந்தித்து ஆசிகளைப் பெறுவீர்கள். கடன் பிரச்னைகள் குறையும்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகள் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் வந்து சேரும். விவசாயிகள் புதிய குத்தகைகளைப் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தின் கட்டளைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவீர்கள். கலைத்துறையினர் துறையில் வெற்றிப் பாதையில் பயணிப்பீர்கள்.

பெண்களுக்கு கணவரிடம் அன்பு, பாசம் அதிகரிக்கும். மாணவர்களின் காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

3மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் சந்தோஷம் நிறையும். வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் நீங்கும். புதிய வழிகளில் வருமானம் வரத் தொடங்கும்.

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை அரவணைத்துச் செல்வீர்கள். வியாபாரிகள் புதிய முதலீடுகளுக்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். விவசாயிகள் பாசன வசதிகளை மேம்படுத்திக் கொள்வீர்கள்.

அரசியல்வாதிகள் பொறுப்புடனும் நிதானத்துடனும் நடந்துகொள்வீர்கள். கலைத்துறையினர் பயணங்களால் நன்மை அடைவீர்கள்.

பெண்கள் குடும்பத்தினருடன் அனுசரணையாக நடந்து கொள்வீர்கள். மாணவர்கள் புதிய விளையாட்டுகளைக் கற்றுக் கொள்வீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

4கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். நீண்ட நாள்களாக தடைபட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத பண வரவு உண்டாகும். வியாபாரிகள் போட்டி பொறாமைகளைச் சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். விவசாயிகள் புதிய குத்தகைகளைத் தவிர்த்திடுங்கள்.

அரசியல்வாதிகள் கட்சிப் பணிகளை சரியாகத் திட்டமிட்டு குறித்த காலத்துக்குள் செய்து முடித்து விடுவீர்கள். கலைத்துறையினர் துறையில் புதிய பயிற்சிகளைக் கற்றுக்கொள்வீர்கள்.

பெண்கள் ஆடை அணிகலன்களை வாங்கி உற்சாகமடைவீர்கள். மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

5சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பூர்விக சொத்துகளில் இருந்து வருமானம் வரத் தொடங்கும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளை வெற்றிகரமாக முடித்து விடுவீர்கள். வியாபாரிகள் விற்பனையைப் பெருக்குவீர்கள். விவசாயிகள் கால்நடைகளுக்கு செலவு செய்ய நேரிடும்.

அரசியல்வாதிகள் சமயோசிதமாகச் செயல்பட்டு மேலிடத்தின் பாராட்டைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் துறையில் தனித்திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.

பெண்கள் உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வீர்கள். மாணவர்கள் எதிர்பார்த்த துறைகளில் மேற்படிப்பைத் தொடர்வீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

6கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

வெளியிடங்களில் முன்கோபத்தை விட விவேகத்தைக் கையாளுவீர்கள். பயணங்களில் புதிய அனுபவம் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்கள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். வியாபாரிகள் எச்சரிக்கையுடன் இருந்து நஷ்டங்களைத் தவிர்ப்பீர்கள். விவசாயிகள் புதிய சாதனங்களை வாங்கி விவசாயத்தைப் பெருக்குவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு இடையிடையே சில பிரச்னைகள் தோன்றும். கலைத்துறையினருக்கு கடின முயற்சிகளுக்குப் பிறகே புதிய ஒப்பந்தங்கள் கைகூடும்.

பெண்களுக்கு பணவரவு திருப்தியாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் கவனத்துடன் ஈடுபடுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

7துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்

செல்வாக்கு உயரும். சமுதாயத்தில் உயரிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களின் வேலைகளைப் பகிர்ந்து கொள்வீர்கள். வியாபாரிகள் புதியவர்களுக்கு கடன் கொடுக்க வேண்டாம்.

விவசாயிகளுக்கு அனைத்தும் சுமுகமாகவே முடியும். அரசியல்வாதிகள் தொண்டர்களுக்கிடையே இருக்கும் பிணக்குகளைத் தீர்த்து வைப்பீர்கள். கலைத்துறையினர் தங்கள் பொறுப்புகளை சரியாக நிறைவேற்றி முன்னேற்றமடைவீர்கள்.

பெண்கள் குழந்தைகளை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள். மாணவர்கள் உள்ளரங்கு விளையாட்டுகளில் ஈடுபட்டு வெற்றியைக் கைப்பற்றுவீர்கள்.

சந்திராஷ்டமம் - அக்டோபர் 2.

8விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

குடும்பத்தில் அனைவரின் ஒத்துழைப்பும் கிடைக்கும். முன்னேற்றகரமான சூழ்நிலை ஏற்படும்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் சகாய வட்டியில் கடன் கிடைக்கும். வியாபாரிகள் கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் சிந்தித்துச் செயல்படுவீர்கள். விவசாயிகள் பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள்.

அரசியல்வாதிகள் தொண்டர்களிடம் அதிக எதிர்பார்ப்பைத் தவிப்பீர்கள். கலைத்துறையினர் தாழ்வு மனப்பான்மையை விட்டொழித்து, அனைவரிடமும் சகஜமாகப் பழகுவீர்கள்.

பெண்களுக்கு சுப காரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். மாணவர்கள் உயர்கல்வியில் சேர்வீர்கள்.

சந்திராஷ்டமம் - அக்டோபர் 3, 4.

9தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

பொறுமையுடனும் நிதானத்துடனும் நடந்து கொள்வீர்கள். எவரையும் எடுத்தெறிந்து பேசுவதைத் தவிர்ப்பீர்கள். விரும்பிய பயணத்தை மேற்கொள்வீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரிகள் புதிய இடங்களில் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். விவசாயிகள் வயல் வரப்பு விவகாரங்களில் வெற்றி பெறுவீர்கள்.

அரசியல்வாதிகள் சாதுரியமாகப் பேசி மற்றவர்களைக் கவருவீர்கள். கலைத்துறையினர் உழைப்புக்கேற்ற பலன்களைக் காண்பீர்கள்.

பெண்கள் குழந்தைகளின் வளர்ச்சியால் சந்தோஷப்படுவீர்கள். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவீர்கள்.

சந்திராஷ்டமம் - அக்டோபர் 5, 6.

10மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

தொழிலில் சில மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் சிறிது பளு அதிகரிக்கும். வியாபாரிகள் புதிய கூட்டாளிகளைச் சேர்த்துக் கொள்வீர்கள்.

விவசாயிகள் புழு, பூச்சிகளின் பாதிப்பை தவிர்க்க முன்னெச்சரிக்கையாகச் செயல்படுவீர்கள். அரசியல்வாதிகள் தங்கள் வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்துவீர்கள்.

கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்கள் யோகா, பிராணாயாமம் போன்றவற்றில் ஈடுபடுவீர்கள். மாணவர்கள் புதிய விளையாட்டுப் பயிற்சிகளில் ஈடுபடுவீர்கள்.

சந்திராஷ்டமம் - அக்டோபர் 7, 8.

11கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் சுப காரியங்கள் ஏற்பாடாகும். குடும்பத்துடன் புனித தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் உங்களுக்கு சக ஊழியர்கள் உதவும் நிலையில் இருப்பார்கள். வியாபாரிகளைத் தேடி லாபம் வந்து சேரும். விவசாயிகள் மகசூல் அதிகரித்து நல்ல லாபத்தை ஈட்டுவீர்கள்.

அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தின் பாராட்டைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் சக கலைஞர்களின் ஆதரவினால் சில வெற்றிகளைக் காண்பீர்கள்.

பெண்கள் பெற்றோரின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டி வரும். மாணவர்கள் ஆசிரியர்களின் சொல் கேட்டு நடந்து கொள்வீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

12மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

தொழிலில் லாபம் கொட்டும். தடைக் கற்களைப் படிக்கற்களாக மாற்றிக் கொள்வீர்கள். பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களிடமிருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரிகளுக்கு பணவரவு உண்டாகும். விவசாயிகளுக்கு விவசாயப் பணிகள் விரைந்து நடக்கும்.

அரசியல்வாதிகளுக்கு தொண்டர்களின் ஆதரவு கிடைக்கும். கலைத்துறையினருக்கு அரசு விருதுகள் கிடைக்கும். பெண்கள் உற்றார், உறவினர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். மாணவர்கள் வெளி விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

Summary

Dinamani Astrologer K.C.S. Iyer has accurately predicted the results for this week (October 2 - 8). Read and benefit.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER