
வார ராசி பலன்கள் (செப். 11 - 17) 12 ராசிகளுக்கும்! யோகம் யாருக்கு?
எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்.. வார ராசி பலன்கள்

ஜோதிடம்
தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார பலன்களை (செப்டம்பர் 11 - 17) துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.
1மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)
பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த எடுப்பிலேயே எதிலும் வெற்றியைச் சந்திப்பீர்கள். நல் லோரின் உதவியும் அறிவுரை யும் கிடைக்கப் பெறுவீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைக் கும். வியாபாரிகள் கடையை விரிவுபடுத்துவீர் கள். விவசாயிகளுக்கு தோட்டம், தோப்பு உள் னிட்ட விவகாரங்கள் சிறப்பாக முடிவடையும்.
அரசியல்வாதிகள் தொண்டர்களின் குறை கனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். கலைத் துறையினர் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர் கள். பெண்களுக்கு கணவருடனான ஒற்றுமை அதிகரிக்கும். மாணவர்கள் உள்ளரங்கு விளை யாட்டுகளில் தேர்ச்சிபெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் -செப்டம்பர் 16, 17.
2ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)
தொழிலை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்வீர்கள். மனக் குழப்பங்களில் இருந்து விடுபடுவீர்கள்.
உத்தியோகஸ்தர் கள் அலுவலகக் கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர்கள். வியாபாரிக ளுக்கு கொடுக்கல் வாங்கலில் இருந்த சிரமங் சுள் குறையும். விவசாயிகள் நீர்ப்பாசன வசதிகளில் சுவனம் செலுத்துவீர்கள்.
அரசியல்வாதி சுளுக்கு கட்சியில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். கலைத்துறையினரின் முயற்சிகள் வெற்றி பெறும். பெண்கள் இல்லத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள்.
மாணவர்களுக்கு மேற்படிப்பு படிப்பதற்கான முயற்சி வெற்றி பெறும்.
சந்திராஷ்டமம்-இல்லை.
3மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)
உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிக ரிக்கும். சிந்தனைச் சக்தி பலப்ப மானம் கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்களிடம் மேலதிகாரிகள் மனக்கசப்பு நீங்கி நட்புடன் நடந்துகொள்வீர் கள். வியாபாரிகள் புதிய முதலீடுகள் செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். விவசாயிகள் கால்நடைகளால் நன்மை அடைவீர்கள்.
அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்துக்கு எச் சரிக்கையாக தகவல் அனுப்புவீர்கள். கலைத் துறையினர் சக கலைஞர்களின் உதவிகளைப் பெறுவீர்கள்.
பெண்களுக்கு ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் அதிக அக்கறையுடன் செயல்படுவீர்கள்.
சந்திராஷ்டமம்-இல்லை.
4கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)
வருமானம் உயரத் தொடங் கும். புதிய சேமிப்புகளிலும் ஈடுபடுவீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் இருந்த பிரச்னை குறையும். வியாபாரி களுக்கு கொடுக்கல் வாங்கல் சீராக இருக்கும். விவசாயிகள் தானிய உற்பத்திப்பொருள்களில் நல்ல லாபத்தைக் காண்பீர்கள்.
அரசியல்வா திகள் தங்கள் சிந்தனைப் போக்கில் மாற்றங்க ளைக் காண்பீர்கள். கலைத்துறையினருக்கு புதுப்புது ஒப்பந்தங்கள் கைகூடிவரும்.
பெண் கள் குடும்ப ரகசியங்களைக் காப்பாற்றுவீர் கள். மாணவர்களுக்கு நண்பர்களுடன் ஆக் சுபூர்வமான கலந்துரையாடல் மூலம் அறிவு பலம் கூடும்.
சந்திராஷ்டமம்-இல்லை.
5சிம்மம் (மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் முடிய)
பொருளாதார நிலைமை சீரடை யும். எடுத்த காரியங்கள் யாவும் நல்லபடியாக நிறைவேறும்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலகத் தில் மன உற்சாகத்துடன் பணிட ரிவீர்கள். வியாபாரிகள் கூட்டாளிகளின் ஒத் துழைப்பு இன்றி தனித்தே வியாபாரத்தில் ஈடு பட்டு வெற்றி பெறுவீர்கள். விவசாயிகளுக்கு உற்பத்தி நன்றாக இருக்கும்.
அரசியல்வாதிகள் நிலைமைகளுக்கேற்ப திட்டங்களைத் தீட்டுவீர்கள். சுலைத் துறையினர் நலிந்தோருக்கு உதவி செய்வீர்கள்.
பெண்கள் பெற்றோர்ச ளுக்கு ஆதரவாக இருப்பீர்கள். மாணவர்கள் உடல் ஆரோக்கியத்தில் சுவனம் செலுத்துவீர்கள்.
சந்திராஷ்டமம்-இல்லை.
6கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)
குழந்தைகள் வழியில் மகிழ்ச்சி யான செய்தி கிடைக்கும். குடும் பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். அரசு விஷயங்களிலும் எதிர் பார்த்த சலுகை கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்களின் கோரிக்கைகள் நிறைவே றும். வியாபாரிகள் கூட்டாளிகளின் ஏமாற்று வேலைகளைப் புரிந்துகொள்வீர்கள். விவசா யிகள் சக விவசாயிகளுக்கு உதவிகரமாக இருப்பீர்கள்.
அரசியல்வாதிகள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். பெண்கள் பெற்றோரின் உடல்நலனில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள், மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்- இல்லை.
7துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்
பண வரவு அதிகரிக்கும். பெரி யோர்களின் ஆலோசனைகளால் மாற்றம் உண்டாகும். தனித்திறமைகளை வெளிப்படுத் திப் பாராட்டுகளைப் பெறுவீர் .
உத்தியோகஸ்தர்கள் திட்டமிட்ட வேலை ளை குறித்த நேரத்தில் செய்து முடித்துவிடு ர்கள். வியாபாரிகளுக்கு கூட்டாளிகளிடமிருந்த மனக்கசப்பு நீங்கும். விவசாயிகள் பால் யாபாரத்தில்லாபம் அடைவீர்கள்.
அரசியல் எதிகளுக்கு அவப்பெயர்கள் நீங்கும். கலைத்துறையினர் எதிர்பார்த்த வளர்ச்சி அடைவீர்கள்.
பெண்களுக்கு கணவருடன் நெருக்கம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு படிப் ல் இருந்த குழப்பங்கள் குறையும்.
சந்திராஷ்டமம் -இல்லை.
8விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)
தொழிலில் புதிய அனுபவங்கள் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். பொருளாதாரம் மேம்பாடு அடையும்.
உத்தியோகஸ்தர்கள் புதிய அலுவலகப் பயிற்சிகளை கற்றுக்கொள்வீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கலில் லாபம் கிடைக்கும். விவசாயி கள் புதிய குத்தகைகளை நாடிப் பெறுவீர்கள்.
அரசியல்வாதிகளை கட்சி மேலிடம் பாராட் டும். கலைத்துறையினர் ரசிகர்களின் மனம் அறிந்து செயலாற்றுவீர்கள்.
பெண்கள் குழந் தைகளை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள். மாணவர்கள் ஆசிரியர்களின் சொல் கேட்டு நடப்பீர்கள்.
சந்திராஷ்டமம்-இல்லை.
9தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)
தொழிலில் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். சிக்கனமாக இருந்து சேமிப்புகளை உயர்த்திக் கொள்வீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் பயணங்களால் நன்மை அடைவீர்கள். வியாபாரிகள் அதிக லாபத்துக்கு ஆசைப்படாமல் விற்பனை செய்வீர்கள். விவசாயிகளுக்கு புதிய குத்தகை மூலம் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
அரசியல்வாதிகள் பொதுச்சேவையில் ஈடுபட்டு நலிந்த வர்களுக்கு உதவிசெய்வீர்கள். கலைத்துறையினருக்கு ரசிகர்களின் அன்பும் ஆதரவும் பெருகும்.
பெண்கள் உற்றார் உறவினர்களுடன் சுமுகமாகப் பழகுவீர்கள். மாணவர்களுக்கு விளை யாட்டுகளில் ஆர்வம் அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்-இல்லை.
10மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)
பழைய கடன்கள் வசூலாகும். குழந்தைகளை வெளியூருக்கு அனுப்பி படிக்க வைப்பீர்கள். உடலையும் மனதையும் சீராக வைத்துக் கொள்வீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக் கல் வாங்கல் சீராசு இருக்கும். விவசாயிகளுக்கு வருமானம் பல வகையிலும் வந்து சேரும்.
அரசியல்வாதிகள் கட்சியில் நிலவும் போட்டிசுளை சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். கலைத் துறையினர் உற்சாகத்துடன் பணியாற்றுவீர்கள்.
பெண்கள் மழலை பாக்கியத்தால் மகிழ்ச்சி அடைவீர்கள். மாணவர்கள் பேச்சுப்போட்டி யில் கலந்துகொள்வீர்கள்.
சந்திராஷ்டமம்-செப்டம்பர் 11.
11கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)
பெற்றோர் வழியில் மகிழ்ச்சி யான செய்தி கிடைக்கும். குடும் பத்தினரை அனுசரித்து நடந்து கொள்வீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்கள் ஆதரவுக்கரம் நீட்டுவார்கள். வியாபாரிகள் புதிய சந்தைகளை நாடிச்சென்று விற்பனையைப் பெருக்குவீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும்.
அரசியல்வாதிகள் கட்சித் தலை வரின் ஆதரவைப் பெற முயற்சி செய்வீர்கள். சுலைத்துறையினர் சக கலைஞர்களுக்கு சிறிய உதவிகளைச் செய்வீர்கள்.
பெண்கள் குடும்பத் தில் இருக்கும் பிரச்னைகளைத் தீர்ப்பீர்கள். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - செப்டம்பர் 12, 13.
12மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி தேடி வரும். பூர்விக சொத்துகளில் நல்ல தீர்வு உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் அலுவ லக வேலைகளைப் பதற்றப்ப டாமல் செய்து முடிப்பீர்கள்.
வியாபாரிகள் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வீர்கள். விவசாயிகள் பழைய குத்தகைப் பாக்கிகளைத் திருப்பிச் செலுத்துவீர்கள். அரசியல்வாதிகள் கட்சி மேலிடம் இட்ட பணிகளை உடனுக்குடன் செய்து முடிக்கப் பாடுபடுவீர்கள்.
கலைத் துறையினருக்கு பொருளாதாரம் மேன்மை யாக இருக்கும். பெண்களுக்கு ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மாணவர்கள் தேவை யான உடற்பயிற்சிகளைச் செய்வீர்கள்.
சந்திராஷ்டமம்-செப்டம்பர் 14, 15.
Summary
Dinamani Astrologer K.C.S. Iyer has accurately predicted the results for this week (September 11 - 17). Read and benefit.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



