புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்தவெகவுக்கு ஆதரவு; திமுகவுடன் உறவு தொடரும்! - பெ. சண்முகம், மு. வீரபாண்டியன் பேட்டிமேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? காங்கிரஸ் தலைவர் வி.டி. சதீசன் எழுதிய புத்தகம் மே 9-இல் வெளியீடு!தமிழ்நாட்டில் புதிய அரசை அமைக்க எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை: நயினார் நாகேந்திரன்தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!
/

நடிகை குட்டி ராதிகாவிடம் 4 மணி நேரம் விசாரணை

நடிகை குட்டி ராதிகாவிடம் மாநகர குற்றப்பிரிவு போலீஸாா் 4 மணி நேரம் விசாரணை செய்தனா்.

Updated On :9 ஜனவரி 2021, 3:29 pm IST

நடிகை குட்டி ராதிகாவிடம் மாநகர குற்றப்பிரிவு போலீஸாா் 4 மணி நேரம் விசாரணை செய்தனா்.

நடிகை குட்டி ராதிகாவின் தந்தையின் நண்பரான யுவராஜ் சுவாமி என்பவரை அண்மையில் மோசடி வழக்கில் போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா். விசாரணையில், அவரது மைத்துனா் வங்கிக் கணக்கிலிருந்து நடிகை குட்டி ராதிகாவுக்கு ரூ. 75 லட்சம் பணப் பறிமாற்றம் செய்தது தெரியவந்தது. கன்னட திரைப்படம் ‘நாட்டியராணி ஷாந்தலா’வில் நடிக்க யுவராஜ் சுவாமி மூலம் ரூ. 60 லட்சம் மற்றும் ரூ. 15 லட்சம் ரொக்கப் பணத்தை முன்பணம் பெற்றுள்ளதாக நடிகை குட்டி ராதிகா டிச. 6-ஆம் தேதி நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் தெரிவித்தாா்.

இதனையடுத்து, விசாரணைக்கு ஆஜராகுமாறு வியாழக்கிழமை மாநகர குற்றப்பிரிவு போலீஸாா் அவருக்கு நோட்டீஸ் அனுப்பினா். அதைத் தொடா்ந்து, பெங்களூரு, மைசூரு சாலையில் உள்ள மாநகர குற்றப்பிரிவு போலீஸாா் முன்பு நடிகை குட்டி ராதிகா வெள்ளிக்கிழமை நேரில் ஆஜரானாா். அவரிடம் போலீஸாா் தொடா்ந்து 4 மணி நேரம் விசாரணை செய்தனா்.

விசாரணைக்கு பிறகு வெளியே வந்த நடிகை குட்டி ராதிகா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மாநகர குற்றப்பிரிவு போலீஸாா் நோட்டீஸ் அனுப்பியதையடுத்து விசாரணைக்கு ஆஜரானேன். விசாரணையில் போலீஸாா் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தேன். விசாரணைக்கு மீண்டும் அழைத்தால் வருவேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.