எதிர்பாராத யோகமும் வெற்றியும்... இந்த வார ராசி பலன்கள் (செப். 25 - அக். 1)
எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்.. வார ராசி பலன்கள்

astro - file photo
தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார பலன்களை (செப். 25 - அக். 1) துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.
1மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)
திட்டமிட்ட காரியங்களில் படிப்படியான வெற்றிகளைக் காண்பீர்கள். வழக்கு விவகாரங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் அமையும். வியாபாரிகள் கொடுக்கல், வாங்கலில் லாபத்தைக் காண்பீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும்.
அரசியல்வாதிகள் எவரிடமும் வீண் விரோதத்தை வளர்த்துக்கொள்ள வேண்டாம். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும்.
பெண்கள் குடும்பத்தில் ஒற்றுமை காண்பீர்கள். மாணவர்கள் படிப்பில் முழு ஈடுபாட்டைக் காட்டுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
2ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)
மனதிலும் உடலிலும் உற்சாகத்துடன் செயலாற்றுவீர்கள். புதிய வண்டி வாகனங்களை வாங்குவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் போனஸ் பெறுவீர்கள். வியாபாரிகள் புதிய சந்தைகளில் பொருள்களை விற்பீர்கள்.
விவசாயிகள் புதிய விவசாய உபகரணங்களை வாங்கி, விளைச்சலைப் பெருக்குவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு தொண்டர்களின் ஆதரவுடன் எண்ணங்கள் ஈடேறும். கலைத்துறையினருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும்.
பெண்கள் கணவர் குடும்பத்தில் செல்வாக்கை உயர்த்திக் கொள்வீர்கள். மாணவர்கள் விளையாடும் நேரத்தில் எச்சரிக்கையுடன் இருப்பீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
3மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)
பொருளாதார வளம் பெருகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும்.
உத்தியோகஸ்தர்கள் வேலைகளை சரியாகச் செய்து முடிப்பீர்கள். வியாபாரிகள் வீண் விரயங்களைத் தவிர்ப்பீர்கள். விவசாயிகள் கையிருப்புப் பொருள்கள் மீது அக்கறை செலுத்தவும்.
அரசியல்வாதிகளைப் பொருத்தவரை எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களும் அவர்களின் ஆலோசனைகளைக் கேட்பார்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள்.
பெண்கள் வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்ப்பீர்கள். மாணவர்கள் நன்றாக முயன்று படித்து நல்ல மதிப்பெண்களை அள்ளுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
4கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)
எதிர்பாராத சில பயணங்களைச் செய்வீர்கள். மனதுக்குப் பிடித்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் ஆதரவுடன் சில முன்னேற்றங்களைக் காண்பீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் - வாங்கல் லாபகரமாகவே இருக்கும். விவசாயிகளுக்கு விவசாய மானியம் கைவந்து சேரும்.
அரசியல்வாதிகள் பொறுமையுடனும் பொறுப்புடனும் கட்சிப் பணியாற்றுவீர்கள். கலைத்துறையினர் தனித்துச் செயல்பட்டு துறையில் வளர்ச்சி அடைவீர்கள்.
பெண்கள் கணவரின் முழுமையான ஆதரவால் மகிழ்ச்சி அடைவீர்கள். மாணவர்களுக்கு பெற்றோரின் ஆதரவு கிடைக்கும்.
சந்திராஷ்டமம் - செப்டம்பர் 25.
5சிம்மம் (மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் முடிய)
பொருளாதார நிலை நன்றாக இருக்கும். வீட்டிலும் வெளியிலும் உங்கள் மதிப்பு, மரியாதை உயரும். புதிய சொத்துகளை வாங்குவீர்கள்.
உத்தியோகஸ்தர்களிடம் சக ஊழியர்கள் நட்புடன் பழகுவார்கள். வியாபாரிகள் கூட்டாளிகளிடம் பார்த்துப் பழகுவீர்கள். விவசாயிகள் கால்நடைகளாலும் வருமானம்கூடக் காண்பீர்கள்.
அரசியல்வாதிகள் முயற்சிக்குத் தகுந்த பலன்களைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் துறையில் படிப்படியான முன்னேற்றம் அடைவீர்கள்.
பெண்கள் கணவன் குடும்பத்தினரிடம் நன்மதிப்பு கூடக் காண்பீர்கள். மாணவர்கள் உடன்பிறந்தோரின் உதவிகூடக் காண்பீர்கள்.
சந்திராஷ்டமம் - செப்டம்பர் 26, 27.
6கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)
எடுத்த காரியங்கள் வெற்றியை ஈட்டித் தரும். பழைய நண்பர்களின் சந்திப்பு உத்வேகத்தைக் கொடுக்கும். இறைவழிபாடு மன தெளிவைக் கொடுக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். வியாபாரிகள் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். விவசாயிகளுக்கு பயிர் உற்பத்தி நன்றாகவே இருக்கும்.
அரசியல்வாதிகள் உடல்சோர்வைப் பொருட்படுத்தாமல் கட்சிப் பணியாற்றுவீர்கள். கலைத்துறையினர் ரசிகர்களின் ஆசைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.
பெண்கள் குழந்தைகளால் சந்தோஷம் அடைவீர்கள். மாணவர்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
சந்திராஷ்டமம் - செப்டம்பர் 28, 29, 30.
7துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்
மறைமுக எதிர்ப்புகள் விலகிவிடும். வருமானம் அதிகரிக்கும். ஆன்மிகத்தில் ஈடுபட்டு புதிய பலம் பெறுவீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு வருமானம் உயர்வாகவே தொடரும். வியாபாரிகளுக்கு பழைய பாக்கிகள் வசூலாகும். விவசாயிகள் தானிய விற்பனையையும் நன்றாகவே செய்து முடிப்பீர்கள்.
அரசியல்வாதிகள் புதிய நற்பெயரும் புகழும் அடைவீர்கள். கலைத்துறையினர் துறை சார்ந்த முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.
பெண்கள் சேமிப்பு விஷயங்களில் கவனம் செலுத்துவீர்கள். மாணவர்கள் பாடங்களை உடனுக்குடன் படித்து முன்னேற்றமடைவீர்கள்.
சந்திராஷ்டமம் - அக்டோபர் 1.
8விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)
பணவரவில் இருந்த நெருக்கடிகள் குறையும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உடன் பிறந்தோரின் ஒத்துழைப்பு மேம்படும். மேலதிகாரியிடம் ஒற்றுமையாக நடந்து கொள்வீர்கள்.
வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் திருப்திகரமாக முடியும். விவசாயிகள் கால்நடையில் வருமானம் உயரக் காண்பீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு சமுதாயத்தில் மதிப்பு, மரியாதை உயரும். கலைத்துறையினரை அனைவரும் பாராட்டுவார்கள்.
பெண்கள் ஆடம்பரப் பொருள்களை வாங்க விரும்புவீர்கள். மாணவர்கள் தேவையான உடற்பயிற்சிகளைச் செய்வீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
9தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)
குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும். கடன்களில் இருந்து மீண்டு வந்துவிடுவீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.
நேர்மறை எண்ணங்களால் வேலைகளைச் செய்து வெற்றி பெறுவீர்கள். வியாபாரிகளின் நிர்வாகத் திறமை அதிகரிக்கும். விவசாயிகள் நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள்.
அரசியல்வாதிகள் கட்சித் தலைமையினால் பாராட்டப்படுவீர்கள். கலைத்துறையினருக்கு ஒப்பந்தங்களால் நல்ல வருமானம் கிடைக்கும்.
பெண்கள் ஆன்மிகத்திலும் தர்மகாரியத்திலும் ஈடுபடுவீர்கள். மாணவர்கள் வெளி விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
10மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)
பொருளாதாரத்தில் இருந்த நெருக்கடிகள் குறையும். உற்றார் உறவினர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும்.
உத்தியோகஸ்தர்கள் இடையூறுகளுக்கிடையே வேலைகளை முடிக்க வேண்டி வரும். வியாபாரிகள் சிறிது செலவு செய்து கடையை விரிவுபடுத்துவீர்கள். விவசாயிகள் அமோகமான விளைச்சலைக் காண்பீர்கள்.
அரசியல்வாதிகளின் முயற்சிகள் அனைத்தும் வெற்றிபெறும். கலைத்துறையினர் தீவிர ஆலோசனைகளுக்குப் பிறகு முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.
பெண்கள் மனதை ஆன்மிகத்தில் செலுத்துவீர்கள். மாணவர்கள் நண்பரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்.
சந்திராஷ்டமம் - இல்லை.
11கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)
பணவரவு திருப்திகரமாக இருக்கும். வழக்குகள் சாதகமாக முடிவடையும்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் தனித்திறமைகளை வெளிப்படுத்துவார்கள்.
வியாபாரிகள் புதிய பொருள்களை வாங்கி விற்பனை செய்வீர்கள். விவசாயிகள் புதிய முதலீட்டில் புதிய நிலங்களை வாங்குவீர்கள்.
அரசியல்வாதிகள் கட்சிப் பணிகளை தொய்வில்லாமல் செய்து, கட்சி மேலிடத்திடம் நற்பெயர் வாங்குவீர்கள். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் லாபகரமாக இருக்கும்.
பெண்களை கணவரை மதித்து நடப்பார். மாணவர்கள் கவனம் சிதறாமல் படிக்க யோகாசனப் பயிற்சிகளை மேற்கொள்வீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
12மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
திட்டமிட்ட செயல்கள் திட்டமிட்டபடியே நிறைவேறும். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து, கெளரவம் உயரும். உடல் நலம் மேம்பட யோகா, பிராணாயாமம் போன்றவற்றைச் செய்வீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு வேலைச்சுமை குறையும். வியாபாரிகள் எவருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். விவசாயிகளுக்கு பால் உற்பத்தி நன்றாக இருக்கும்.
அரசியல்வாதிகள் தொண்டர்கள் ஆதரவை தக்கவைத்துக் கொள்வார்கள். கலைத்துறையினர் கலைப் பயணங்களைச் செய்ய நேரிடும்.
பெண்கள் விட்டுக் கொடுத்து பிரச்னைகளைத் தவிர்ப்பீர்கள். மாணவர்கள் விளையாட்டில் புதிய யுக்திகளை கையாளுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
Summary
Dinamani Astrologer K.C.S. Iyer has accurately predicted the results for this week (September 25 - October 1). Read and benefit.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




